பொதுத்தமிழ் - மணிமேகலை
01. மணிமேகலையை இயற்றியவர் - கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
02. மணிமேகலையின் தோழியாய் அமைந்து
நண்பர்களுக்கெல்லாம் ஒரு இலக்கணமாக அமைந்தவள் - சுதமதி
03. மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் அன்னமிட்டவர் - ஆதிரை
04. மணிமேகலையில் உள்ள காதைகள் - 30
05. மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது - பசிப்பிணி நீக்கம்
06. மணிமேகலையின் வேறு பெயர் - மணிமேகலைத் துறவு
07. மணிமேகலை பிறந்த ஊர் - பூம்புகார்
08. மணிமேகலை மறைந்த ஊர் - காஞ்சிபுரம்
09. அமுதசுரபி முற்பிறவியில் யாரிடம் இருந்தது - ஆபுத்திரன்
10. மணிமேகலை நூல் முழுவதும் எந்தப் பாவினால் ஆனது - ஆசிரியப்பா
11. மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்தி யாராக உருமாறினாள் - காயசண்டிகை
12. யாரின் உதவியால் மணிமேகலை அமுதசுரபியைப் பெறுகிறாள் - தீவதிலகை
13. சீத்தலைச் சாத்தனாரின் காலம் - கி.பி.2ஆம் நூற்றாண்டு
14. மணிமேகலை எந்த தீவில் அமுதசுரபியைக் கண்டெடுத்தாள் - மணிபல்லவம்
15. தமிழின் முதல் சமய(பௌத்த) காப்பியம் - மணிமேகலை
16. காயசண்டிகையின் கணவர் பெயர் - காஞ்சனன்
17. ஆபுத்திரன் வரலாற்றை மணிமேகலைக்குச் சொன்னவர் யார்- அறவண அடிகள்
18. மணிமேகலை காப்பியம் வலியுறுத்துவது எது - துறவறம்
19. மணிமேகலை எக்கதைக்களத்தை ஒத்து இருப்பதால் இரட்டைக் காப்பியம் என்றழைக்கப்படுகிறது - சிலப்பதிகாரம்
20. மணிமேகலையை பின்தொடர்ந்த அரச குமாரன் - உதயகுமாரன்
No comments:
Post a Comment