கருப்புப் பணம் என்றால் என்ன? வெளிநாட்டு வங்கிகளில் ஏன் போடுகிறார்கள்?
மக்களிடம் இருந்து வரிப்பணம் வாங்கி, அந்த வரிப்பணத்தில் இயங்குகிறது அரசு. வெற்றிகரமாக அரசு இயக்க வரிப்பணம் அவசியம். ஆனால் வரியே கட்டாத பணத்தை, கருப்பு பணம் என்று சொல்கிறோம். எந்தெந்த தொழில் செய்ய அனுமதி இல்லையோ, அதாவது தடை செய்யப்பட்ட தொழில் செய்து சம்பாதித்த பணமும் கருப்பு பணமாகிறது.
வரி கட்டாமலும், முறைகேடாகவும் வருவதுதான் கருப்பு பணம். அந்தப் பணத்தை இந்தியாவில் வைத்திருந்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால், நிறைய பணம் வைத்துள்ளவர்கள், வரி கட்ட விருப்பம் இல்லாதவர்கள் இந்தப் பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் வைக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் ஏன் வைக்கிறார்கள் என்றால், அந்நாட்டுக்கு என்று ஒரு கொள்கை உள்ளது. அங்கு யார் எல்லாம் பணம் போடுகிறார்களோ, அவர்களின் பெயர்களை வெளியிடமாட்டார்கள். பணம் போட்டவர்களின் பெயர்களை ரகசியமாகவே வைத்திருப்பார்கள். எந்தவித பிரச்சனையும் இல்லாத நாடு சுவிட்சர்லாந்து என்ற நம்பிக்கையும் உள்ளது.
சுவிட்சர்லாந்து ஒரு கட்டத்தில் யாரெல்லாம் எங்களிடம் பணம் போட்டார்கள் என்ற ரகசியத்தை சொல்ல தயார் என்று தெரிவித்தது. உடனே, சுவிட்சர்லாந்தில் பணம் போடாதீர்கள், அவர்கள் உங்கள் பெயர்களை வெளியிட்டு விடுவார்கள்.
எங்களது நாட்டில் உள்ள வங்கிகளில் பணத்தை போடுஙகள். நாங்கள் பணம் போட்டவர்களின் பெயர்களை வெளியிட மாட்டோம் என்று 100 சதவிகித உத்தரவாதம் தருகிறோம் என்று சிங்கப்பூர் தெரிவித்தது.
இதனால் பயந்த சுவிட்சர்லாந்து, தங்கள் வங்கியில் பணம் போட்டவர்களின் பெயரை வெளியிட மறுத்தது. தங்களிடம் வரும் வருமானம் சிங்கப்பூருக்கு போய்விடும், தங்களது பொருளாதாரமே வங்கியைத்தான் நம்பியிருக்கிறது. அதனால் எப்படி பெயரை வெளியிடுவது என்று சந்தேகம் எழுந்து பெயரை வெளியிட மறுத்தது. இதனால் தான் காங்கிரஸ் அரசு அமைந்தாலும், பாஜக அரசு அமைந்தாலும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பணம் போட்டுள்ளவர்களின் பட்டியலை வாங்குவதற்கு சிரதமாக இருக்கிறது.