உப்பின் மகத்துவம்:-
* உப்பு என்பது ருசிக்காக மட்டுமல்ல, மருந்தாகவும் பயனளிக்கும் வலிமை கொண்டது. அதனால் உப்பு நமது உடலில் இருப்பது அவசியம். அதேநேரத்தில் அதிகமான உப்பு ஆளையே தின்று விடும்.
* ஐஸ் கட்டிகளை கரையவைக்கும் ஆற்றலும் உப்புக்கு உண்டு. பல் வலிக்கு உகந்தது உப்பு. அதனால்தான் இப்போது டூத் பேஸ்டிலும் உப்பு வந்து விட்டது.
* வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பை சேர்த்து வாயை கொப்பளித்தால் பற்சிதைவு நீங்கி விடும். மிதமான அளவு உப்பு உயர் இரத்த அழுத்தத்தை போக்கும்.
* உப்பு வாழ்க்கைக்கு மட்டுமல்ல உடலின் அமைப்புக்கும் அதுவே காரணமாக இருக்கிறது. உப்பு இல்லாமல் யாராலும் ஒரு நிமிடம் கூட உயிர்வாழ முடியாது. உப்பின் மீது நமக்கு இருக்கும் மோகம் மூளை அணுக்களையும் மூளையின் தொடர்புகளையும் மரபணுக்களையும் தூண்டி விடுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள் .
* சிலர் போதைக்கு அல்லது சிகரெட்டிற்கு அடிமையாக இருப்பார்கள். அந்த போதை அல்லது புகை கிடைக்காவிட்டால் அவற்றின்மேல் உள்ள மோகம் அதிகரிக்கும். அப்போது அவர்களது மூளை பல்வேறு வழிகளில் சிந்திக்கும். அதைப்போலவே உப்பை சாப்பிட வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டால் அது மூளையின் நரம்புகளை தூண்டிவிடும் என மெல்போர்ன் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் டெரிக் டெண்டன் கூறுகிறார்.
* எலிகளை வைத்து நடத்திய சோதனைக்கு பிறகு இந்த முடிவு தெரியவந்தது. ஆனாலும் அளவான உப்பே வளமான உடல் நலத்திற்கு நல்லது என்று சராசரியான மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள். தோலை பதனிடுவதற்கு மட்டுமல்ல நமது உடலையும் பத்திரமாக வைத்திருக்க உப்பு அவசியம். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல அளவுக்கு அதிகமானால் உப்பு நம்மை சாப்பிட்டு விடும். எனவே உப்பை அளவோடு பயன்படுத்துவதே சாலச்சிறந்தது.
* உப்பு என்பது ருசிக்காக மட்டுமல்ல, மருந்தாகவும் பயனளிக்கும் வலிமை கொண்டது. அதனால் உப்பு நமது உடலில் இருப்பது அவசியம். அதேநேரத்தில் அதிகமான உப்பு ஆளையே தின்று விடும்.
* ஐஸ் கட்டிகளை கரையவைக்கும் ஆற்றலும் உப்புக்கு உண்டு. பல் வலிக்கு உகந்தது உப்பு. அதனால்தான் இப்போது டூத் பேஸ்டிலும் உப்பு வந்து விட்டது.
* வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பை சேர்த்து வாயை கொப்பளித்தால் பற்சிதைவு நீங்கி விடும். மிதமான அளவு உப்பு உயர் இரத்த அழுத்தத்தை போக்கும்.
* உப்பு வாழ்க்கைக்கு மட்டுமல்ல உடலின் அமைப்புக்கும் அதுவே காரணமாக இருக்கிறது. உப்பு இல்லாமல் யாராலும் ஒரு நிமிடம் கூட உயிர்வாழ முடியாது. உப்பின் மீது நமக்கு இருக்கும் மோகம் மூளை அணுக்களையும் மூளையின் தொடர்புகளையும் மரபணுக்களையும் தூண்டி விடுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்
* சிலர் போதைக்கு அல்லது சிகரெட்டிற்கு அடிமையாக இருப்பார்கள். அந்த போதை அல்லது புகை கிடைக்காவிட்டால் அவற்றின்மேல் உள்ள மோகம் அதிகரிக்கும். அப்போது அவர்களது மூளை பல்வேறு வழிகளில் சிந்திக்கும். அதைப்போலவே உப்பை சாப்பிட வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டால் அது மூளையின் நரம்புகளை தூண்டிவிடும் என மெல்போர்ன் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் டெரிக் டெண்டன் கூறுகிறார்.
* எலிகளை வைத்து நடத்திய சோதனைக்கு பிறகு இந்த முடிவு தெரியவந்தது. ஆனாலும் அளவான உப்பே வளமான உடல் நலத்திற்கு நல்லது என்று சராசரியான மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள். தோலை பதனிடுவதற்கு மட்டுமல்ல நமது உடலையும் பத்திரமாக வைத்திருக்க உப்பு அவசியம். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல அளவுக்கு அதிகமானால் உப்பு நம்மை சாப்பிட்டு விடும். எனவே உப்பை அளவோடு பயன்படுத்துவதே சாலச்சிறந்தது.
No comments:
Post a Comment