காசு.. பணம்.. துட்டு.. Money.. Money:
******************************
மொபைல்ஃபோனில் எஸ்.எம்.எஸ்., மற்றும் இ-மெயிலில் லாட்டரி பரிசு விழுந்ததாக வரும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்' என ரிஸர்வ வங்கி அதிகாரி கேட்டு கொண்டுள்ளார்.
ரிஸர்வ் வங்கி முதன்மை அலுவலர் கூறியதாவது: சில தனிநபர்கள் பொய்யான அறிவிப்புகளை மெபைல்ஃபோனில் எஸ்.எம்.எஸ்., மூலமும் மற்றும் ஈ.மெயில் அனுப்பி உங்களுக்கு லாட்டரி பரிசு விழுந்ததாக தகவல் அனுப்பி பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். இதில் வெளிநாடுகளில் இருந்து அன்னிய செலவாணிகள் பரிசாக அனுப்புதல், வேலைவாய்ப்பு, படிப்பிற்கான ஸ்காலர்ஷிப் போன்றவற்றை தருவதாக தெரிவித்து பொதுமக்களை ஏமாற்றி வருவது தொடர்பாக ரிஸர்வ் வங்கிக்கு அதிகபடியான புகார்கள் வந்துள்ளன.
மோசடி பேர்வழிகள் தங்களுக்கு ரிஸர்வ் வங்கி அனுமதி அளித்ததாக ரிஸர்வ் வங்கி உயர் அதிகாரியின் பேரில் பொய்யாக சான்றிதழ் செய்து ஏமாற்றி வருகின்றனர். இவ்வாறு ஏமாறுபவர்களிடமிருந்து பல லட்சக்கணக்கான பணத்தை சுருட்டி வருகின்றனர். குறிப்பாக பரிசு விழுந்ததாக கூறி ஏமாற்றுவதுடன் மேலும் பரிசுக்கான பணத்தை பெற டெபாசிட் மற்றும் வரி கட்ட வேண்டும் என கூறி பல்வேறு வங்கி கிளைகளில் தங்களின் பெயரிலோ அல்லது தனிநிறுவனங்களின் பெயரிலோ கணக்குகளை திறந்து ஏமாற்றி வருகின்றனர்.
இவ்வாறு ஏமாற்றுபவர்கள் மீது இந்திய குடிமக்கள் அன்னிய செலாவாணி சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும். ஏமாற்றப்பட்டவர்கள் போலீஸ் மற்றும் சைபர் கிரைம் பிரிவு ஆகியவற்றில் உடனடியாக புகார் செய்ய வேண்டும். இது பற்றிய மேலும் தகவல்களை ரிசர்வ் வங்கி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இது மாதிரியான வரும் ஏமாற்று அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment