Saturday, May 3, 2014

தலை முடி வளர...

தலை முடி வளர.....

முடி வளர, முடி கொட்டாமலிருக்க, பொடுகு நீங்க, நரை முடி நீங்க, பேன் தொல்லை நீங்க உதவும் குறிப்புகள்!

முடி வளர

தலை முடி நன்றாக வளர நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இது முடி நன்றாக வளர உதவுவதோடு, மயிர்க் கால்களையும் நன்றாக வலுவாக்கும்.

தலை முடி வளர சடாமஞ்சளை நல்லெண்ணெயில் காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்கு குளித்து வந்தால் தலை முடி நன்றாக அடர்த்தியாகவும் நீண்டும் வளரும்.

முடி வளர மருதாணி இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தேய்த்து வரலாம். முடி நன்றாக செழித்து வளர உதவும்.

காரட் – எலுமிச்சம் பழ சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வருவதும் முடி வளர உதவும்.

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி தலையில் தடவ முடி நன்கு வளரும்.

தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் முடி வளர:

~ மாதுளம் பழ சாறை தடவ முடி வளரும்.

~ ஆற்றுத் தும்மட்டியை நறுக்கி தேய்த்து வரலாம்.
முடி கொட்டாமலிருக்க

முடிகொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும் புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப் பூ ஆகியவற்றைப் போட்டு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சீயக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது.

வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பசை போல் அரைத்து ஃபிரிட்ஜில் வைத்து கொள்ளுங்கள் தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊற வைத்து பின் தலைக்கு குளியுங்கள். தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் நிச்சயமாக முடி உதிர்வது நின்றுவிடும்.

முடி உதிர்வது நிற்க கோபுரம் தாங்கி இலை சாறு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி தலை முழுகினால் முடி உதிர்வது நின்று விடும்.

முடி உதிர்வதை தடுக்க தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் வேர்க்கால் பலவீனத்தை இது போக்கும்.
தலை முடி பளபளப்பாக

தேநீரில் வடிகட்டிய பின் மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாரை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

எண்ணெய்ப் பசை நீங்க

கூந்தலில் எண்ணெய்ப் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
நரை முடி நீங்க

நரை முடி வருவதை தவிர்க்க தேங்காய் எண்ணை ஒரு லிட்டர், நல்லெண்ணை ஒரு லிட்டர் எடுத்து அதனுடன் நெல்லிக்காய் சாறு அரை லிட்டர் இந்த மூன்றையும் சேர்த்து நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி வாரத்தில் இருமுறை தலையில் தேய்த்து குளித்து வர இள நரை வருவதை தவிர்க்கலாம்.

செம்பட்டை முடி கருப்பாக மாற மரிக்கொழுந்து இலையையும், நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து தலைக்கு தடவி வந்தால் சில நாட்களில் செம்பட்டை முடி கருப்பாக மாறும்.

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இள நரை
பேன் தொல்லை நீங்க

பேன் தொல்லை இருந்தால் சீத்தாப்பழக் கொட்டையை இரண்டு நாட்கள் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் கலந்து தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பேன் தொல்லை நீங்கும்.

மலை வேம்பு இலையை அரைத்து தலையில் பூசிக் குளித்தால் பேன் தொல்லை ஒழியும்.

சீலை பேன் ஒழிய நாய் துளசி இலை கதிர்களுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்க சீலை பேன் ஒழியும்.

அரளிப்பூ தலையில் வைத்துக் கொண்டால் பேன் தொல்லை நீங்கும்.

துளசி இலையை நன்றாக மையாக அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை கழுவினால் பேன் செத்து உதிர்ந்து விடும் தலைமுடியும் நன்றாக வளரும்.
பொடுகு நீங்க

பொடுகு தொல்லை நீங்க100 கிராம் தேங்காய் எண்ணெயில் உப்பு கலக்காத காய்ந்த வேப்பம்பூ 50 கிராம் போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை தீரும்.

பொடுகு நீங்க பொடுதலைக்கீரை, முருங்கைக்கீரை, பாலக்கீரை இந்த மூன்றையும் அரைத்து, பின்னர் சோயா பவுடர், நன்னாரி பவுடர், நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றுடன் கலக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு, தேவைக்கேற்ப நீர் கலந்து பேஸ்ட் போல செய்து தலையில் பேக் போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு நீங்கி விடும்.
.
முடி கொட்ட காரணங்கள்

பரம்பரை காரணங்கள்

ஹார்மோன் குறைபாடு

மன இறுக்கம்

சத்து குறைவான உணவுப் பழக்கம்

வைட்டமின் A சத்து முடி வளர, துத்தநாகம் அடர்த்தியாஉ முடி வளர, வைட்டமின் E சத்து முடி வலுப் பெறவும், வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருக்கவும்

காற்று மாசுபாடு – தூசு, வேதிப் பொருட்கள் போன்றவை

கூரான முனை கொண்ட சீப்பு உபயோகிப்பது

முடிக்கென்று செய்து கொள்ளும் கலரிங், ஸ்ட்ரைனிங் போன்றவை. கண்ட கண்ட கெமிக்கல் மற்றும் ஷாம்பூ போன்றவை

முடியைப் பராமரிக்க நேரம் ஒதுக்காதது

முடிந்தால் இரு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள்.

முடி வளர நல்ல ரத்த ஓட்டம் தேவை. எனவே உடற்பயிற்சி செய்யுங்கள். சிரசாசனம் போன்ற தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் ஆசனங்கள் செய்யுங்கள்.

ஹெல்மெட்டை தயவு செய்து தவிர்க்காதீர்கள்! உங்கள் உயிர் காக்கும் தோழன்!

No comments:

Post a Comment