Thursday, July 10, 2014

மைக்ரோவேவ் அடுப்பில் செய்யக் கூடாதவை:


மைக்ரோவேவ் அடுப்பில் செய்யக் கூடாதவை:

மைக்ரோவேவ் அடுப்பில் உணவு சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது.

குறுகிய வாயுள்ள பாத்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது

முட்டையை ஓட்டுடன் வைக்கக்கூடாது.

வறுவல் செய்யும்போது உப்பு போடக்கூடாது, ஏனெனில் அப்படிச் சமைத்தால் உப்பு தீய்ந்து அதிலிருக்கும் ஐயோடின் சிதைந்து போய்விடும். எனவே, வறுத்த பின்பு உப்பு சேர்க்க வேண்டும்.

பிளாஸ்டிக் மற்றும் காகிதப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் அவை உருகி, எரிந்து போய்விடும்

தண்ணீரைச் சுட வைக்க மைக்ரோவேவ் அடுப்பைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இதன் நுண் கதிர்களால் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டுத்தான் தண்ணீர் சூடாகும். அதனால் நீராவி வெளியேறாது. தண்ணீர் அதன் கொதி நிலையான 100 டிகிரி செல்ஸியஸ் அளவையும் தாண்டி சூடாகும். ஆனால், தண்ணீர் கொதிப்பில் சலனம் எதுவும் இருக்காது. இது தெரியாமல் அடுப்பை அணைத்ததும் உள்ளிருந்து நீரை அஜாக்கிரதையாக எடுத்தால் தப்பித் தவறி தண்ணீர் உடம்பில் பட்டுத் தீக்காயம் ஏற்படும்.


துணிவான நெஞ்சம் போர்க்களத்தில் பாதி வெற்றிக்கு ஒப்பானது

வெளுத்ததெல்லாம் பால் அல்ல.அதுபோல் கறுத்ததெல்லாம் தண்ணீரும் அல்ல.

உன் தகுதி பிறருக்கு தெரிய வேண்டுமானால் பிறர் தகுதியை நீ அறிந்துகொள்

தாய்க்காக மனைவியை வெறுப்பவன் பழைய மிருகம்,
மனைவிக்காக தாயை வெறுப்பவன் புதிய மிருகம்  
...
எழும்போது தாங்க வருகின்றவனேல்லாம்
விழும்போது தூக்க வருவதில்லை 
....
மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
சண்டைகளும் அன்பை வெளிப்படுத்துவதற்கான வழி என்று!

துன்பம் வரும் போது
விலக நினைக்கும் உறவை
விட..துன்பத்தில் நம்முடன்
இணைய நினைக்கும் உறவு
நிலையானது......!!!!
   நீயும் நானும் Tom & Jerry போல எவ்வளவு தான் சண்டை போட்டாலும் நீ இல்லாம நா இல்ல...! நா இல்லாம நீ இல்ல...!


காதல் வந்தாலே கண்ணீரில் தான் வாழ்க்கை...

பொய்யாய் பழகுவதை காட்டிலும் நேர்மையாய் விலகுவதே சிறந்தது!!!

எல்லாரிடமும் அன்பாக இரு
ஆனால்....

யாரையும் நம்பி விடாதே
உயிரிலும் மேலாக நேசித்த உறவு
கூட உன்னை விட்டு காரணம்
இல்லாமல் பிரிந்து விடும்.....!!!

மனைவியிடம் , எதற்கெடுத்தாலும் எடுத்தெறிந்து பேசாதிர்கள் ,,

பின் அவர்கள் எதையாவது எடுத்து, எறிந்து பேசினால் தாங்க முடியாது .



வறட்டுத்தனமாக வாதிட்டு, முரட்டுத்தனமாக
எதிர்த்துச் சண்டை போட்டு சாதிக்க முடியாததை
எல்லாம் ,அமைதியாகப் பேசுவதன் மூலம் ,
அனுசரணையாக நடந்து கொள்வதன் மூலம்
சாதித்துக் காட்ட முடியும் ....     

இழந்த இடத்தை மீண்டும் பிடித்துக்
கொள்ளலாம் !!!
ஆனால் இழந்த
காலத்தை ஒருபோதும் மீட்டுக்
கொண்டு வர முடியாது!!!....ஆதலால்
காலத்தைக் கடத்தாது காலத்தால்
அனைத்தையும்
செய்து முடியுங்கள்!!!!.

       நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு
நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.

- அன்னை தெரசா ...

 நேசிக்கும் உறவுகள்
பிரிந்து சென்றாலும்,.

நேசித்த
நினைவுகள் என்றும்
நிலைத்து இருக்கும்...!!!

வாழ்க்கையில் சந்தோசம் வேண்டுமென்றால்
உன்னை நேசி......!!!

ஆனால்

சந்தோசமே வாழ்க்கையாக வேண்டுமென்றால் உன்னை
நேசிப்பவரை உண்மையாக நேசி..!!!

அவரவர் பெறும் அனுபவங்களே
காலம் அவர்களுக்கு கொடுக்கும்
மிகப் பெரும் பரிசாகும்.

நாம் ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பு
எப்போது குறைகிறதோ
அப்போது அவர் விடும் சிறு பிழைகள் கூட
பெரிய குற்றங்களாகவே தெரியும்..

நாம் ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பு
எப்போது அதிகரிக்கின்றதோ -
அப்போது அவர் விடும் பெரிய பிழைகள் கூட
சிறிய விடயங்களாகவே தெரியும்..

வெளிப்படையாக
பாசம் வைப்பார் அம்மா
வெளியே தெரியாமல்
நேசம் வைத்தார்
அப்பா…

இன்பத்தை பகிர்ந்துக் கொள்பவர்களுக்கு
இதயத்தில் இடம்கொடு...!
துன்பத்தை பகிர்ந்துக் கொள்பவர்களுக்கு
இதயத்தையே கொடு...!

ஒரு நாள் ஆத்திரம்.. பல நாள் துக்கத்தை தரும்......


நூல்களைக் கற்கலாம். சொற்பொழிவுகளைக் கேட்கலாம். பல மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஆனாலும் அனுபவமே சரியான ஆசான். அதுவே உண்மையான கல்வி. - சுவாமி விவேகானந்தர்....

மனிதன் சிரிக்கின்ற நிமிடங்கள்
பொய்யாக இருக்கலாம்,
ஆனால் அவன் அழுகின்ற நொடிகள்
நிஜமானவை..!!!


பறவைகள் கூண்டுகளில் இருந்து தப்பிக்க நினைப்பதும்,மீன்கள் மீன் தொட்டியில் இருந்து துள்ளி குதிப்பதும்,அடுத்தவர் உழைப்பில் வாழப் பிடிக்காததால் தான்.

உன் அண்டை வீட்டுக்காரனை நேசி....
ஆனால் உன் வீட்டு வேலியை எடுத்து விடாதே!

தெரிஞ்சுக்கோங்க..

பஸ்களில் பயணம் செய்யும் போது சிலர் வாந்தி எடுப்பர். இதற்குக் காரணம் நம் காதுகளின் உட்பகுதியில் மூன்று அரை வட்ட வடிவக் குழாய்கள் உள்ளன. இவை மூளையுடன் ஒரு நரம்பின் மூலம் நேரடித் தொடர்பு கொண்டவை. இந்தக் குழாய்கள் சிலருக்கு மிகவும் நுண்ணியதாக அமைந்து விடுவதுண்டு. தொடர்ச்சியான பயணத்தில் இக்குழாய்கள் மிக அதிகமாக அதிர்வடைகின்றன. இதனால், அருகில் உள்ள வேகஸ் நரம்பும் அதிர்வடைகிறது. இதுதான் வாந்தி எடுக்கும் உணர்ச்சியை ஏற்படுத்துகிறது.


சராசரியாக ஒரு மனிதன் 70 ஆண்டுகள் வாழ்ந்தான் என்றால், தூக்கத்தில் 28 ஆண்டுகளும், படிப்பில் 10 ஆண்டுகளும், பொழுதுபோக்கில் எட்டு ஆண்டுகளும், ஓய்வு சுகமின்மை ஆகியவற்றில் ஆறு ஆண்டுகளும், பயணத்தில் ஐந்து ஆண்டுகளும், சாப்பிடுவதில் நான்கு ஆண்டுகளும், உடை அணிவதிலும், வெளியில் செல்வதில் மூன்று ஆண்டு களும், வேலை செய்ய ஆறு ஆண்டுகளும் செலவிடப் படுகின்றன.

பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ?

பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ?

"பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?' காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், "பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்...' என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்!' என்கிறார் பிரபல மனோ தத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், "வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!' என்கிறார். இதோ அந்த விஷயங்கள்:

1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.

2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?

3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.

4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.

5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.

7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது

9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்

11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்

12. டிரைவிங்: கணவன் கார் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.

13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.

17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண் களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.

18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.

19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.

20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.

21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.

22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ÷ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.

25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக் கிறது, “டிவி’யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்
அப்பா: ‘‘என்னடா? பேப்பர் ரிசல்ட்டுல உன் நம்பர் இல்லே..?’’ என்று அதிர்ச்சியாகக் கேட்கிறார் .
மகன்: ‘‘நமக்கு இந்த விளம்பரமெல்லாம் பிடிக்காதுப்பா…’’
.........................................................................................................................................
கிளாஸ் ரூம்ல சர்தார்ஜியை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கலாம்?
டீச்சர் போர்ட்ல பாடம் எழுதறப்ப, தானும் நோட்டுல எழுதி, டீச்சர் அழிக்கிறப்ப, தானும் அழிச்சா, சந்தேகமே வேண்டாம்… அவர்தான் சர்தார்ஜி!
...........................................................................................................................................
பரிட்சை எழுதிய மாணவன், பதில் பேப்பருடன், 100 ரூபாய் நோட்டை இணைத்து, “ஒரு மார்க்குக்கு ஒரு ரூபாய்” என குறிப்பும் எழுதி அனுப்பினான்.
தேர்வுத் தாளைத் திருத்தியவரோ ஒரு சர்தார்ஜி.
பேப்பரைத் திருத்தியதும், அவர் 81 ரூபாயை அத்துடனேயே இணைத்து, இப்படி எழுதி அனுப்பினார்.
“நீ 19 மார்க் வாங்கியிருக்கே… மீதி சில்லறையை பத்திரமா வச்சுக்கோ…”
ஒரு பாதையோரம் இருந்த குளத்துக்கு பக்கத்துல ஒருத்தன் சின்ன சின்ன கற்களை அடுக்கி வைத்து ஒவ்வொரு கல்லா எடுத்து குளத்துல போட்டு கொண்டு இருந்தான்

அந்த பாதையில போன எல்லாருக்கும் என்னடா இவன் இப்படி கல்லை ஒவ்வொன்ன போடுறானேன்னு .சந்தேகம் "ஏம்பா தம்பி உனக்கு வேற வேலை வெட்டி இல்லையா இப்படி கல்லை குளத்துல போடறியே அப்படின்னு கேள்வி கேட்டு பார்த்தாங்க "
அவன் அவர்கள் இப்படி கேட்பதை கண்டுக்காம ஒன்னு ரெண்டு அப்படின்னு எண்ணிக்கிட்டே மீண்டும் கல்லை குளத்துல போட ஆரம்பித்தான்
இவன் இப்படி குளத்துல கல்லை போடறதும் வழியில் போறவங்க கேள்வி கேட்பதும் அவன் ஒன்னு ரெண்டுன்னு எண்ணுறதும் இதை எல்லாம் ரொம்ப நேரமா தூரத்தில் இருந்து பார்த்துகிட்டே இருந்து அவன்
" தம்பி நான் கேட்கிறேன்னு தப்பா  நினைக்காதே இப்படி இவ்வளவு கல்லை வைச்சு குளத்துல ரொம்ப நேரமா போடுறியே உனக்கு வேற வேலையே இல்லையா நீ தப்பா  நினைக்கிலன்ன ஏன் இப்படி பண்றேன்னு சொல்ல முடியுமா ?"அப்படின்னு கேட்டான்

ரொம்ப நேரமா பேசாம இருந்த அவன் சொன்னான்
"இந்த உலகத்தில் யாரும் வெட்டின்னு செய்றது இல்லை அவன் அவன் செய்ற வேலை பற்றி அவனுக்கு தெரியும் .
எனக்கு தெரிஞ்சு உலகத்திலே வெட்டி வேலை அப்படின்னு சொன்னா "அடுத்தவன் என்ன செய்றான் ?! ஏன் செய்றான் ?! அப்படின்னு ஆராய்ச்சி செய்றது கேள்வி கேட்கிறதே வேலையா இருக்கறவனை சொல்வேன்" அப்படிப்பட்ட ஆட்கள் எதனை பேர் இங்கே இருக்காங்கன்னு எண்ணி பார்த்தேன்" அப்படின்னு சொன்னான் ...
__________________________________________
நீதி : 1 :- அடுத்தவன் செய்றது எல்லாம் வெட்டி வேலை என்று நினைத்து கேள்வி கேட்டு நேரத்தை வீனாக்குவதே மிக பெரும் வெட்டி வேலை ..
நீதி : 2 :- இனி யாரச்சும் பேஸ்புக்கில் என்ன செய்கிறாய் என யாரும் கேட்டால் இந்த கதையை சொல்லவும்.