Showing posts with label இரத்த தானம். Show all posts
Showing posts with label இரத்த தானம். Show all posts

Sunday, November 10, 2013

இரத்த தானம், உடல் உறுப்பு தானம்

உதிரக்கொடை (இரத்த தானம் ) :
  • ஒருவர் உடலில் இருக்கும் சுமார் 5 லிட்டர் (5000 மில்லி லிட்டர்) இரத்ததில் இருந்து சுமார் 350 மிலி மட்டுமே அளிப்பது இரத்த தானம்
  • உயிருடன் இருப்பவர்கள் மட்டுமே அளிக்க முடியும்.
  • எத்தனை முறை வேண்டுமானாலும் அளிக்கலாம்.
  • சில நாட்களில் இரத்தம் மீண்டும் ஊறி விடும்.
  • பலன் : உதிரம் தேவைப்படும் பிணியாளருக்கு. ஒவ்வொரு முறையும் ஒரு உயிரை காக்கலாம். இரத்தம் கூறுகளாக பிரிக்கப்பட்டால் ஒரே முறையில் பல பிணியாளர்க்ளுக்கு பயன் படும்.
  • உதிரக்கொடை அளிக்க விரும்பினால் : அருகிலுள்ள அரசு மருத்துவமனையின் உதிரவங்கியை அணுகவும்
பார்வைக்கொடை (கண் தானம் / கருவிழிப்படலகொடை) :
  • உயிருடன் உள்ளவர் கண் தானம் செய்ய முடியாது. கண் தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் (இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்) அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்கள் இறந்தவரின் கண்களை தானம் செய்யலாம்
  • ஒருவர் இறந்த பின்னரே அவரது கண்கள் எடுக்கப்படும்.
    • இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
    • மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
  • கண்கள் எடுக்கப்பட்ட பின் பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
  • எடுக்கப்பட்ட கண்களின் கருவிழிப்படலம் (கார்னியா) அடுத்த நபருக்கு பொருத்தப்படும்
  • பலன் : விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு.
  • ஒருவர் இறந்த ஆறு மணி நேரத்திற்குள் கண்களை எடுக்க வேண்டும்
  • கண்ணாடி அணிந்தவர்கள், ஏற்கனவே கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள் கூட தானம் செய்யலாம்
எலும்பு கொடை (எலும்பு தானம்) :
  • உயிருடன் உள்ள ஒருவர் எலும்பு தானம் செய்ய முடியாது. எலும்பு தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் (இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்) அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்களால் இறந்தவரின் எலும்புகள் தானம் செய்யப்படலாம்
  • ஒருவர் இறந்த பின்னரே அவரது எலும்புகள் எடுக்கப்படும்
    • இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
    • மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
  • பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
  • எலும்பு வங்கி இருக்கும் ஊர்களிலேயே இது கடை பிடிக்கப்படுகிறது
  • எடுக்கப்பட்ட எலும்புகள் எலும்பு வங்கியில் வைக்கப்படும்.
  • பலன் : பல பிணியாளர்களுக்கு
மூளைச்சாவு உறுப்புக்கொடை (உறுப்பு தானம்) :
  • உயிருடன் உள்ளவர் உறுப்பு தானம் செய்ய முடியாது.  (முக்கிய குறிப்பு : உயிருடன் உள்ள நபர்கள் தங்களின் நெருங்கிய உறவினர்களுக்கு, அல்லது தங்கள் விரும்பும் ஒருவருக்கு தங்களின் ஒரு சிறுநீரகம் மட்டும் அல்லது  கல்லீரலின் ஒரு பகுதி மட்டும்  தானம் செய்ய சட்டத்தில் ஒரு வழிமுறை உள்ளது)
  • அது தவிர உயிருடன் உள்ளவர் உறுப்பு  தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் (இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்) அல்லது ஒரு நபர் மூளைச்சாவால்  இறந்த பின்னரே அவரது உறவினர்கள் மூளைசாவு அடைந்தவரின் உறுப்புக்களை தானம் செய்ய இசைவு தரலாம்
  • மூளை சாவு என்றால் மட்டுமே எடுக்கப்படும்.
  • சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல், தோல், எலும்பு, மூட்டுக்கள் உட்பட பல உறுப்புகள் எடுக்கப்படும்
  • பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
  • பலன் : பல பிணியாளர்களுக்கு
முழு உடல்கொடை (உடல்தானம்) :
  • உயிருடன் உள்ள ஒருவர் முழு உடல் தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் அல்லது ஒரு நபர் இறந்த பின்னர் அவரது உறவினர்கள் இறந்தவரின் உடலை தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம்
  • இயற்கை மரணம் என்றால் மட்டுமே பெறப்படும். விபத்து என்றால் முழுஉடல்தானத்திற்கு உடல் பெறப்படமாட்டாது
  • உடல் உறவினர்களிடம்  அளிக்கப்படாது.
  • உடல் உடற்கூறியல் பிரிவில் வைக்கப்படும். முதல் வருட மாணவர்கள் உடற்கூறியல் குறித்து படித்த அறிவதற்காக உடல் பயன்படும்
  • அவ்வாறு தானம் அளிக்கப்பட்ட உடலிருந்து கண்களும், எலும்புகளும், இதய ஒரு போக்கிகளும் (இதய வால்வுகள்) எடுக்கப்படலாம். இவை பிணியாளர்களுக்கு பயன் படும்
  • பலன் : கண்களால் இருவருக்கு, எலும்புகளால், இதய ஒரு போக்கிகளால் பல  பிணியாளர்களுக்கு, மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு.
  • உறுப்பு தானம் என்பது வேறு !! உடல் தானம் என்பது வேறு. உறுப்பு தானம் என்பது மூளைச்சாவு எற்பட்டால் மட்டுமே. அதன் மூலம் மற்றொரு உயிரை காக்கலாம். உடல் தானம் என்பது இயற்கை மரணம் ஏற்பட்டால் மட்டுமே.

Saturday, October 5, 2013

இரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம்.,,

இரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம்.,,

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.

நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்..

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்

Wednesday, October 2, 2013

உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?

உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?

“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?”


உடல்உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும்.
“உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்ன ர் தருவது.
“உயிருடன் இருக்கும் போது தானமா க தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?”
“ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குட லின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.”
“இறந் த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?”
“இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல் லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).”
 “யார் யார் உடல் உறுப்புக்களை தானமா க தரமுடியும்?”
“நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிக ள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.”
 “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?”
“18 வயது முதல் 60
வயது வரை யில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிசமமாக முன் வந்து தானம் செய்யலாம்.”
“உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா?”
“ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்புதானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:-
1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோ ர், 18வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போ ன்ற நெருங்கிய சொந்தங்கள் உட ல் உறுப்பு தானம் செய்யலாம்.
2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலும் ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம்.
3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற
னர் என் று வைத்துக் கொள்வோம், அவர் களுக்கு தானம் தர முன் வருபவ ர்களின் உடல் உறுப்பு
ஒருவருக்கு பொருந்தாமல், மற் றொரு நோயாளிக்கு பொருந்து மேயானால் அவர்கள் ஒருவருக் கு ஒருவர் சிறு நீரகங்களை பரி மாறிக் கொள்ள லாம்.
“தானம்செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய் யுமா?”
“பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன்
உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொ ம்ளாமல், நிராகரித்து விடும். இதற் கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தா ன் காரணம். ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் “ப்ளாஸ்மா பெரிஸிஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறு வை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப் பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.”
“உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதா ல், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிறதா?”
“பொதுவாக, தானம் செய்கின்ற வர்களுக்கு எந்த பாதிப்பும் வரு வதில்லை. இரண்டு சிறு நீரக ங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெ ரியதாக ஆகும்,
ஆனால் நாளடைவில் தானாக வே சரியாகி விடும். தானம் செய் தவர், தன் வேலையை, தானாக வே செய்து கொள்ளலாம், பாதி ப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தானம் செய்தபின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும்.
நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதி கம் சீராக வேலை செய்ய தடை இல்லை.
ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில் லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண் டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும்.
ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்க ளையும் உபயோகப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக் கூடாது,
ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது,  உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாக வோ அல்லது குறைந்த ரத்த அழு த்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடாது, குறைந்தது மூன்று மாதங்களு க்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அன வரும் ரத்த தானம் செய்ய முன் வரவேண்டு ம்.” 
“வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்?”
“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போ ன்ற அ னைத்தையும் தானமாக தரலாம்.
ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும். 
ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டா லோ அல்லது நுரையீரல் வேலை செய் யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிர யின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற் று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக்களையும், திசுக்களையும், எடு த்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.
எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரண மாக இருந்தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.
ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல் லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”
“ஒருவரின் மூச்சு – சுவாசம் நின் ற பின்னர் என்ன மாறுதல் மூ ளையில் ஏற்படுகிறது?”  “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன.
மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றன
நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத் திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக் க முடியாது.” 
“உடல் உறுப்புக்களை எவ் வாறு பிரித்து எடுக்கிறார்கள்?”
“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பத ற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படு த்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலு த்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.
கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்த லாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,
குடுவை அல்லது பாத்திரத்தி லோ, ஐஸ் பெட்டியிலோ வை க்கப்படுகின்றது.
அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந் த தண்ணீரையும் ஊற்றி நிரப் பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது.
இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள் ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ï ரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயிய ல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன.
சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்பு க்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.”  



உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?
சிறுநீரகம்-72 மணி நேரம் வரை
கல்லீரல் – 18 மணி நேரம் வரை
இதயம் – 5 மணி நேரம் வரை
இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை
கணையம் – 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை
எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும்
தோல் – 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள்-5 வருடம், அதற்கு மேலும் பொதுவாக, பாது காத்து வைத்து, உபயோகப்படுத்தலாம்.

Friday, September 20, 2013

இரத்த தானம்


"பிறரின் இறப்பிற்கு கண்ணீர் கொடு"
"பிறரின் கண்ணீருக்கு இரத்தம் கொடு"

இரத்தத்தில் A, B, AB, O மற்றும் அதில் பாஸிட்டிவ் நெகடிவ் ஆகிய உட்பிரிவுகள் உள்ளன. இரத்தத்தின் பிரிவுகளை கண்டுபிடித்தவர் கார்ல் லாண்ட்ஸ்டீனர். அவர் பிறந்த ஜூன் 14ம் தேதி தான் இரத்த தான நாளாக கடைபிடிக்கப்படுகிறது.


"மனித நேயத்தை சொற்களால் அல்ல
இரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்”

விபத்து மற்றும் அறுவை சிகிச்சைகளின் போது இரத்தம் தேவைப்படுவதால் நாம் தானம் செய்யும் இரத்தம் ஒருவருடைய உயிர் காக்கும் பணிக்கு உதவுகிறது.
ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.
3 மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும்.
உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.

"அனைவரையும் இரத்த சொந்தங்களாக்க
இரத்த தானம் செய்வோம்"


யார் யார் இரத்த தானம் செய்யலாம்

17 முதல் 60 வயது வரையுள்ள எல்லா ஆண்களும் பெண்களும் இரத்ததானம் செய்யலாம்.

இதில் இரத்த தானத்தின்போது எடுக்கப்படும் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் மட்டுமே.

இரத்ததானம் செய்பவரின் இரத்ததில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு மேல் இருக்க வேண்டும்.

இரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்யலாம்.

இரத்ததானம் செய்ய இருபது நிமிடங்களே ஆகும்.

இரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.

இரத்ததானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம்.



ரத்த தானம் செய்யக் கூடாதவர்கள்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்துமா-காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தீவிரமான தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள்
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பால் வினை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
கடந்த ஒரு வருடத்தில் மஞ்சள் காமலையால் பாதிக்கப்பட்டவர்கள், மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்கள், பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், சமீபத்தில் நோய் தடுப்பு ஊசி போட்டவர்கள், கர்பிணிப் பெண்கள், குழந்தைக்கு பால் கொடுப்பவர்கள், மாதவிடாய் காலத்தில் இருப்பவர்கள்.
இரத்த தானம் செய்வதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது.
எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்ததானம் கண்டிப்பாக செய்யக்கூடாது.
இரத்த தானம் என்ற வாக்கியத்திலேயே தானம் என்று இருப்பதால் இரத்தத்தை தானம் மட்டுமே செய்ய வேண்டுமே தவிர விலைக்கு விற்பனை செய்யக்கூடாது.

இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்

இரத்தப் பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

இரத்ததானம் செய்வதால் இரத்த அழுத்தம் குறைகிறது.

மாரடைப்பு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.