Saturday, November 16, 2013

கார்த்திகை தீபத் திருநாள்..

கார்த்திகை தீபத் திருநாள்....


நாளை கார்த்திகை தீபத்திருநாள். ஆலயங்களில் , வீடுகளில் எல்லாம் தீபம் ஏற்றி வழிபாடும் நாள்.

தீப வழிபாடு பண்டைய காலந்தொட்டே பலமுறைகளிலும் நடைபெற்று வருகிறது.

கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது கார்த்திகை தீபம்.

சொக்கப்பனை கொளுத்துதல்".

கோவிலுக்கு அருகே, திறந்த வெளியில், ஒரு காய்ந்த மரத்துண்டை (அனேகமாக பப்பாளி மரத்தண்டு- ஊரில் என்றால் , சிலவேளைகளில் பெரிய மூங்கில் தடி ) நிறுத்தி அதனைச் சுற்றி காய்ந்த பனை மட்டைகளைக் கட்டி வைப்பார்கள். ( கிடுகும் பயன்படும் )இதற்கு சொக்கப்பனை என்று பெயர். சாயங்காலப் பூஜை முடிந்து சுவாமி வீதி உலா வந்தபின்( சுட்டி விளக்கு தரும் ஒளியில் சுவாமி வருதல் கண் கொள்ளாக்காட்சி.) ( பெரும்பாலும் ஆறுமுகசாமியே வள்ளி சமேத தெய்வானை யுடன் வலம் வருவார் ), கோவில் எல்லாம் விளக்கேற்றிய பின்னர், கோவில்குருக்கள் வெளியே வந்து, சொக்கப்பனைக்கு தீபாராதனைக் காட்டி அதைக் கொளுத்தி விடுவார். பனை மட்டையில் தீ பிடித்ததும் படபடவென்று ஒசையுடன் வெடித்துக் கொண்டே கொழுந்து விட்டு எரியும். மிகப்பிரகாசமான ஒளியை தருவது மட்டும் இல்லாமல் தத்துவத்தையும் பொலிந்து இருக்கும் இந்த காட்சி. நம்மவர்கள் உப்பு போட்டு வெடிக்க வைத்து கேலியாகுவதுதான் வழமையான ஒன்றே.

சுருக்கமாய் சொன்னால் ,கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கி, ஞான ஒளியை நம்முள் பெருக்க உகந்த விழாவாகும்.

No comments:

Post a Comment