Sunday, November 16, 2014

திருநெல்வேலி......

திருநெல்வேலி.....


தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில்வாழ்பவர்களில் 40% திருநெல்வேலி,தூத்துக்குடியை சேர்ந்தவர்களே. சென்னையின்பெருமைக்கு காரணம் நாங்களே,தமிழ்நாட்டின் பள்ளி ஆசிரியர்களில் 40% பேரும்,கல்லூரி ஆசிரியர்களில் 30% பேரும்நெல்லையையும், அதன் சகோதர மாவட்டமானதூத்துக்குடியை சார்ந்தவர்களே,தமிழ்நாட்டின் இரண்டாவது நெற்களஞ்சியம்நெல்லை தான்...எனவே எங்கள்தேவை எங்களாலே பூர்த்தி செய்ய படுகிறது,தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும்ஒரு திருநெல்வேலியை சேர்ந்த நபர் தெரிந்தவராககண்டிப்பாக இருப்பர்,இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில்தலைமை பொறுப்பில் இருப்பவர்களில் தமிழர்இருந்தால் அவர்நெல்லையை சேர்ந்தவராகவே இருப்பார், FamiliarIndustriallistsfrom Nellai areT V Sundram Iyengar ( TVS Group ), SAnatharamakrishnan ( Amalgamations Group),Padma Bhushan Shiv Nadar ( Founder Chairman, HCLTechnologies ),AD Padmasingh Issac ( Chairman & MD, Aachi MasalaGroup ), V G Paneer Das ( Founder, VGP Group), MG Muthu ( Founder, MGM Group ),Dr.SivanthiAdhiththanar ( Dina thanthi daily ).தமிழ்நாட்டில் உள்ள ஒரேஒரு வற்றாத்ஜீவநதி எங்கள் தாமிரபரணி தான்...தென் இந்திய 8ஜீவநதிகளில் தமிழகத்தின் ஒரே நதி எங்கள்தாமிரபரணி தான். எங்கள் தாமிரபரணி தான்நெல்லை, மற்றும் சகோதர' மாவட்டங்களானதூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியின் தாகம்தீர்க்கிறது. தமிழக நதிகளில், தமிழ்நாட்டில்பிறந்து தமிழ்நாட்டில் பயணித்து தமிழ்நாட்டில்கடலில் கலக்கும் ஒரே தமிழக நதி எங்கள்தாமிரபரணி தாய் தான்,தமிழ்நாட்டின் அழகான தைரியமான பெண்கள்என்றால் எங்கள் நெல்லை,தூத்துக்குடி சகோதரிகள் தான்...சான்று:தமிழ்நாட்டின் பெண் போலீஸ் எண்ணிகையில் 25%பேர் எங்கள் சகோதரிகள் தான். பெண்கள் அதிகமாககைத்தொழிலில் ஈடுபடும் மாவட்டங்களில்நெல்லை முதலிடம்,தமிழக புவியியல் அமைப்பில் கடல்,மலை,காடு,வயல்,பாலைவனம் என அனைத்தும் உள்ளஒரே மாவட்டம் எங்கள் நெல்லை தான்.எனவே நெல்லையை குட்டி தமிழ்நாடு என்று கூடசொல்லாம். ஏனென்றால் நெல்லையின் சில ஊர்கள்ஊட்டி, கொடைக்கானல் போலவும், சில ஊர்கள்ராமநாதபுரம் போலவும், சில ஊர்கள் தஞ்சாவூர்போலவும், சில ஊர்கள் நாகப்பட்டினம் போலவும்,சில ஊர்கள் அதிக காடுகள் கொண்டஈரோடு போலவும் இருக்கிறது.இப்படி ஒரு புவியியல் அமைப்பு உலகில் எந்தநிலப்பரப்பிலும்இல்லை,தமிழ்நாட்டின் எல்லா மாவட்டத்திற்கும் நிலம்வழியாக செல்ல வேண்டுமானால் பல வழிகளில்செல்லலாம். உதரணமாக சென்னை செல்லவேண்டுமானால் திருச்சி வழியாகவும் செல்லலாம்.கோவை சென்று சேலம் மற்றும் தருமபுரி வேலூர்வழியாக திருச்சி யை தொடாமலே போகலாம்.இப்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பல வழிகளில்அதன் அண்டை மாவட்டம் வழியாக செல்லாமல்செல்லலாம். ஆனால் கன்னியாகுமரி மாவட்டம்செல்ல வேண்டுமானால் நெல்லை மாவட்டத்தில்நுழையாமல் செல்லவேமுடியாது,தமிழில் எங்கள் நெல்லை தமிழ்க்கு இணை எங்கள்நெல்லை தமிழ் தான்... "ஏலே, சவுக்கியமா ஏலே"திருநெல்வேலி,தூத்துக்குடி என நிர்வாக ரீதியாகபிரிந்து இருந்தாலும் எங்கள் இரு மாவட்டமக்களுக்கும் பின்னி பிணைந்து வாழ்கிறோம்.தமிழ்நாட்டில் இப்படி சகோதரத்துவமாகஇதுவரை எந்த இரு மாவட்டங்களும் இருக்கவாய்ப்பு கிடைக்கவும் இல்லை. இனிமேல்இருக்கபோவதும் இல்லை,ஒவ்வொரு வருடமும் பள்ளி கல்வி தேர்ச்சியில்நாங்களே அதிக சதவிகிதம் தேர்ச்சி பெருவோம்.சென்னை,கோவை.திருச்சி.மற்றும் மதுரை யை விட. முதல்முன்று இடங்களில் நெல்லை பிராந்தியபள்ளி மாணவர்கள் இல்லாமல்இதுவரை வந்தது இல்லை, தமிழக 10th & +2முடிவுகள்,பாண்டிய மன்னர்களின் முற்கால தலை நகரம்நெல்லை தான்..இன்னும் 100 வருடங்களுக்கு பிறகு தமிழ் நாட்டில்தண்ணீர் இருக்கும் இடங்கள்என்று ஒன்று இருக்குமானால்அது நெல்லை மற்றும் கன்னியாகுமரி மட்டும்தான்,உலக சுகாதார நிறுவனம் கணக்கு படி,இந்தியாவில் வாழ தகுதியானநகரங்கள் என்ற வரிசையில் தமிழ்நாட்டின்இருந்து தேர்வு செய்யப்பட்டஇரண்டு மாவட்டத்தில்ஒன்று நெல்லை இன்னொன்று கன்னியாகுமரி.பூலித்தேவன்,கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை.பாரதியார்,சுப்பிரமணிய சிவா, வீர பாண்டியகட்டபொம்மன், வாஞ்சிநாதன், வீரன்அழகுமுத்துகோன்,மார்ஷால்நேசமணி, தோழர் ஜீவா, வீரமாமுனிவர்,முஹமது இஸ்மாயில், சுந்தரலிங்கம் போன்ற பலசுதந்திர போராட்ட வீரர்கள் பிறந்த புண்ணியபூமி..தமிழ்நாட்டில் அதிக சுதந்திர போராட்டவீரர்கள் பிறந்த பூமி எங்கள் நெல்லை.கர்ம வீரர்காமராஜர் விருதுநகரில் பிறந்திருந்தாலும்அவருக்கு நெல்லை,தூத்துக்குடி மற்றும்குமரி மக்கள் மீது அன்பு அதிகம்.நெல்லைகார்களின்அன்புக்கும்எல்லை கிடையாது. கோபத்திற்கும்எல்லை கிடையாது.இயல்பாகவே நெல்லை மக்களுக்கு பிட்யுட்டரி சுரப்பி செயல்பாடு அதிகம்..மதச்சார்பின்மைக்கு சான்று நங்கள் தான்.நெல்லையில் கோவில்கள் அருகில்மசூதி யை பார்க்கலாம், மசூதி அருகில் சர்ச்யை பார்க்கலாம்..தமிழ்நாட்டில் இதுவரையில் மதகலவரங்கள்நடைபெறாத மாவட்டங்களில் நெல்லையும் ஒன்று.Tirunelveli Medical College( govt ) TMC, Govt Collegeof Engg Tirunelveli, Tirunelvili Law College, Govtagricultural college, Govt Siddha Medical College,Govt Veterinary College, என தமிழ்நாட்டின்உயர்கல்வி மையமாக திகழ்கிறது நெல்லை....தமிழ்நாட்டில் அப்பாவுக்கு அதிக மரியாதை தரும்பசங்க நெல்லை பசங்க தான். பெண்கள் தொடர்பானகுற்றச்சாட்டுக்கள் குறைவாக பதிவாகும்மாவட்டங்களில் நெல்லை மற்றும்தூத்துக்குடி முதலிடம். பதிவு திருமணங்கள்குறைவாக நடக்கும் மாவட்டங்களில்திருநெல்வேலியும் ஒன்று. விவாகரத்து குறைவாகநடக்கும் மாவட்டங்களில் நெல்லை முதலிடம்.முதியோர் காப்பகங்கள் குறைவாக உள்ளமாவட்டமும் எங்கள் திருநெல்வேலி தான்.தமிழ்நாட்டில் சென்னை,கோவைக்குபிறகு அதிகஇளைஞர்கள் உள்ள மாவட்டம் நெல்லை தான். "District of Youth "ஒரு ஆண்டில் வெளியாகும் தமிழ் படங்களில் 50%படங்கள் திருநெல்வேலியைn மையமாககொண்டே வெளிவருகிறது....அப்புறம் எங்க அல்வா...கொடுத்துட்டேன்......!I am proud to be an "TIRUNELVELIAN "..

No comments:

Post a Comment