Thursday, February 13, 2014

காதலர் தினம் என்றால் என்ன?


காதலர் தினம் என்றால் என்ன?
இன்று உலகம் எங்கிலும் காதலர் தினம் என்பதாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் எங்கிலும் இந்த நாளை, வாலண் டினா தினம் என்பதாக அழைப்பார்கள். வாலண்டினா என்பது ஒரு கிறித்துவ ஆண் பாதிரியாரின் பெயர். இந்த நாளின் சாராம்சம் காதலைப் போற்றுவது என்பதாகும். அதை சுருக்கமாக நம்மவர்கள் காதலர் தினம் என அழைத்துக் கொள்கிறார்கள். அதைக் கேள்விப்பட்ட இளைஞர்கள், தாங்கள் சுதந்திரமாக எதையும் செய்வதற்கு அனுமதிக்கும் தினம் என்று எடுத்துக் கொள்கிறார்கள். அதனாலேயே நமது நாட்டின் பண்பாடு சீரழிந்து விடுகிறது என்ற கண்டுபிடிப்பின் அடிப்படையில், சிலர் இந்த தினத்தை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள்
வாலாண்டினா தினம் என்று அழைக் கப்படுகின்ற இந்த காதலர் தினம், கி.பி. 496ம் ஆண்டு ஜெலாசியஸ் என்ற போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டது. அப்போது கிறித்துவ தியாகிகளை வாலண்டினா என்று அழைத்தார்கள். காதலர்கள் தங்களுக்குள் மலர்களை அளித்துக் கொண்டும், வாழ்த்து அட்டைகளை அனுப்பிக் கொண்டும் இந்த நாளை மகிழ்ச்சியாக கடைபிடித்து வந்தார்கள். இன்றைய நவீன வாலாண்டினா நாள் என்பது இதய வடிவத்தை படமாகப் போட்டு, வாத்துக்களின் படங்க ளைக் காட்டி பரப்பப்படுகிறது. 19ம் நூற்றாண்டிற்கு பிறகு கையால் எழுதப் பட்ட வாலண்டினா வாழ்த்துக்கள், காலப்போக்கில் வாழ்த்து அட்டைகளாக மாறத் தொடங்கின. அமெரிக்காவில் இன்று அதிகமான அளவில் வாழ்த்து அட்டைகள் பரிமாறப்படுகின்றன. இந்த நாளை விடுமுறை நாளாகவும் கடைபிடிக் கிறார்கள்.
கிறித்துவ தியாகிகளை வாலண்டினா என்று அழைத்து வந்த வரலாற்றில், ரோம் நாட்டு வாலண்டினா என்பதுதான் இந்த தினத்தின் வரலாற்றைக் குறிக்கிறது. பாதிரியார் வாலண்டினா என்ற பெயர் பல்வேறு கிறித்துவ தியாகிகளின் பட்டியல்களில் தென்படுகிறது. ஆனாலும் ரோம் நகரைச் சேர்ந்த ஒரு பாதிரியார் பெயர்தான் இந்த தினத்தையொட்டி பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிளாடியஸ் கோத்திகஸ் என்ற இரண் டாவது கிளாடியஸ் மன்னர் ஆட்சியில், மேலே குறிப்பிட்ட பாதிரியாரான புனித வாலண்டினா, மரண தண்டனை விதிக்கப் படுகிறார். கிறித்துவ தம்பதியர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததை, குற்றம் என்று அன்றைய மன்னர் ஆட்சி அறிவித்து, புனித வாலண்டினா என்ற அந்த கிறித்துவ பாதிரியாரை கைது செய்தது. சிறையில் தள்ளியது. கிறித்துவர்களுக்கு உதவி செய்ததாக அந்த நேரத்தில் ரோம் நகரில் கிளாடிய சால் அவர் குற்றம் சாட்டப்பட்டார். அந்த காலத்தில் கிறித்துவர்களுக்கு உதவி செய்வது என்பது ஒரு குற்றம் என்பதாக கருதப்பட்டது. அந்தப் பாதிரியாரை கேடயங்களால் அடித்தும், கல்லால் எறிந்தும் கொலை செய்யமுடியவில்லை. அதன் பிறகு பிளாமினியன் வாசல் என்று சொல்லப்படும் இடத்திற்கு வெளியே, காதலை உற்சாகப்படுத்திய அந்த பாதிரியார் புனித வாலண்டினாவை, தலையை வெட்டி மரணதண்டனையை நிறைவேற்றினார்கள். அப்படி மரண தண்
டனை நிறைவேற்றப்பட்ட காலத்தைப் பற்றி பல்வேறு விதமான புள்ளிவிவரங்கள் சொல்லப்படுகின்றன. அது கி.பி. 269 என்றும், 270 என்றும் அல்லது 273 என்றும் கூறப்படுகிறது. அதிகாரபூர்வமான ரோமன் நாட்டு தியாகிகள் பட்டியல், பிப்.14ந் தேதியை குறிப்பிடும் போது, ஒரே ஒரு புனித வாலண் டினாவைத்தான் குறிப்பிடுகிறது.
கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரபூர்வமான பட்டியலில் 7 தியாகிகள் குறிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பல்வேறு ஆண்டுகளில் தியாகிகளானவர்கள் என்பதாக அந்த பட்டியல் கூறுகிறது. ஆனாலும் இந்த நாளில் குறிப்பிடப்படும் வாலண்டினா என்ற பாதிரியாரின் செயல்தான் முக்கிய மானது. அதாவது அவர் காதலுக்காக தன்னுயிரையே அர்ப்பணித்தார் என்பது தான், இந்த நாளின் சிறப்பு.
காதலர் தினம் என்பது, காதலில் நீந்திக்கொண்டிருப்பவர்களை விட, காதலில் நீந்தி கரையேறியவர்கள் அதாவது காதலித்து திருமணம் செய்தவர்கள் காதலிக்கும் போது எப்படி அன்பாக இருந்தார்களோ அதே போல இருவரும் திருமணத்தின் பிற்பாடு வருகின்ற காதலர் தினங்களிலும் அந்த காதல் குறையாமல் அதே போல அன்பாக இருக்கிறார்கள் என உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு காதலில் வெற்றி கண்டவர்கள் அதை கொண்டாட வேண்டும். இது காதலித்து கல்யாணம் செய்தவர்களுக்கு மட்டும் என்றில்லை, காதலிக்காமல் கல்யாணம் செய்து அதன் பின் காதலிக்க தொடங்கியவர்களுக்கும் பொருந்தும்.
காதலிக்கும் போது நிறைய விட்டு கொடுப்பீர்கள், சின்ன சின்ன சண்டைகள் இனிக்கும், காதலிக்கும் போது இன்னொருவரிடம் உள்ள நெகடிவ் விஷயங்கள் கண்ணுக்கு தெரியாது தெரிந்தாலும் அது ஒரு மட்டேராகவே இருக்காது...ஆனால் கல்யாணத்திற்கு பின், இவை எல்லாம் தலை கீழாக மாறி; பொசிடிவ் விஷயங்கள் கண்ணில் தெரியாமல் மற்றவரின் நெகடிவ்ஸ் மட்டுமே உங்கள் கண்ணை உறுத்தும், முன்னர் சிறிதும் சலிக்காத நீண்ட உரையாடல்கள் பின்னர் சலிக்கும் ...ஏன் கல்யாணத்தின் பின்னர் இன்னொருவருடைய அழகை புகழகூட மனம் வராது, ஒரு வித ஈகோ வந்து உங்களிடம் குடியிருக்கும்.
இவ்வாறான கல்யாண வாழ்கையில், கணவனும் மனைவியும் ஒன்றாக காதலர் தினத்தை கொண்டாட வேண்டும். உங்கள் ஈகோ, டென்ஷன், வேலை, மற்ற எல்லா பிரச்சனைகளையும் தூர எறிந்துவிட்டு, அந்த ஒரு நாள் பழைய காதலர்களாக மாறி காதலர் தினத்தை கொண்டாடலாம். புது வருடத்தில் புது கொள்கைகளை கடைப்பிடிப்பதை போல, காதலர் தினத்தில் கணவனும் மனைவியும், குடும்பத்தில் இருவரும் என்ன என்ன விடயங்களில் விட்டுகொடுத்து நடக்க வேண்டும் என்று கூட யோசிக்கலாம். காதல் என்பது அன்பு, இதை வெளிப்படுத்த கணவன் மனைவிக்குள் எந்த ஒரு தயக்கமும் தேவை இல்லை. காதல் பயணம் கல்யாணத்தோடு முடிந்துவிட தேவையில்லை. ஆகையால், இந்த காதலர் தினம் முழுமையாக உங்களுக்கும்தான் தம்பதிகளே!
அது தவிர, காதலர்களுக்கு இந்த காதலர் தினம் ஒன்றுதான் காதலை வெளிப்படுத்தும் தினம் இல்லை. அதற்க்காக காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாட கூடாது என்று நான் சொல்ல வரவேயில்லை...என்னை அடிக்க வந்து விடாதீர்கள். காதலர்கள் காதலர்களாக இருப்பதனால் ஒவ்வொரு நாளுமே அவர்களுக்கு காதலர் தினம்தான். ஆனால், காதலர்களை விட, காதலில் வெற்றி பெற்றவர்கள், கல்யாணத்தின் பிறகு பல காரணங்களால் பிஸியாக இருக்கலாம், ஒன்றாக நேரம் செலவிடுவது குறைந்திருக்கலாம்...அதனால் காதலர் தினம் என்பது கல்யாணமானவர்கள் காதலை வெளிப்படுத்தி கொண்டாடவே சிறந்தது
Have a great day!

No comments:

Post a Comment