Saturday, May 3, 2014

தலை முடி வளர...

தலை முடி வளர.....

முடி வளர, முடி கொட்டாமலிருக்க, பொடுகு நீங்க, நரை முடி நீங்க, பேன் தொல்லை நீங்க உதவும் குறிப்புகள்!

முடி வளர

தலை முடி நன்றாக வளர நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இது முடி நன்றாக வளர உதவுவதோடு, மயிர்க் கால்களையும் நன்றாக வலுவாக்கும்.

தலை முடி வளர சடாமஞ்சளை நல்லெண்ணெயில் காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்கு குளித்து வந்தால் தலை முடி நன்றாக அடர்த்தியாகவும் நீண்டும் வளரும்.

முடி வளர மருதாணி இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தேய்த்து வரலாம். முடி நன்றாக செழித்து வளர உதவும்.

காரட் – எலுமிச்சம் பழ சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வருவதும் முடி வளர உதவும்.

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி தலையில் தடவ முடி நன்கு வளரும்.

தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் முடி வளர:

~ மாதுளம் பழ சாறை தடவ முடி வளரும்.

~ ஆற்றுத் தும்மட்டியை நறுக்கி தேய்த்து வரலாம்.
முடி கொட்டாமலிருக்க

முடிகொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும் புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப் பூ ஆகியவற்றைப் போட்டு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சீயக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது.

வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பசை போல் அரைத்து ஃபிரிட்ஜில் வைத்து கொள்ளுங்கள் தினமும் குளிப்பதற்கு முன்பாக தலையில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊற வைத்து பின் தலைக்கு குளியுங்கள். தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் நிச்சயமாக முடி உதிர்வது நின்றுவிடும்.

முடி உதிர்வது நிற்க கோபுரம் தாங்கி இலை சாறு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி தலை முழுகினால் முடி உதிர்வது நின்று விடும்.

முடி உதிர்வதை தடுக்க தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் வேர்க்கால் பலவீனத்தை இது போக்கும்.
தலை முடி பளபளப்பாக

தேநீரில் வடிகட்டிய பின் மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாரை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

எண்ணெய்ப் பசை நீங்க

கூந்தலில் எண்ணெய்ப் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
நரை முடி நீங்க

நரை முடி வருவதை தவிர்க்க தேங்காய் எண்ணை ஒரு லிட்டர், நல்லெண்ணை ஒரு லிட்டர் எடுத்து அதனுடன் நெல்லிக்காய் சாறு அரை லிட்டர் இந்த மூன்றையும் சேர்த்து நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி வாரத்தில் இருமுறை தலையில் தேய்த்து குளித்து வர இள நரை வருவதை தவிர்க்கலாம்.

செம்பட்டை முடி கருப்பாக மாற மரிக்கொழுந்து இலையையும், நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து தலைக்கு தடவி வந்தால் சில நாட்களில் செம்பட்டை முடி கருப்பாக மாறும்.

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இள நரை
பேன் தொல்லை நீங்க

பேன் தொல்லை இருந்தால் சீத்தாப்பழக் கொட்டையை இரண்டு நாட்கள் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணையில் கலந்து தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பேன் தொல்லை நீங்கும்.

மலை வேம்பு இலையை அரைத்து தலையில் பூசிக் குளித்தால் பேன் தொல்லை ஒழியும்.

சீலை பேன் ஒழிய நாய் துளசி இலை கதிர்களுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்க சீலை பேன் ஒழியும்.

அரளிப்பூ தலையில் வைத்துக் கொண்டால் பேன் தொல்லை நீங்கும்.

துளசி இலையை நன்றாக மையாக அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை கழுவினால் பேன் செத்து உதிர்ந்து விடும் தலைமுடியும் நன்றாக வளரும்.
பொடுகு நீங்க

பொடுகு தொல்லை நீங்க100 கிராம் தேங்காய் எண்ணெயில் உப்பு கலக்காத காய்ந்த வேப்பம்பூ 50 கிராம் போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை தீரும்.

பொடுகு நீங்க பொடுதலைக்கீரை, முருங்கைக்கீரை, பாலக்கீரை இந்த மூன்றையும் அரைத்து, பின்னர் சோயா பவுடர், நன்னாரி பவுடர், நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றுடன் கலக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு, தேவைக்கேற்ப நீர் கலந்து பேஸ்ட் போல செய்து தலையில் பேக் போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு நீங்கி விடும்.
.
முடி கொட்ட காரணங்கள்

பரம்பரை காரணங்கள்

ஹார்மோன் குறைபாடு

மன இறுக்கம்

சத்து குறைவான உணவுப் பழக்கம்

வைட்டமின் A சத்து முடி வளர, துத்தநாகம் அடர்த்தியாஉ முடி வளர, வைட்டமின் E சத்து முடி வலுப் பெறவும், வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருக்கவும்

காற்று மாசுபாடு – தூசு, வேதிப் பொருட்கள் போன்றவை

கூரான முனை கொண்ட சீப்பு உபயோகிப்பது

முடிக்கென்று செய்து கொள்ளும் கலரிங், ஸ்ட்ரைனிங் போன்றவை. கண்ட கண்ட கெமிக்கல் மற்றும் ஷாம்பூ போன்றவை

முடியைப் பராமரிக்க நேரம் ஒதுக்காதது

முடிந்தால் இரு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள்.

முடி வளர நல்ல ரத்த ஓட்டம் தேவை. எனவே உடற்பயிற்சி செய்யுங்கள். சிரசாசனம் போன்ற தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் ஆசனங்கள் செய்யுங்கள்.

ஹெல்மெட்டை தயவு செய்து தவிர்க்காதீர்கள்! உங்கள் உயிர் காக்கும் தோழன்!

Friday, May 2, 2014

ஸ்மார்ட்போன் வாங்க... ஸ்மார்ட்டான 10 விஷயங்கள்!


ஸ்மார்ட்போன் வாங்க...
ஸ்மார்ட்டான 10 விஷயங்கள்!


ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இல்லை. 5,000 ரூபாயில் தொடங்கி ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதால் பலரும் அதை எளிதில் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், ஸ்மார்ட்போனை நமக்கு உதவுகிற மாதிரி பல வழிகளில் நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். தினப்படி வேலைகள் முதல் அலுவலகம் தொடர்பான சில வேலைகளைக்கூட இருந்த இடத்தில் இருந்தபடியே ஸ்மார்ட்போன் மூலம் செய்துவிட முடியும்.
நவீன வாழ்க்கையின் இன்றியமையாத கருவியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்குமுன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா எடுத்துச் சொல்கிறார். அவை இனி...
விலை!
ஸ்மார்ட்போன் வாங்கச் செல்லும்முன், முதலில் போனுக்காகச் செலவிடும் தொகையை பட்ஜெட் போட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் பட்ஜெட் குறைவுதான் எனில், அதற்குத் தகுந்தமாதிரியான ஸ்மார்ட்போனைத் தேர்வுசெய்யலாம். பட்ஜெட் போடாமல் மொபைல் ஸ்டோர்களுக்குச் செல்லும்போது நம் செலவு அதிகமாகவே நிறைய வாய்ப்பிருக்கிறது. வெறும் விலையோடு நின்றுவிடாமல் அதுகுறித்த டெக்னிக்கல் விஷயங்கள் பற்றியும் ஆராய்வது முக்கியம். இதற்கு மொபைல் ரெவியூகளைப் படிப்பது அவசியம்.
நினைவகம் (Memory)!
தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள மனிதனுக்கு மூளை எந்தளவு முக்கியமோ, அதுபோல ஸ்மார்ட்போன்களுக்கு நினைவகங்கள் முக்கியம். ஸ்மார்ட்போன்கள் என்பவை கணினிபோலவே, ரேம் மற்றும் உள்நினைவகங்களுடனேயே (RAM, Internal Memory) வருகின்றன. எனவே, உங்கள் விலைக்கு எது சிறந்தது என்று பார்த்து வாங்கவேண்டும்.
ஸ்மார்ட்போனில் இருக்கும் ரேம் குறைந்தபட்சம் 512 எம்.பி. இருந்தால் நல்லது. உள்நினைவகம் குறைந்தபட்சம் 150-200 எம்.பி. இருப்பது அவசியம். எக்ஸ்டர்னல் நினைவகத்துக்கான வேலையை மெமரி கார்டே செய்துவிடும். அது 32 ஜிபியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
பிராசஸர் (Processor)!
உங்கள் போனுக்கு இதயம் போன்ற பகுதி இதுதான். குறைந்தபட்சம் பிராசஸர் ஸ்பீடு 800 விலீக்ஷ் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
பேட்டரி (Battery)!
பேட்டரி எவ்வளவு நேரம் தாங்கும் என்பதுதான் ஒரு போனுக்கு மிகவும் முக்கியமான விஷயம். ஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியா 1100 போல பத்து நாள் சார்ஜ் தாங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் வாங்கும் பேட்டரி லித்தியம் அயனாக (Li-Ion) இருக்க வேண்டும். அதுவும் குறைந்தபட்சம் 1500 mAh கொண்ட போனை தேர்வு செய்தால்தான் ஒருநாள் முழுமைக்கும் சார்ஜ் இருக்கும். எனவே, உங்கள் பயன்பாடுகளைப் பொறுத்து பேட்டரியைத் தேர்வு செய்யுங்கள்.
இணையம் - இணைப்புத்தன்மை!
நீங்கள் வாங்கும் ஸ்மார்ட்போன் 3ஜி ஏற்றுக்கொள்ளும் தன்மை உள்ளதுதானா என்பதை உறுதிசெய்துகொள்வது அவசியம். அதேபோல, Bluetooth, Wi-Fi, GPS, USB  வசதி போன்றவை இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். புளூடூத் வெர்ஷன் குறைந்தபட்சம் 2.1 இடிஆர்-ஆக இருப்பது நல்லது. இணைய பிரவுஸரானது ஹெச்டிஎம்எல் (HTML) வசதியுடன் வரும்.
அளவு!
ஸ்மார்ட்போனின் அளவு என்பது அவரவர்களின் விருப்பம்தான். இருப்பினும் பெரிதாக வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. ஏன் என்றால் அதைக் கையில் பிடிப்பது, பாக்கெட்களில் வைப்பதில் சிரமம் வரும்.
கேமரா!
எந்தவகையான ஸ்மார்ட்போனை வாங்குவதாக இருந்தாலும், அது எத்தனை மெகா ஃபிக்ஸல் கேமரா என்று முடிவு செய்துகொண்டு வாங்கவேண்டும். அதோடு உங்களுக்கு ஃப்ளாஷ் முக்கியமானதாக இருந்தால் அதையும் கவனிக்க வேண்டும். இல்லையென்றால், இரவில் படம் எடுக்கும்போது உங்களுக்கு சிரமம் ஏற்படும். இதில் வீடியோ ரெக்கார்டு செய்வதையும் கவனித்து வாங்கவும். 5 எம்பி கொண்ட கேமரா என்றால் அதன் மூலம் 700 ஃபிக்ஸல் அளவுக்கு வீடியோ ரெக்கார்டிங் செய்துகொள்ளலாம். வீடியோ கால் செய்யவேண்டும் என்கிறவர்கள் ஃப்ரென்ட் கேமரா வசதியுடன் உள்ள ஸ்மார்ட்போன்களை வாங்குவது நல்லது.
எடை மற்றும் அளவு!
ஒரு போன் வாங்கும்போது பார்க்க எப்படி உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் எடை, அளவு போன்றவை முக்கியம். இதில் குறிப்பாகக் கவனிக்க வேண்டியது, எடைதான். எடை குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
டிஸ்ப்ளே (Display)!
டிஸ்பிளேவை பொறுத்தமட்டில், Capacitive டச் ஸ்க்ரீன் உள்ள போன் வாங்கவேண்டும். உங்கள் தேவையைப் பொறுத்து ஸ்க்ரீன் சைஸை தேர்வுசெய்துகொள்ளலாம். அதோடு நீங்கள் வாங்கும் போன் மல்டி டச் சப்போர்ட் செய்கிறதா என்று கேட்டுக்கொள்ளுங்கள்.
இயங்குதளம் (Operating System)!
எந்த ஒரு ஸ்மார்ட்போனும் ஏதேனும் ஓர் இயங்குதளத்தில்தான் (OS) இயங்கும். ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் போன் என மூன்று பிரபலமான இயங்குதளங்கள் உள்ளன. உங்கள் தேவை மற்றும் பட்ஜெட்டை பொறுத்து இதில் ஏதேனும் ஒன்று உள்ள போனை வாங்கலாம்.

வாடிக்கையாளர் குறைதீர்க்கும் வங்கி ஆம்புட்ஸ்மேன்.


வாடிக்கையாளர் குறைதீர்க்கும் வங்கி ஆம்புட்ஸ்மேன்....

நண்பர் ஒருவர், சென்னை சைதாப்பேட்டையிலுள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு 5000 ரூபாய் எடுக்க சென்று உள்ளார்.

அப்போது பணம் வராமல் உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற எஸ்எம்எஸ் வந்துள்ளது. உடனே அந்த நண்பர் ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.

வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.

இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.

சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 1ம் தேதி, ஏப்ரல் 15 ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார். அப்போதும் எந்தப் பலனும் இல்லை. அப்போது, வங்கி குறைத்தீர்ப்பாயம் (Ombudsman) பற்றி இன்னோரு நண்பர் மூலம் கேள்விப்பட்டு, இணையம் மூலமாக https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
புகார் செய்தார். சில தினங்களில் 5000 வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.
பின்னர் அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 700-ம் செலுத்தி உள்ளனர்.

அந்தச் சம்பந்தபட்ட வங்கி நண்பரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர். மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .

இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் ஆம்புட்ஸ்மேன் -ஐ தொடர்பு கொள்ளுங்கள்..

தங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

தங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
அட்சயதிருதியை அன்று ஒரு கிராம் நகையாவது வாங்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள் நம்மவர்கள். அப்படி  நகை வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டியவை என்னென்ன என்று ஜெம் அண்ட் ஜுவல்லரி டெக்னாலஜி டிரெய்னிங் சென்டர் இயக்குநர் கே.சுவாமிநாதனிடம் கேட்டோம். ஐந்து முக்கிய விஷயங்களைச் சொன்னார் அவர். அந்த விஷயங்கள் இதோ:
1. ஹால்மார்க் நகைகள்!
நீங்கள் வாங்கும் நகைகள் ஹால் மார்க் முத்திரை கொண்ட நகைகளா என்று பார்த்து வாங்குவது அவசியம். நம்பர் 1 நகை, தரம் நிறைந்தது என விளம்பரத்தில் சொல்லப்பட்டாலும் ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகள் தான் தரமானவை. அதிலும் ஐந்து முத்திரை (முக்கோண சிம்பல், 916, டெஸ்ட் செய்த லேப், வருடம், கடை எண்) உள்ள ஹால்மார்க் நகைகளே தரமானவை. இதை பலரும் கவனிக்காமல் மூன்று முத்திரை கொண்ட ஹால்மார்க் நகைகளை வாங்கிவிடுகின்றனர். மேலும், வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை உண்டு.
2.கல் நகைகள்!
தங்க நகைகளை வாங்கும்போது கல் வைத்த நகைகளை வாங்கு கிறீர்கள் எனில், அவை எத்தனை கிராம் உள்ளன, அதற்கான விலை எவ்வளவு, மொத்த விலையில் கற்கள் போக தங்கத்தின் விலை சரியாக உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள். பிற்காலத்தில் அந்த நகைகளை தந்து புது நகை வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ கல் நகைகளுக்கு மதிப்பு குறைத்தே கணக்கிடப்படும். ஆகவே, கல் நகைகளை வாங்கும்போது கவனத்தோடு இருக்கவேண்டியது அவசியம்.
3. டிசைன்!
சிலர் நகை வாங்கவேண்டும் என்றதுமே நல்ல டிசைனாக இருக்க வேண்டும் என்று நினைக்க தொடங்கிவிடுவார்கள். அப்படி டிசைன் நகைகளை வாங்கும்போது அதற்கு சேதாரம் அதிகமாகும், அப்போது அதற்கான சேதாரம் எவ்வளவு, அது நகையின் டிசைனுக்கு தகுந்த சேதாரம்தானா என்று பார்த்து அதற்குபின் வாங்குங்கள். பார்க்க நன்றாக உள்ளது என நீங்கள் வாங்கும் சிறிய அளவிலான நகைகளின் ஆயுள் பெரும்பாலும் குறைவாகவே இருக்கும். மேலும், நீங்கள் ஏதாவது ஒரு நகையை அட்சயதிருதியை அன்று வாங்க வேண்டுமே என்ற காரணத்துக்காக 2 கிராமுக்கு கீழ் நகை வாங்கும்போது தரம் குறைந்த நகைகளை வாங்கும் வாய்ப்பு அதிகம். அதனால், நகை வாங்கும்போது இரண்டு கிராமுக்கு மேல் உள்ள நகையாகப் பார்த்து வாங்குவது நல்லது.
4.தரம்!
நகை வாங்கும்போது சரியான தரத்தில் நகைகளை வாங்குவது முக்கியம். அதோடு ஒவ்வொரு நகை வாங்கும்போதும் அதற்கு என்ன தரக் குறியீடு எனப் பார்த்து வாங்க வேண்டும். தங்கம் என்றால் 916 நகைகள், வைர நகைகள் வாங்கும்போது தரச் சான்றிதழ் பார்த்து வாங்கவேண்டும். குறிப்பாக, வைரம் வாங்கும்போது கட்டாயம் தரச் சான்றிதழை கேட்டு பெற வேண்டும்.
5.சேதாரம்!
சேதாரம் என்கிற விஷயம் கடைக்கு கடை மாறுபடும். நீங்கள் எந்த நகை வாங்குவதாக இருந்தாலும் சேதாரம் எவ்வளவு என்பதை நன்கு விசாரித்து அறிந்தபிறகே வாங்குங்கள். இதில் குழப்பமான பல கணக்குகள் இருப்பதால், உஷாராக இருப்பது அவசியம்!
அட்சயதிருதியை அன்று தங்க நகை வாங்க நினைப்பவர்கள் இந்த விஷயங்கள் அனைத்தையும் கவனத்தில் கொள்ளலாமே!

Thursday, May 1, 2014

அக்ஷய திரிதியை என்றால் என்ன?

அக்ஷய திரிதியை என்றால் என்ன?

ஒரு சமயம் காசியில் நித்ய வாசம் செய்யும் அன்னபூர்னேஷ்வரி தேவி, தாம் தான் அன்ன தாதா என்று, சிறு கர்வம் கொண்டாள். அந்த எண்ணத்தை போக்குவதற்கு, சிவபெருமான் ஒரு சிவ யோகியாக தோற்றம் கொண்டு அன்னபூர்னேஷ்வரி மாளிகைக்கு வந்து, "தாயே பசி என்று கூச்சல் போட, அதை செவிக்கொண்டு அன்னபூரணி தேவி, இலையிட்டு தன்னால் இயன்ற வஸ்துக்கள் அனைத்தையும் பரிமாற, சிவ யோகியோ, இன்னும் இன்னும் என்று அனைத்தையும் உட்கொண்டே இருந்தார்.வஸ்துக்கள் அனைத்தும் பூர்த்தியாக, அன்னபூரணி தேவிக்கு, என்ன செய்வதென்று புரியவில்லை. உடனே, காசியில் பிந்து மாதவன் என்ற திருக்கோலத்தில் சேவை சாதிகின்ற, தன்னுடைய அண்ணனாகிய மஹா விஷ்ணுவிடம் பிரார்தித்து அழைத்தார். மஹா விஷ்ணுவாகிய பிந்து மாதவன், ஒரு அந்தணர் கோலத்தில் வந்தார். அன்னம் தயார் செய்யும் இடத்திற்கு சென்றார். அங்கு, அன்னம் தயார் செய்த பாத்திரங்கள் அனைத்தும் சுத்தம் செய்து வைக்கபட்டிருந்தது. அன்னபூரணி தேவி நடந்த விஷயங்களை கூற, அதை கேட்ட மஹா விஷ்ணு, சுத்தம் செய்து வைக்கபட்டிருந்த பாத்திரத்தின் ஒரு ஓரத்தில் இருந்த பருக்கை அன்னத்தை, அக்ஷயம் என்று சொல்லிக்கொண்டு அவர்தம் தன் திரு வாயால் உட்கொண்டார். உடனடியாக, சங்கல்ப மாத்திரத்தால் (பகவத் அனுக்ரகஹத்தால்) அன்ன வகைகள் அனைத்தும் தோன்றின. அன்னபூரணி தேவி அந்த சிவ யோகிக்கு அருகில் இலையிட்டு மஹா விஷ்ணுவை அமர்த்தினார். மஹா விஷ்ணுவோ, உட்கார்ந்த சிறிது நேரத்தில் திருப்தி என்று கூறி எழுந்து விட்டார். தமக்கு அருகில் உண்பவர் எழுந்து விட்டால் தாமும் எழ வேண்டும் என்ற முறையை
பின்பற்றியாக வேண்டிய கட்டா யத்தினால், சிவ யோகியும் தமக்கு திருப்தி என்று எழுந்து விட்டார். அன்னபூரணி தேவி அந்த சிவ யோகியை வணங்க, சிவ யோகி சிவனாகவே காட்சியளித்தார். "உமைக்கு ஏற்பட்ட கர்வம் கொண்ட எண்ணத்தை மாற்றுவதற்கே தாம் இங்கு வந்தோம்", என கூறினார். உடனே, மஹா விஷ்ணு,"இன்றைய தினம் எவர் ஒருவர் நல்ல காரியங்களை தொடங்குகிறார்களோ, அது இனிதே வளரும்", என்று ஆசிர்வதித்தார். அன்று முதல் சித்தரை மாதம், சுக்ல பக்ஷ திரிதியை நாம் அக்ஷய திரிதியை திருநாளாக கொண்டாடுகின்றோம்....

நாம் பிறந்த நட்சத்திரப்படி நமக்கு எந்த ராசி? யார் ராசி அதிபர்? யார் நட்சத்திர அதிபர்? எந்த தெய்வம் நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு இஷ்ட தெய்வம்?

நாம் பிறந்த நட்சத்திரப்படி நமக்கு எந்த ராசி?
யார் ராசி அதிபர்?
யார் நட்சத்திர அதிபர்?
எந்த தெய்வம் நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு இஷ்ட தெய்வம்?
ராசிகள் நட்சத்திரங்கள்
1. மேஷம் - அசுவினி, பரணி, கார்த்தி கை 1-ஆம் பாதம் முடிய
2. ரிஷபம் - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய
3. மிதுனம் - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய
4. கடகம் - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
5. சிம்மம் - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
6. கன்னி - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய
7. துலாம் - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய
8. விருச்சிகம்- விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
9. தனுசு - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
10. மகரம் - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய
11. கும்பம் - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
12. மீனம் - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய
நட்சத்திரங்கள் தெய்வம்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் (ஞாயிறு) சிவன்
ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் (திங்கள்); - சக்தி
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன்
திருவாதிரை, சுவாதி, சதயம் - இராகு - காளி, துர்க்கை
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு - தட்சிணாமூர்த்தி
பூசம், அனுசம், உத்திரட்டாதி; - சனி - சாஸ்தா
ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு
மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர்
பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் (வெள்ளி ) - மகா லக்ஷ்மி
நட்சத்திரங்கள் --------------- அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்
அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
ஹஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்
அனுசம் - ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்
கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்
திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்)
சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன் ...

மக்கிப் போவதற்கு ஆகும் காலம்...

 

மக்கிப் போவதற்கு ஆகும் காலம்
பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்

வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்

பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்

காகிதம் - 2-5 மாதங்கள்

கயிறு - 3-14 மாதங்கள்

ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்

உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்

டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்

தோல் காலணி - 25-40 ஆண்டுகள்

நைலான் துணி - 30-40 ஆண்டுகள்

தகர கேன் - 50-100 ஆண்டுகள்

அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்

பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்

டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?
சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை அனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன.