Friday, May 2, 2014

வாடிக்கையாளர் குறைதீர்க்கும் வங்கி ஆம்புட்ஸ்மேன்.


வாடிக்கையாளர் குறைதீர்க்கும் வங்கி ஆம்புட்ஸ்மேன்....

நண்பர் ஒருவர், சென்னை சைதாப்பேட்டையிலுள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு 5000 ரூபாய் எடுக்க சென்று உள்ளார்.

அப்போது பணம் வராமல் உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற எஸ்எம்எஸ் வந்துள்ளது. உடனே அந்த நண்பர் ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.

வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.

இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.

சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 1ம் தேதி, ஏப்ரல் 15 ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார். அப்போதும் எந்தப் பலனும் இல்லை. அப்போது, வங்கி குறைத்தீர்ப்பாயம் (Ombudsman) பற்றி இன்னோரு நண்பர் மூலம் கேள்விப்பட்டு, இணையம் மூலமாக https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
புகார் செய்தார். சில தினங்களில் 5000 வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.
பின்னர் அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 700-ம் செலுத்தி உள்ளனர்.

அந்தச் சம்பந்தபட்ட வங்கி நண்பரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர். மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .

இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் ஆம்புட்ஸ்மேன் -ஐ தொடர்பு கொள்ளுங்கள்..

No comments:

Post a Comment