Showing posts with label தினம் ஒரு தகவல். Show all posts
Showing posts with label தினம் ஒரு தகவல். Show all posts

Tuesday, May 26, 2015

தினம் ஒரு தகவல்....

தினம் ஒரு தகவல்...

 

 

ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும். கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.
எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது. வெல்பவர்கள் தளர்வதில்லை! தளர்பவர்கள் வெல்வதில்லை ! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது...!

Thursday, February 12, 2015

பென்சிலின் உருவான கதை.....


பென்சிலின் உருவான கதை.
---------------------------------------------


தற்செயலாக பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் பென்சிலின். மரத்தில் இருந்து ஆப்பிள் விழுவதைப் பார்த்ததும்தான், நியூட்டன் புவி ஈர்ப்பு விசையையே கண்டுபிடித்தார். அதேபோல் தான் அலெக்சாண்டர் பிளமிங்கும் பென்சிலினைக் கண்டறிந்தார். அந்த சுவையான சம்பவத்தைப் பற்றிப் பார்ப்போமா.

பிளமிங், 1881ல் ஸ்காட்லாந்தில் பிறந்தார். முதலாம் உலகப் போரின் போது படை வீரர்கள் பலர் காயமடைந்து தொற்றுநோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டு இறந்தனர். இதைக் கேள்விப்பட்டு ஹபாக்டீரியாவைக் கொல்லும் மருந்தைக் கண்டுபிடிப்பேன்’ என்று சபதம் கொண்டார் பிளமிங்.

1928ல் லண்டனில் உள்ள செயிண்ட் மேரி மருத்துவமனையில் ஒரு விடுமுறை நாளில் கிருமிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். அன்று விடுமுறை நாளாக இருந்ததால் ஆய்வுப் பொருட்களை அப்படியே வைத்துவிட்டுச் சென்றார். அதில் ஒரு தட்டு மூடாமல் இருந்தது. சுற்றுப்புறமும் அசுத்தமாக இருந்தது. அப்போது வீசிய காற்றால் மெல்லிய பூஞ்சணம் அந்த தட்டில் படித்திருந்தது.

சில நாட்கள் கழித்து அந்த தட்டை ஆராய்ந்து பார்த்தார் பிளமிங். அப்போது பூஞ்சணம் படிந்த இடத்தில் கிருமிகள் முழுவதும் அழிந்திருந்தன மற்ற பகுதியில் பெருகி இருந்தன, உடனே பிளமிங் அந்த பூஞ்சணத்தைப் பயன்படுத்தி ஒரு மருந்து தயாரித்தார். பூஞ்சணத்தின்பெயர் பென்சிலினா நோடேடம். அதனால், அந்த மருந்துக்கு பென்சிலின் என்று பெயரிட்டார்.

இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பின் பிளமிங் ஒரு நவீன ஆய்வு கூடத்துக்குச் சென்றார். அங்கே ஆய்வுக் கருவிகள் பளபளப்பாகவும், தூய்மையாகவும் இருந்தன. சுற்றுச் சூழல் தூசியற்றும் குளிரூட்டப்பட்டும் இருந்தது.

அப்போது ஒருவர் ‘உங்களுக்கு அதிர்ஷ்டமே இல்லை. ஒரு தரமான ஆய்வகம் கூட உங்களுக்குக் கிடைக்கவில்லையே? அப்படி கிடைத்தால் நீங்கள் இன்னும் நிறைய மருந்துகளைக் கண்டுபிடித்திருப்பீர்களே’ என்று சொன்னார். அதற்கு பிளமிங் அமைதியாக, ‘நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், நிச்சயமாக பென்சிலினைக் கண்டுபிடித்திருக்க மாட்டேன்’ என்றார்.

Saturday, August 2, 2014

உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?

உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?



மனிதர்களுக்கு பெரும்பாலும் சந்தோசத்தை கொடுப்பது
அவர்கள் மனது சந்தோசமாக இருக்கும் போதுதான்.
அந்த சந்தோசம் என்பது அவர்கள் நினைக்கும் நினைப்பை
பொறுத்துதான்.

ஒரு காரியத்தில் ஈடுபடும்போது அந்த காரியத்தில்
வெற்றி கிட்டுவது போல் நினைக்க வேண்டும்.
வெற்றி அடைவது போல் உங்கள் மனத்திரையில்
காண வேண்டும்.

வெற்றி அடைவதை போன்று மனதில் உருவாக படுத்தி
பார்க்கும்போது தோல்வி அடைந்துவிடுவோம்
என்ற எண்ணங்கள் உருவாகுவதற்கு அங்கு வாய்ப்பு
இல்லை.

வெற்றியடைந்து விடுவோம் என்று உங்கள் மனத்தால்
நினைக்கும் போது அந்த காரியம் வெற்றி அடைந்து
விடுவதர்க்குண்டான அணைத்து வழிகளையும்
உங்கள் மனது ஏற்படுத்தி கொடுத்து விடும்.

உங்கள் மனதை சந்தோசமாக வைத்திருப்பதற்கு
இன்னும் நிறைய வழிகள் உள்ளன.

ஒரு நாளை துவக்கும் போது உங்கள் மனதில்
சந்தோசமான நிகழ்சிகளை மட்டும் நிரப்பி வையுங்கள்.
அப்படி செய்யும் போது அந்த நாள் முழுவதும்
மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள்.
அந்த உற்சாகம் அன்று முழுவதும் நீங்கள் ஈடுபடும்
காரியங்களில் வெற்றியடைய உதவுகிறது.

மற்றவர்களிடம் பேசும்போது சந்தோசமான
ஆக்க பூர்வமான (positive speech) விசயங்களை மட்டும் பேசுங்கள்.
அந்த இடத்தில ஒரு மகிழ்சிகரமான சூழ்நிலை உருவாகுவதற்கு
காரணமாக இருங்கள். அப்போது மற்றவர்களால் நீங்கள்
வெகு சுலபமாக கவரப்பட்டுவிடுவீர்கள்.

உங்கள் மனத்திரையில் உங்கள் வாழ்க்கையில் நடந்த
மகிழ்சிகரமான நிகழ்சிகளை படங்களாக மாட்டி வையுங்கள்.
அவை தந்த மகிழ்சிகரமான நினைவுகளை அடிக்கடி
நினைவு கூர்ந்து உங்கள் காரியங்களில் செயல் படுங்கள்.
வெற்றியும் கிட்டும். மன அமைதியும் கிட்டும்.

உங்களுடைய அன்றாட வேலைகளை போல மனதில்
அடிக்கடி சந்தோசமான நிகழ்சிகளை நினைப்பதற்கு நேரம்
ஒதுக்க வேண்டும். அடிக்கடி உங்கள் மனதில் சந்தோசமான
நிகழ்சிகளை செலுத்தி கொண்டே இருந்தால் உங்களுக்கு
மன அமைதியும் கிட்டும் அதன் விளைவாக உங்களுடைய
காரியத்தில் வெற்றியும் கிட்டும்.

ஒரு காரியம் நடக்காது அல்லது தோல்விதான் என்ற
நினைவு வரும்போது உடனடியாக அதற்க்கு மாற்று மருந்தாக
நாம் வெற்றியடைய போகிறோம் நமக்கு சாதகமாக
அந்த காரியம் நடக்கும் என்று எண்ணுங்கள்.

உடனே அந்த தோல்வி எண்ணங்கள்
இருந்த இடம் தெரியாமல் போய் விடும். உங்கள் காரியமும்
நிச்சயமாக வெற்றி அடையும்.

எந்த சக்தியாலும் உங்களை தோல்வி அடைய செய்ய முடியாது
என்று அடிக்கடி எண்ணி கொண்டே இருங்கள். உங்களையும்
அறியாது உங்கள் மனது எப்போதும் சந்தோசமாகவே இருக்கும்.

என்னதான் நம்முடைய மனதை சந்தோசமாக வைத்துகொள்ள
நினைத்தாலும் மனம் என்பது ஒரு மாறும் குணமுடைய
மனித அங்கமாகும். அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று
கூறினார்கள். ஒரு இடத்தில் நிலையாக இருக்காது.

தியானம் என்னும் அற்புத கலையினால் நம்முடைய
மனதை நிலையான ஒரு இடத்தில நிறுத்தி மனதை
எப்போதும் சந்தோசமாக வைத்திருக்கலாம் ...

Friday, June 20, 2014

ஓட்டு வந்தது எப்படி?

ஓட்டு வந்தது எப்படி?

தேர்தலில் வாக்கு அளிக்கிறோம். இதனை ஆங்கிலத்தில் vote என்ற சொல் voice of tax payers everywhere என்பதன் சுருக்கம் ஆகும். அதாவது வரி செலுத்துவோரின் குரல் என்று பொருள் தரும். காலப்போக்கில் எல்லாருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டதால், வரி செலுத்தாதவர் அளிக்கும் வாக்கும் ஓட்டு என்றே அழைக்கப்பட்டது.

Thursday, June 12, 2014

தன் வாழ்வில் முன்னேற விரும்புபவன் ஆறு குணங்களை விட்டுவிட வேண்டும்

தன் வாழ்வில் முன்னேற விரும்புபவன் ஆறு குணங்களை விட்டுவிட வேண்டும் என்கிறது விதுரநீதி......

அவை
1. தூக்கம்,
2. சோர்வு,
3. அச்சம்,
4. கோபம்,
5. சோம்பேறித்தனம்,
6. காரியத்தை ஒத்திப்போடுதல்.

விதுரரே அந்த ஆறு குணங்களை விட்டதால்தான் பஞ்ச பாண்டவர்களை எல்லா ஆபத்தில் இருந்தும் காப்பாற்றினார் எப்படி?

மாமன், சகுனி, துரியோதனின் பங்காளிகளை வேருடன் களைய திட்டம் தீட்டினான். வாரணாவதம் எனும் இடத்தில் விளையாட்டுகளைக் கண்டு களித்து ஒரு வருடம் சுகவாசியாக அரசு மாளிகையில் தங்கி உடல், மனம் இவற்றைத் தேற்றிக்கொள்ள பாண்டவர்களை அனுப்பினான். கூடவே குந்தியும் சென்றாள். திருதராஷ்டிரனே உத்தரவு போட்டதால் யாருக்கும் சந்தேகமே வரவில்லை.


சகுனியின் நம்பிக்கைக்கு உகந்த புரோசனன் எனும் கட்டிடக் கலை நிபுணன் உதவியால் அரசு மாளிகை அரக்கு மாளிகையாகக் கட்டப்பட்டது. மரத்தால் கட்டப்பட்ட கிரிடாக்ரஹம் (விளையாட்டு மாளிகை) சகுனியின் உத்தரவுப்படி அரக்கினால் பூசப்பட்டது. இன்னும் சில இடங்களில் வெறும் நெய், கொழுப்பு என்று சீக்கிரம் எரியும் பொருட்களால் நிரப்பப்பட்டது. ஒரே வாசல் வழியேதான் உள்ளேயும் வெளியேயும் போக முடியும். பாண்டவர்கள் வாரணாவதத்துக்குக் கிளம்பும் போது விதுரர், சாப்பாட்டில் விஷம். அக்னி இரண்டிலும் மிக மிக னாக்கிரதையாக இருக்கும்படி தருமரிடம் கூறினார். அவர்கள் சென்றபின் முழு விவரமும் அறிந்த விதுரர் உறங்கவே இல்லை. தூக்கத்தைக் கைவிட்டார். அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் தப்ப, சுரங்கம் தோண்டுவதில் நிபுணன் ஒருவனை அனுப்பிவைத்தார் விதுரர். பகலில் புரோசனனை அழைத்துக்கொண்டு பாண்டவர்கள் சென்ற சமயத்தில், அவன் சுரங்கபணியில் ஈடுபட்டான்.

அதேசமயம் துரியோதனன் அருகிலேயே இருந்தார் விதுரர், சிறிதும் பயப்படவில்லை. சகுனி துளி மோப்பம் பிடித்தாலும். விதுரர்உயிருடன் இருப்பது கடினம். அவர் அச்சப்படவில்லை. பீஷ்மரிடம் இதைப்பற்றி மூச்சும் விடவில்லை. துரியோதனன் செய்த ஏற்பாட்டை முறியடிக்க, ஒரு நிமிடத்தையும் வீண் செய்யவில்லை. நாளைக்குச் செய்யலாம் என ஒத்திப் போடவில்லை. சுரங்கம் அமைக்கும் பணி நிறைவடைந்தது அரக்கு மாளிகைக்கு வந்த ஒரு வேட்டுவப் பெண், தன் ஐந்து மகன்களுடன் விருந்தும் மதுவும் உண்டு களித்தாள். அந்த மாளிகையில் அவர்கள் மயங்கிக் கிடந்தபோது, கடைசியாக வெளியேறிய பீமன் ஒரு தீப்பந்தத்தை மாளிகையின்மேல் எறிந்துவிட்டுச் சென்றான். அதுவே கடைசி விருந்தாக ஆயிற்று அவர்களுக்கு! பாண்டவர்கள் இறந்ததாக எல்லோரும் நினைத்தார்கள். அதேசமயம் விதுரர் அனுப்பிய ஆள் சுரங்கம் வழியாக கங்கைக் கரைக்கு அவர்களை அழைத்துச் சென்றான். பாண்டவர்கள் பிழைத்தார்கள். ஏக சக்ர நகரத்தில் வசித்தார்கள். என்றெல்லாம் மகாபாரதம் விரிகிறது என்றால், அதற்குக் காரணம் விதுரரின் இந்த குணங்கள்தான்!

ஷட்தோஷாஹா புருஷேணேஹ
ஹாதவ்யா பூதிமிச்சதா!
நித்ரா தந்த்ரா பயம் குரோத
ஆலஸ்யம் தீர்க சூத்ரதா.

Thursday, March 6, 2014

தற்கொலை அதிர்ச்சி ....

வேண்டாம் விபரித முடிவு....

 தற்கொலை அதிர்ச்சி

உலகில் தினமும் 3 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 2 பேர் இறக்கிறார்கள். இதுபோல தினமும் 6 லட்சம் பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆண்டுக்கு 11 லட்சம் பேர் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்கிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகில் 1 லட்சம் பேருக்கு 14 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வளமான நாடுகள் வரிசையில் இருக்கும் அமெரிக்காவில் கூட ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதாவது ஒருலட்சம் பேரில் 12 பேர் தற்கொலை செய்கிறார்கள்.

உலகில் தற்கொலைகள் அதிகம் நடக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நமது நாட்டில் தற்கொலைக்கான முயற்சிகள் அதிகமாக இருப்பதாக, ஆய்வுகள் கூறுகின்றன. 120 கோடி மக்களை கொண்ட பெரிய தேசமான நம்நாட்டில் ஆண்டுக்கு 1 லட்சத்து 87 ஆயிரம் பேர் இந்த துயர முடிவை எடுக்கிறார்கள். அதிலும் உழைக்கும் திறன் கொண்ட 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் தான் இந்த துயர முடிவை அதிகமாக எடுக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கடன் தொல்லை, குடும்ப பிரச்சினை விவசாய வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை என்ற வரிசையில் தற்போது இளம் வயதினரின் தற்கொலை மனிதவள ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாதிப்பதில் தோல்வி, எதிர்பார்ப்பில் ஏமாற்றம் ஆகியவை இளம் வயதினரின் தற்கொலைக்கு முக்கிய காரணங்கள். இவை மட்டுமல்ல, செல்போன் போன்ற தொழில் நுட்பங்கள், சமூக வலைத்தளங்கள், மோசமான வலைத்தளங்கள் போன்றவையும் இவர்களின் தற்கொலைக்கு காரணங்களாக அமைகின்றன.

தற்கொலை செய்வோரில் 60 சதவீதம் பேர், இளம்பெண்கள்; 40 சதவீதம் பேர், ஆண்கள். ஒவ்வொரு மனித உயிரும் விலை மதிக்க முடியாதது. இந்த உயிர் ஏதாவது ஒரு நற்செயலுக்காகத் தான் படைக்கப்பட்டிருக்கும். அதை வீணாக மாய்க்கக் கூடாது.

இதற்கு நல்ல உதாரணம், சமீபத்தில் மறைந்த கவிஞர் வாலி. இவர் இளமையில் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்ட போது, தற்கொலை செய்து கொள்ளச் சென்றார். அப்போது ஒரு டீக்கடையில் ‘மயக்கமா கலக்கமா...‘ என்ற கவியரசு கண்ணதாசன் பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதில் வரும் ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும், வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை‘ என்ற வரிகள், அவரது தற்கொலை எண்ணத்தை மாற்றின. இதைக் கேட்டு தற்கொலை எண்ணத்தை கைவிட்டு, சினிமாவில் கண்ணதாசனுக்கு இணையாக பாடல்கள் எழுதி, மிகப்பெரிய உயரத்திற்கு சென்றவர், வாலி.

முதல் செல்போன்....

முதல் செல்போன்....

சுமார் 55 வருடங்களுக்கு முன்பு லேண்ட் லைன் தொலை பேசிகள் கூட அதிக அளவு இருந்ததில்லை. மேலும் இந்த காலக்கட்டத்தில் தான் செல்போன் வருகையும் தொடங்கியது. செல்போனைக் கண்டுபிடித்தவர் சிகாகோவைச் சேர்ந்த மார்ட்டின் கூப்பர். இவர் செல்போன் உலகின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
1956–ல் எரிக்ஸன் நிறுவனம் மிகப்பெரிய வடிவில் ஒரு செல்போனை வடிவமைத்து அறிமுகப்படுத்தியது. இதன் எடை மிக மிக அதிகம். இந்த வகை போனை கார் மற்றும் வாகனங்களில் மட்டும் தான் கொண்டு செல்ல முடியும். இது முதன் முதலில் ஸ்வீடனில் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து சுமார் 11 ஆண்டுகள் வரை 125 பேர் மட்டுமே இதன் வாடிக்கையாளர்களாக இருந்தனர். மோட்டோரொல்லா கம்பெனி தான் முதல் நவீன செல்போனை உலகிற்கு காட்டியது. இதன் உரிமையாளரான மார்ட்டின் கூப்பர் 1973ம் வருடம் ஏப்ரல் 3–ந்தேதி உலகின் நவீன செல்போனை கண்டுபிடித்து அதன் மூலம் பேசினார். இவர் என்ஜினீயரிங் படிப்பு முடித்து பொறியாளராக இருந்தாலும், தொழிலதிபராகத்தான் திகழ்ந்தார். முதலில் வயர்லெஸ் போன், ஆண்டனாக்கள் விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வந்தார்.
செல்போன் கண்டுபிடிப்புக்கு அடிப்படை ஆதாரத்தை அமைத்துக் கொடுத்தது, அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியை அடுத்துள்ள முர்ரேஹில் என்ற ஊரில் உள்ள பெல் லேபாரட்டரி தான். இந்த நிறுவனத்தினர் வயர்கள் இல்லாத வாக்கி டாக்கி, ரேடியோவை 1947ல் கண்டுபிடித்து ராணுவத்திற்கு வழங்கினர். அப்போது இதன் எடை மிக அதிகமாக இருந்தது. 1960–க்கு பின்பு தான் இவற்றை ஓரளவிற்கு நவீனமாக மாற்றினர்.
அதைதொடர்ந்து 1973–ம் வருடம் மார்ட்டின் கூப்பர் கையில் வைத்து பேசக்கூடிய நவீன உயர்ரக செல்போனை முதன் முதலில் கண்டுபிடித்தார். இந்த போனின் எடை 2 கிலோ மட்டும் தான். கூப்பர் அந்த போனில், தனது போட்டி நிறுவனமான பெல் கம்பெனியின் அதிபர் ஜோயலுக்கு போன் செய்து ஹலோ... நான் மார்ட்டின் கூப்பர் பேசுகிறேன். செல்போனில், அதுவும் உலகின் முதல் நவீன போர்ட்டபிள் செல்போனில் இருந்து நடந்து கொண்டே பேசுகிறேன் என்று நக்கலாய் பேசினாராம்.
கூப்பர் தயாரித்த முதல் நவீன செல்போனை, செங்கல் போன், ஷூ போன் என்று அழைத்தனர். இந்த போனை முழுசாக மின் சார்ஜ் செய்ய 10 மணி நேரமாகும். அதிலிருந்து சுமார் ½ மணி நேரம் மட்டுமே பேச முடியும். இது சரிவராது என்று சொன்னவர்களிடம், கவலைப்படாதீர்கள், இதற்கு மேல் இதை யாரும் பயன்படுத்த மாட்டார்கள் என்றாராம். ஆனால் இன்றைக்கு செல்போன் பேசுபவர்கள் இந்த நேரத்திற்குள்ளாக மட்டுமா பேசுகிறார்கள்?.
சுமார் 40 வருடங்கள் கழித்து தற்போது மிக மிக நவீனமான வகைகளில் புதிய ரக செல்போன்கள் பல்வேறு கம்பெனிகள் தயாரித்து வெளியிட்டு வருகின்றன. அதில் தற்போதைய புதிய ரகம் செல்போனின் சொந்தக்காரர் அதை தவறவிட்ட நிலையில், மற்றவர்கள் அந்த போனை எடுத்து உபயோகிக்க முயற்சித்தால், தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் அழித்து விட்டு, தன்னையும் செயல் இழக்க செய்து, யாரும் பயன்படுத்த முடியாத வகையில் வடிவமைக்கப்பட்ட மிக மிக நவீன ரக செல்போன்கள் தயாரிக்கப்பட்டு வெளி வந்துள்ளன. இந்த வகை போன்களை போயிங் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.