Monday, July 22, 2013

தூதுவளை (Solanum trilobatum)

தூதுவளை (Solanum trilobatum)

 

சளிதொல்லைகளை துரத்தும் தூதுவளை

Post
சளிதொல்லைகளை துரத்தும் தூதுவளை

தூதுவளை கீரை தன்னியசையாக வளரக் கூடிய ஒரு வகை கொடி இனத்தை சேர்ந்தது . இக்கீரை இந்தியாவில் அதிகமாக காணப்படுகிறது .சளிதொல்லைகள் நீங்க இக்கீரையை அதிகம் பயன்படுத்துகின்றனர் இந்தியாவில் வாழும் மக்கள் .இச்செடி பார்பதற்கு கத்தரி செடி போல் இருக்கும் .இலைகள் கனமாகவும் அதன் மேல் கொக்கி போல் முட்கள் காணப்படும் .இக்கீரையை எளிதாக பறிக்க முடியாது முட்கள் இருப்பதால் கவனமாக பறித்து பயன்படுத்த வேண்டும் .சளிதொல்லைகள் நீக்குவதில் இது மிக சிறந்த மருந்தாகும் .சித்த மருத்துவர்கள் இக்கீரையை அறிய மூலிகையாக கருதினார்கள் .தூது வளை இல்லை ,பூ ,காய் ,கொடி ஆகியவை அனைத்தும் மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது .


100 கிராம் கீரையில் உள்ள உயிர் சத்துகள்

சுண்ணாம்பு சத்து 334 மில்லிகிராம்
மனிசத்து 52 மில்லிகிராம்

இரும்பு சத்து 5 மில்லிகிராம் உள்ளது


மருத்துவ குணங்கள்


பசி இல்லாதவர்கள் இக்கீரையை நெய் விட்டு வதக்கி அரைத்து உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் பசி தானாக உண்டாகும் .
தலை பாரம் ,உடல் வலி , மூக்கில் நீர் வருதல், முதலிய நோய்கள் நீங்கும் .
துளசி சாறுடன்,தூது வளை சாறும் ஒரு தம்பளர் காய்ச்சிய பசும் பாலில் சிறிதளவு ஒரு வாரம் அருந்தி வந்தால் ஆஸ்துமா நோய் போல் இழுப்பும் சளியும் நீங்கும் .
தாது விருத்தியடைய தேவையான அளவு தூது வளை பூ ,முருங்கை பூ இவற்றை உலர்த்தி எடுத்து இடித்து சக்கரை சேர்த்து காய்ச்சிய பசும் பாலில் கலந்து அருந்தி வந்தால் தாது விருத்தி உண்டாகி நரம்பு பலம் அடையும் .
உடல் பலமும், முக வசீகரமும் ,அழகும் பெறலாம் .
புத்தி தலிவை உண்டாக்கும் .அறிவு வளர்ச்சியை பெருக்கும்.
நிமோனியா ,டைபாய்டு ,கபவாத ஜீரம் ,கண்ணிவாத ஜீரம் போன்ற நோயிகளுக்கும் இக்கீரை மருந்தாகிறது .
வயிற்று வலி , நீரடைப்பு ,வெள்ளை ,வெட்டை போன்ற உபாதைகளும் நீங்கும் .
இளம் பெண்களுக்கு பால் சுரக்க செய்கிறது .
ஜீரத்தால் ஏற்படும் காது மந்தம் ,காது எழுச்சி ,காது குத்தல் ,மற்றும் நமைச்சல் ,உடல் எரிச்சல் ,செரியமந்தம் ,விந்து நஷ்டம் இலைகள் நீங்கும் .
வாய்வை கண்டிக்கும் .

பயன்படுத்தும் முறை

தூது வளை இலைகளை புதினா,கொத்தமல்லி , இஞ்சி ஆகியவற்றை நெய்யில் வதக்கி அரைத்து துவைலாக பயன்படுத்தலாம் .
தோசைமாவுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம் .
இக்கீரையை நெய்யில் வதக்கி உப்பு, புளி,காரம் , சேர்த்து அரைத்து துவைலாக பயன்படுத்தலாம் .
இக்கீரையை பசும் பாலுடன் சேர்த்து காய்ச்சி குடிக்கலாம்

 https://www.facebook.com/subha.b.murugan?ref=tn_tnmn

No comments:

Post a Comment