மருத்துவ குறிப்புகள்

பற்களில் காவி கலந்த மஞ்சள் கறை தோன்றுவது ஃப்ளூரோசிஸ் எனும் நோயின் முக்கிய அறிகுறி. ஃப்ளோரைடு அதிகமாவதால் இது ஏற்படுகிறது.
பற்கள் பலம் பெற பால், தயிர், நெய், பசலை, அவரை ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது நலம்.
தாவரக் கொழுப்பிலும் வாசலைன் கலப்பிலும் தயாரிக்கப்படும் சோப்புகள் உடலுக்கு நல்லது.
கண்களில் தூசு விழுந்தால் நன்றாக மூடிக் கொண்டு விழிகளை அசையாமல் வைத்துக் கொள்ளுங்கள்.
நகப்பூச்சு போட்டுக் கொள்வதால் சிலருக்கு ஓவ்வாமை ஏற்படலாம். இதனால் நகத்தைச் சுற்றி புண், அரிப்பு தடிப்பு போன்றவை உருவாகலாம்.
உடலில் அரிப்பு இருந்தால் மீன், கத்தரிக்காய் சாப்பிடக் கூடாது.
அல்சர் ஏற்படக் காரணம் கார உணவு, நேரந்தவறிய உணவு, அதீத உணவு ஆகியவையே.
ரத்த சோகை உள்ளவர்கள் இரும்புச் சத்து நிறைந்த அவரைக்காயை சாப்பிடுவது நல்லது.
வெண்டைக்காய், புடலங்காய், பூசணிக்காய், பீட்ரூட் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.
பித்த வாந்தியை தவிர்க்க காரம், மசாலா உணவுகளை தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment