Showing posts with label ஆண்கள். Show all posts
Showing posts with label ஆண்கள். Show all posts

Wednesday, June 25, 2014

சந்தோஷமாக இருக்கணுமா...! அப்ப காதலிக்காதீங்க...!

சந்தோஷமாக இருக்கணுமா...! அப்ப காதலிக்காதீங்க...!
 சந்தோஷமாக இருக்கணுமா...! அப்ப காதலிக்காதீங்க...!காதல் செய்துவிட்டு, ஏன் செய்தோம் என்று பலர் வருத்தப்படுவதுண்டு. காதலில் விழுந்துவிட்டால், சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. எதைச் செய்வதாக இருந்தாலும், காதலனிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும்.

எனவே திருமணம் செய்வதற்கு முன், காதலில் விழாமல் இருந்தால், பிடித்த அனைத்தையும் எந்த ஒரு இடையூறு இல்லாமல் மேற்கொண்டு, ஜாலியான வாழ்க்கையை வாழலாம். அதிலும் பெண்கள் வெட்கப்பட்டு, அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருந்த காலம் எப்போதோ மாறிவிட்டது.

தற்போது பெண்களும் அனைத்தும் அவர்களது விருப்பத்துடன் இருக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். குறிப்பாக தற்போதுள்ள பெண்களுக்கு சுதந்திரம் அவசியமாகிவிட்டது. பெண்கள் காதலில் விழாமல் இருந்தால், எந்த மாதிரியான சந்தோஷத்தை அடையலாம் என்று பார்க்கலாம்….

• காதல் செய்யாமல் இருந்தால், எந்த ஒரு செயலை செய்ய நினைத்தாலும் யாரிடமும் அனுமதிப் பெற வேண்டிய அவசியம் இல்லை. நினைத்ததை எந்நேரத்திலும் பயமின்றி, தடையின்றி செய்யலாம். நாம் செய்யும் செயல் காதலருக்கு பிடிக்கவில்லை என்றால் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட வழிவகுக்கும்.

• பெண்களுக்கு ஷாப்பிங் என்றால் மிகவும் பிடிக்கும். சில பெண்களுக்கு அதுவே பொழுதுபோக்காக இருக்கும். ஆனால் ஆண்களுக்கு ஷாப்பிங் என்றால் பிடிக்காது. ஏனொனில் பர்ஸ் காலியாகி விடும் என்று நினைப்பார்கள்.

• காதல் செய்யாமல் இருந்தால், அலுவலகத்தில் நல்ல ஆர்வத்துடன் வேலை செய்யலாம். அதிலும் அலுவலகத்தில் கொடுத்துள்ள இலக்கை அடைய எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்ய முடியும்.

• காதல் வந்துவிட்டால் நண்பர்களுடன் நேரம் செலவழிக்கவே முடியாது. ஆனால் காதலில் மட்டும் விழாமல் இருந்தால், நண்பர்களுடன் எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சந்தோஷமாக செலவழிக்கலாம்.

Saturday, June 21, 2014

இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.

இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.

1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார்.

2) உங்களின் மோசமானச் சமையலையும் சிரித்துக் கொண்டே சாப்பிடுவார்.

3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார்.

4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார். உங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சிப்பார்.

5) உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால், எத்தனை அழகான பெண்கள் முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள்.

6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில், அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த வேலையிலும் கவனம் செல்லாது .

7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.

8. உங்களை தொலைவில் இருந்துப் பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள் மௌனங்கள் அனைத்தையும் அழகாய் மொழி பெயர்ப்பார்.

9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார். எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ள உதவுவார்.

10) உங்களை வேலைக்காரியாய், சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு, குழந்தையாய், தோழியாய், தாரமாய், தாயாய் பார்ப்பார்.

11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள் அழுகை பார்த்து அதிகம் வருந்துவார். நீங்கள் சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்.

Friday, February 21, 2014

22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.

22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.

1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.

2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம்
" இதெல்லாம் எங்க உறுப்படப்போது?" என்பது
போன்றே இருக்கும்.

3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.

4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும்
ரசிப்பீர்கள்.

5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது.

6) தினமும் shave செய்யாவிட்டால், வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.

7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.

8. உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ, அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.

12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள். காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .

14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.

15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.

Thursday, December 19, 2013

ஆண்கள்,

ஆண்களின் வாழ்க்கை மிக எளிதாக இருப்பதர்க்கு காரணம் என்ன? !!!!!!!!!

டாப் 5

1. ஒரு வார பயணமென்றாலும் கூட ஒரே ஜீன்ஸ் போதும்.

2. ஒரே மாதிரியான ஹேர் கட் பல வருடங்கள் மெயின்ட்டன் செய்வது.

3. 10 சொந்தக்காரங்களுக்கு 10 நிமிஷத்தில் ஷாப்பிங் பண்னும் திறன் (மாமியார் வீட்டு சைடுனா 5 நிமிஷம் கூட போதும்).

4. தன் நண்பர்களின் வட்டாரத்தில் தன்னை அழைக்காமல் போனால் கூட நண்பர்களாக தொடருவார்கள், அதே சமயம் அழைத்த பங்கஷனுக்கு போனால் அதே கலர் அல்லது அதே மாதிரி சட்டை போட்டிருந்தால் "ஜெர்க்" ஆகாமல் அந்த மனுஷனையும் நண்பர்கள் ஆக்கிகொள்வார்கள்.

5. எந்த வித ஒரு தொலைபேசி காலும் அரை நிமிடத்தில் டக்குனு முடிச்சிடுவாங்க ( இதில் சிலர் சில அழைப்புகளிட்கு மட்டும் விதி விலக்கு)

Thursday, October 17, 2013

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்! நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம்.
1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும்.
2. மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா?
3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.
4. ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்!
5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.
6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.
7. பெண்களென்றால் வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. வித விதமாக நாம் உண்பதைப்போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். உணவு வகைகளை ருசிக்கும் அதேநேரம் உணவக பழக்கங்கள், எப்படிப் பறிமாறுகிறார்கள் என்ற விஷயமெல்லாம் தெரிந்துகொள்ளட்டும்.
8. நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.
9. நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் அறியட்டும்.
10. உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நிங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்.
11. புத்தகம், கவிதை, நல்ல நாவல்கள் ஆகியவற்றை மகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.
12. உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.
13. இன்றைய உலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் எதிர் பார்க்க முடியாது. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது, வண்டி டயரை மாற்றுவது, போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக கொடுங்கள்.
14. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்! மறக்காமல் மகளின் நல்வாழ்வுக்காக பிரார்த்தியுங்கள்.

Wednesday, October 2, 2013

ஆண்கள் என்றும் இளமையாக இருக்க..!

ஆண்கள் என்றும் இளமையாக இருக்க..!
ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ
தாண்டினாலும், என்றும் 'மார்க்கண்டேயனாகவே'
தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய
தோற்றத்தை தக்கவைத்துக்கொள்வது ஒன்றும் பெரிய
கம்ப சூத்திரமோ அல்லது பிரம்ம
வித்தையோ அல்ல. . . ! மாறாக கொஞ்சம் மெனக்கிட்டால்
வயது ஏறிகொண்டு போனாலும், குறைந்த
வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும்.
நமது வயதை முதலில் வெளிப்படுத்துவது சருமம்
தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது
ஆயுட் காலமும் நீடித்து இருக்கும். அப்படி என்றும்
இளமையுடன் இருக்க இதோ சில டிப்ஸ். . . ! .
நாம் அதிகமாக சூரிய வெளிச்சத்தில்
பயணிப்பதாலும், எண்ணெய் அதிகமுள்ள
உணவுகளை உட்கொள்வதாலும், மாசுள்ள
காற்றை சுவாசிப்பதாலும் நமது சருமத்தில்
முதுமை தோற்றம் தெரிகிறது. இதனை தடுக்க, சிறந்த
முதுமை தடுப்பு (ஆன்டி ஏஜிங்)
தயாரிப்புகளை பயன்படுத்தவது நல்லது. மேலும்
அதிகமான தண்ணீர் பருகுதல் சருமத்தை பாதுகாக்கும்.
பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம்
20 விழுக்காடு கூடுதல் கடினத்தன்மையுடன்
இருக்கும். ஆயினும் வயது கூடும்போது கொல்லாஜன்
எனும் புரதம் குறைவதால் சருமத்தில் சுருக்கம்
ஏற்படுகிறது. உடல்
கூறுவியலின்படி பெண்களை காட்டிலும்
ஆண்களின் முதிர்ச்சி சில காலத்திற்கு பிறகு தான்
தோன்றும், ஆனால் ஒரு சில பழக்கவழக்கங்களினால்
ஆண்களுக்கு இயல்பான வயதை காட்டிலும்
முதுமையான தோற்றம் காணப்படுகிறது.
தொடர்ந்து ஷேவிங் செய்வதன் காரணமாக முகத்தில்
முதிர்ச்சி தோன்றும், அதனால் ஈரப்பதத்துடன் கூடிய
ஷேவிங் கிரீமை பயன்படுத்துவது நல்லது. மேலும்
ஷேவிங் செய்யும்போது முடிகள் வளர்ந்திருக்கும்
திசையில் ஷேவ் செய்து, வெதுவெதுப்பான
தண்ணிரால் முகத்தை கழுவ வேண்டும்.
அவ்வாறு செய்தால் முகம் வாடாமல் புத்துணர்ச்சியுடன்
தோன்றும்.
ஆண்கள்
என்றும் இளமையுடன் இருக்க தொடர்ந்த
உடற்பயிற்சியும் பழங்கள், காய்கறிகள்,
பருப்பு வகைகள், உடலுக்கு குளிர்ச்சி தரும்
இறைச்சிகள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கிய
உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல்
திசுக்களை புதுப்பிக்கும் திறனுடைய
ஆன்டிஆக்ஸிடன்ட் குணம் நிறைந்த பேக் செய்யப்பட்ட
உணவுகளை உட்கொள்வதால், முகம் சுருக்கம்
இல்லாமலும் மென்மையாகவும் காணப்படும்.
மேலும் பசலை கீரை, அவுரிநெல்லிகள், கேரட்,
தக்காளி, பச்சை தேநீர் போன்றவற்றையும்
சேர்த்துகொள்வது மிகவும் நல்லது.
சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மது மற்றும்
புகைப்பிடித்தலை தவிர்க்கவும். சிகரெட்டுகளில்
உள்ள நிக்கோட்டின் உடலின் இரத்த
ஓட்டத்தை குறைப்பதால் சருமத்திற்கு தேவையான
சத்துகள் சென்று அடைவதில்லை, ஆகையால்
சுருக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
தூக்கம் கெடுவதால் உடல்நிலை பெரிதும்
பாதிக்கப்படும் என்பதை அநேகமானோர்
அறிவதில்லை. இரவில் குறைந்தது 6-7 மணி நேர
ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்பதும் இதைத்
தொடர்ந்து கடைபிடித்து வந்தால் மனதில்
புத்துணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திலும்
குறிப்பாக சருமத்திலும் பொலிவு ஏற்படும்.
இது தவிர, உடல் ஆரோக்கியத்திற்கும்,
உடலுறவு பழக்க வழக்கத்திற்கும் நெருங்கிய
தொடர்பு இருப்பதால், அதுகுறித்த
விழிப்புணர்வை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இவையெல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்கள்
தமது கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருந்தாலே,
முகத்தில் பொலிவும் இளமையும்
கூடிக்கொண்டே போகும்.

Saturday, September 28, 2013

வழுக்கை வராமல் தடுக்க `தலை' சிறந்த யோசனை


 வழுக்கை வராமல் தடுக்க `தலை' சிறந்த யோசனை


வழுக்கைத் தலை பிரச்சினையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல், தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை. இத்தகைய முறையான பராமரிப்பின்மையினால், ஆண்கள் இளம் பருவத்திலேயே முடி உதிர்தல் பிரச்சினைக்கு உள்ளாகி, வழுக்கையை பெறுகின்றனர்.

உண்மையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக முடி உதிர்தல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். ஆனால் பெண்கள் முடி உதிர்தல் பிரச்சினை ஆரம்பித்த உடனேயே, முடியை சரியாக பராமரிக்க ஆரம்பித்து விடுவதால், வழுக்கை தலை ஏற்படாமல் தப்பிக்கின்றனர்.

ஆண்களோ, அதிகப்படியான வேலைப்பளுவினால், முடியை சரியாக பராமரிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் வழுக்கை தலையை அடைகின்றனர். என்ன செய்வது, வழுக்கை தலை வராமல் தடுக்க வேண்டுமெனில் முடியை பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது.

எனவே ஆண்களே! நேரம் கிடைக்கும் போது, வெளியே அதிகம் ஊர் சுற்றாமல், சற்று முடியின் மீது அக்கறை கொண்டு, சில எளிமையான முடி பராமரிப்புக்களை மேற் கொள்ளுங்கள்.

உங்களுக்காக முடியை பராமரிப்பதற்கான சில எளிமையான வழிகளை பட்டியலிட்டுள்ளோம். இத்தகைய வழிகளை பின்பற்றினால், முடி ஆரோக்கியமாக இருப்பதோடு, முடி உதிர்தல் பிரச்சினையிலிருந்து விடுபட்டு, வழுக்கையிலிருந்து தப்பிக்கலாம்.

எண்ணெய் மசாஜ்: அனைத்து ஆண்களும் முடி உதிர்தலைத் தடுக்க முதலில் செய்ய வேண்டியது, வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு பாதாம், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்களைக்கொண்டு நன்கு தலைக்கு மசாஜ் செய்து, ஊற வைத்து குளிப்பதுதான். இதனால் முடிக்கு தேவையான சத்துக்களை கிடைத்து, முடி நன்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.

தேங்காய் பால்: தேங்காய் பால், முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, முடியில் ஏற்படும் வறட்சியை தடுக்கும். எனவே தேங்காய் பாலை தலைக்கு தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். குறிப்பாக இந்த முறையால் முடி நன்கு மென்மையாகும்.

கற்றாழை: முடி வலிமையோடு வளர வேண்டுமெனில், கற்றாழை ஜெல்லைக் கொண்டு ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், முடி உதிர்தல் குறைந்து, ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கலாம்.

வேப்பிலை: வேப்பிலை அரைத்து ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளித்தால், ஸ்கால்ப்பில் உள்ள அல்கலைன் சீராக இருப்பதோடு, முடி உதிர்தலும் நிறுத்தப்படும். மேலும் இந்த முறையை இன்னும் சிறப்பானதாக மாற்றுவதற்கு, வேப்பிலை பேஸ்டுடன், தேன் மற்றும் ஆலிவ் ஆயிலை கலந்து தேய்க்கலாம்.

முட்டை: முடி பராமரிப்பில் முடிக்கு புரோட்டீன் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். முடி நன்கு வலுவோடும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமெனில், இந்த புரோட்டீன் சிகிச்சையை வாரத்திற்கு 34 முறை மேற்கொள்ள வேண்டும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், முட்டை உடைத்து பவுலில் ஊற்றி நன்கு அடித்து, ஈரப்பதமுள்ள முடியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும்.

வெந்தயம்: 2-3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை நீரில் 8-10 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளித்தால், முடி உதிர்வது குறைவது மட்டுமின்றி, முடியின் வளர்ச்சியும் அதிகரித்து, பொடுகுத் தொல்லையும் நீங்கும்.

அவகேடா: அவகேடோ மற்றும் வாழைப்பழத்தை நன்கு மசித்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலசினால், முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

ஆரஞ்சு: ஸ்கால்ப்பில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் பொடுகு இருந்தால், அப்போது அதனை போக்குவதற்கு, ஆரஞ்சு பழத்தின் தோலை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி ஊற வைத்து, குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

மருதாணி இலை: நல்ல கருமையான மற்றும் அடர்த்தியான முடி வேண்டுமெனில், மருதாணி இலையை அரைத்து, முடியில் தடவி, மூன்று மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

எலுமிச்சை சாறு: முடி பராமரிப்பில் அதிகம் பயன்படுவது எலுமிச்சை என்பது தெரிந்த விஷயம் தான். அத்தகைய எலுமிச்சையின் பாதியை தேங்காய் எண்ணெயில் பிழிந்து, ஸ்கால்ப்பில் தடவி, 34 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

வேண்டுமெனில் இந்த முறையை இரவில் படுக்கும் போது செய்து, தலையில் ஒரு பிளாஸ்டிக் கவரைக் கொண்டு சுற்றிக் கொண்டு தூங்கி, காலையில் குளிக்கலாம். ஆக மொத்தம் முடி உதிர்வதை தடுத்து என்றென்றும் இளமையுடன் காட்சி அளிப்போம்.

Friday, September 13, 2013

ஒரு தாயின் அறிவுரை… திருமணமாகப் போகும் தன் மகனுக்கு:

திருமணம் ஆவதற்கு முன்னால் உன்னிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். இது உனக்கு வியப்பாக இருக்கலாம். பெண்ணுக்குத்தானே இப்படிச் சொல்லுவார்கள் என்று நினைக்கிறாயா? இல்லை கண்ணா... நாங்கள் மனம் திறந்து சொல்வதைச் சொல்லி விடுகிறோம். காதில் போட்டு வைத்தால் சில விஷயங்கள் மனதிலும் இறங்கும். அதுவே தக்க சமயத்தில் உதவக்கூடும்!

பெஸ்ட் அம்மா பெஸ்ட்!

இதுவரையில் பெண்ணென்று வீட்டில் உன் அம்மாவை மட்டுமே பார்த்திருக்கிறாய். அவள் சமைப்பதையும், வீட்டை வைத்துக் கொள்வதையும், பாடம் சொல்லித் தருவதையும் பாடுவதையும், கோலம் போடுவதையும், பண்டிகைகளை முழுமையாகக் கொண்டாடுவதையும் எதிலும் திறம்பட எடுக்கும் முடிவையும் பார்த்து என் அம்மாதான் பெஸ்ட் என்று எண்ணியதில் தப்பில்லை. உள்ளூர எனக்கு அது பெரிய கிரீடம்தான்!

இனிமேல் அதையே மனதில் அசைபோடாதே! அதைத் தாண்டி வா! அம்மா பெஸ்ட் என்ற உன் கருத்தை உள்ளத்தின் ஆழத்தில் மட்டும் வைத்துக்கொள். வார்த்தைகளில் உன்னவளுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. தாய் சொல்லைத் தட்டாதே! சிறிய முகமூடிதான். அதைத் திறம்படப் பயன்படுத்து! அது எல்லோரையும் மகிழ்விப்பதைப் புரிந்துகொள்வாய்.

தாய்க்குப் பின் தாரம்!

நலங்கு மஞ்சள் காயும் முன்பே பிரம்மதண்டத்தைத் தலையில் வைத்தது போல் எங்க அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்., அவர்களை அனுசரித்துக் கொண்டு போக வேண்டும் என்ற வசனங்களைப் பேசாதே! அப்படிச் சொன்னால் அவளுக்கு மனதில், அப்படியானால் அம்மா பிள்ளையாகவே இருக்க வேண்டியதுதானே. அப்புறம் எதுக்கு நான்? என்று சிறு கசப்பு உணர்வு தோன்றும். அவள்தான் உன் உலகம் என்பதை அவளுக்குப் புரியவை. அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்றும் சொல்லாதே! அதையே என்றாவது உன் மீது திருப்பக் காரணமாக நீ இருக்கக்கூடாது. சண்டையில்லாவிட்டால் நீ கேட்டதெல்லாம் கிடைத்திருக்குமா?

காபியை சர், புர் என்று உறிஞ்சிக் குடிக்காதே. உனக்கொரு மனைவி வந்தால், நல்லா வளர்த்திருக்கா என்று என்னைக் குறை சொல்வாள் என்று அடிக்கடி சொல்வேனே. இன்று உன்னுடைய நடை உடை பாவனையில் உயர்வைக் கண்டு நான் பூரிக்கிறேன். வரப் போகிறவள் பெருமையடைவாள். நல்ல ஆசானாகப் பணி ஆற்றிய நிறைவு எனக்கு.

தாயா? தாரமா?

அம்மா சமையலைத் தவிர வேறொன்றும் நீ அறியாததால் அது மிக உயர்வாக உனக்குத் தோன்றுவதில் வியப்பில்லை. இருந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை, எங்க அம்மா செய்கிற மாதிரி சேப்பங்கிழங்கு ரோஸ்ட், முருங்கைக்காய் சாம்பார் மாதிரி வராது என்று ஒப்பிட்டுப் பேசாதே! உன் அம்மாவுக்கு உன் மனைவியாகப் போகிற பெண்ணைப் போலக் கார் ஓட்டவும், வங்கிப் பணி ஆற்றவும், டைம் மேனேஜ்மெண்ட்டும் தெரியாதப்பா! நான் அன்றைய கெட்டிக்காரி! இவள் இன்றைய மங்கை!

அம்மாவின் கட்டளைகள் ஆறு!

உனக்கு உன்னிடம் உள்ள பேரன்பை மனதில் கொண்டு நான் சொல்லும் அறிவுரைகள் ஆறு:

1. அம்மா புராணம் பாடாதே!

2. அம்மாவோடு ஒப்பிடாதே!

3. அம்மாக் கோண்டு என்ற பட்டம் பயன் தராது!

4. அம்மாவைக் கொஞ்சம் பீடத்திலிருந்து இறக்கி வை. அவளும் சற்று இளைப்பாறட்டும்!

5. அம்மா தேவைப்பட்டபோதெல்லாம் உதவிக்கு வருவாள் என்பதை மட்டும் சொல்லி வை!

உன்னவளுடைய அம்மாவையும் மதிக்கக் கற்றுக் கொள்!

பின் குறிப்பு :- மாமனாரை உயர்த்திப் பேசுவதால் மருமகளுக்கு எந்தவித கசப்பும் ஏற்பட்டதாகச் சரித்திரமே கிடையாது! ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி... நீடூழிவாழ வாழ்த்துக்கள்...!

Monday, August 26, 2013

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???
1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில் பார்க்கும் போது.
2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது.
3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது.
4.எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும் திமிரையும் ஓரங்கட்டிவிட்டு, பெண்ணிடம் பணிவாய் பேசும் போது.
5. சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது.
6.காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன் குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது.
7.தன் தங்கைக்கு தான் இன்னொரு தந்தை என்பதை உணரும் போது.
8.இரு சக்கர வண்டியை உர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என உறுமாமல், சிக்னலில் வண்டியை நிறுத்தி விட்டு கண்ணாடியில் தலை முடியை சரி செய்யும் போது.
9.வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே நடக்கும் போது.
10.அப்பாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் கூட அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து வைத்திருக்கும் போது.
# சுயநலமில்லாத,செயற்கைத் தனமில்லாத எல்லா ஆண்களுமே அழகு தான்.