Thursday, March 19, 2015

படித்ததில் பிடித்தது,....

படித்ததில் பிடித்தது:

 


- 1. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை
ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.!
2. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு,
சிலருக்கு படிக்கட்டாகவும்,
சிலருக்கு எஸ்கலேட்டராகவும்,
சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது..

3. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும்
ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!
4. தோற்றுப்போய் வீடு திரும்புகையில்,
தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும்,
வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.
5. முதியோர் இல்லத்திற்கு
பணம் கொடுங்க,
பொருள் கொடுங்க,
உணவு கொடுங்க,
உடை கொடுங்க..
ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க..
6.
20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு..
அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு..
7. டாக்டரை மறந்து விட்டு
நர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும்
விசித்திரமான உலகம் இது.!
8.ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,
ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்
பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.!
9. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள்,
பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை..
10. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்..
இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்...
11.
கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்..
மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட வேண்டியிருக்கிறது.! 12.
மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள்..
ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்..
மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்..
13. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை..
அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்..
14. ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான்,
சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்..
15. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க
சரிதான்..
ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க..

1 comment:

  1. i just enjoyed all your writings and collections. its superb. i will be posting a few in my fb with your name tag so that all can enjoy.

    ReplyDelete