Saturday, July 12, 2014



 

பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

கைரேகையைப்போலவேநாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.

900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும்.

மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.


 https://www.facebook.com/subha.b.murugan

மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்....



மூளைக்கு வேலை கொடுக்க இதோ சில புதிர்கள்.
 
 
1. பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி?
2. எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச் செல்வீர்கள். அது என்ன?
3. தலையிலிருந்து கால் வரை நான் உபயோகப்படுவேன். அதனால் நான் மெலிகிறேன். நான் யார்?
4. இருபத்தைந்தை எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க முடியும்?
5. இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும், இளமையாக உணர வைக்கும். நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன?
6. என்னால் உங்களுக்கு வியர்க்கும்.நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்?
7. அதற்கு கைகள் உண்டு, ஆனால் எதையும் பிடிக்க முடியாது; பற்கள் உண்டு, ஆனால் கடிக்க முடியாது; கண்கள் உண்டு, ஆனால் பார்வை கிடையாது. அது என்ன?
8. என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது; எப்போதாவது பாடுவேன், ஆனால் பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை, ஆனால் முகம் உண்டு; நான் யார் தெரியுமா?
9. இங்கு பாதைகள் உண்டு, ஆனால் வாகனங்கள் செல்ல முடியாது; இங்கு காடுகள் உண்டு, ஆனால் மரங்கள் இருக்காது. அது எங்கே?
10. எனக்கு நாக்கில்லை, ஆனால் நான் பேசுவேன். உலகில் உள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும். எனக்கு கை, கால் கிடையாது, ஆனால் மேலாடை உண்டு. என்னை யார் என்று தெரிகிறதா?

விடைகள் :
1. 11 மணி நேரம் + 2 மணி நேரம் = 1 மணி
2. கால் தடங்கள்
3. சோப்
4. ஒரு முறைதான் (அதற்குப் பிறகு அது இருபதாகிவிடுமே)
5. நினைவுகள்
6. பயம்
7. பொம்மை
8. கடிகாரம்
9. வரைபடம்
10. புத்தகம்

கோவபடாதீங்க சிரிங்க .....







ஏன் தண்ணி தெளிச்சிட்டு
கோலம் போடுறாங்க தெரியுமா ?
*
*
*
கோலத்தைப்போட்டுட்டு தண்னி தெளிச்சா ..
கோலம் அழிஞ்சிடுமே அது தான் ....!
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நபர் 1: தண்ணியில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?

நபர் 2: அப்படி எடுக்கலைன்னா குளிக்கும் போது ஷாக் அடிச்சிரும்
""""""""""""""""""""""""""""""""""""""""""""''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நாட்டாமை ‍= "மாரியாத்தாவிற்கும் மங்காத்தாவிற்கும் என்ன வித்தியாசம்?"

பூசாரி = "தலையை விரிச்சு போட்டு ஆடினா, அது மாரியாத்தா. நம்ம‌ 'தல‌' யே வந்து ஆடினா அது மங்காத்தா"
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஊசி குத்துனா ஏ ரத்தம் வருது னு தெரியுமா ? ................... தன்ன குத்துனது யாரு னு பார்க்க தா வருது .................!!!

........................................................................................................................................................

பல் டாக்டரை பார்க்க போனேன் ,
அங்க லேடி டாக்டர் இருந்தாங்க...
திரும்பி வந்துட்டேன்
.
.
.
.
.

ஏன் என்றால் நாம் எந்த
பொண்ணுகிட்டயும்
பல்லைகாட்டி நிற்க
கூடாது பாருங்க 
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""...!
கோழி ஏன் முட்டை போடுது?
.
.
.
.

.
ஏன்ன அதுக்கு 1,2,3 போடதெரியாது, அதான்::
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::....
காலைல எழுந்ததும் உடற்பயிற்சி , அப்புறம் நீச்சல், மாலைல கொஞ்சம் நேரம் யோகா அடுத்து டென்னிஸ்...
இ‌வ்வளவு செ‌‌ஞ்சு‌ம் ஏன் சார் உங்க உடம்பு டிரம் மாதிரி இருக்கு ?
அட, இதெல்லாம் டி.வி.ல வழக்கமா பார்க்கிறேன்னு சொல்ல வந்தேங்க!
 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
 செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.
செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது

Friday, July 11, 2014

நம்மைக் கொல்வது எது?





சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் சக்தியை இறைவன் மனிதனுக்கும் தவளைக்கும் ஒரே மாதிரி தான் கொடுத்து இருக்கிறான்.

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும்போது தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.

தண்ணீர் கொதிநிலையை அடையும் போது வெப்பத்தை தாங்கமுடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.

ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.

ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.

எது அந்த தவளையை கொன்றது ? 





பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள். ஆனால் உண்மை என்னவென்றால், எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது......

நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம். ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

மனரீதியாக, உடல்ரீதியாக, பணரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும்போது நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.

உடலில் வலிமை இருக்கும் போதே அவர்களிடமிருந்து தப்பித்துவிடுதல் நன்று. நாம் அனுமதித்தால் ஒழிய நம்மை அழிக்க எவராலும் முடியாது .

அறிந்துகொள்வோம், நகைச்சுவை, சுபா ஆனந்தி, subha ananthi,

1. மண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா ..?அதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல, அதனால போடுறதில்லை...!
2. ஒரு பெரிய 'ஈ'க்கு எத்தனை இறக்கை இருக்கு ..?அது சின்ன 'ஈ' யா இருந்த போது எத்தன இறக்கை இருந்துச்சோ, அத்தனை இறக்கைதான் இருக்கும்.!
3. அரிசிய அரைச்சா அரிசி மாவு வரும், கோதுமைய அரைச்சா கோதுமை மாவு வரும், அப்படின்னா கோலத்த அரைச்சாதான் கோல மாவு வருமா ..?
4. எறும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..?ஏன்னா அதோட வாய் சைசுக்கு இன்னும் டூத்ப்ரஷ் கண்டுபிடிக்கலை..இந்த விதி யானைக்கும் பொருந்தும்.!
5. வடச் சட்டில வடை சுடுறாங்க , இட்லிச் சட்டில இட்லி சுடுறாங்க,அப்படின்னா ஓட்ட வடை எதுல சுடுறாங்க , ஓட்ட சட்டியிலையா ..?
6. மாட்ட, ஆடா மாத்த முடியுமா .? முடியும் .ஒரு பேப்பர் எடுத்து MAADU அப்படின்னு எழுதிட்டுமுதல்ல இருக்குற M அடிச்சு விட்டுட்டா... AADU அப்படின்னு மாறிடும்.!
7. Dog திருப்பிப் போட்டா God வரும்னு சொன்னாங்க ,நான் எங்க வீட்டுல இருக்குற Dog திருப்பிப்போட்டேன் ,அது கடிக்க வருது .. அப்படின்னா ஏன்


God வரல ..?

உங்கள் வளர்ச்சிக்கு

உங்கள் வளர்ச்சிக்கு!



ஒருநாள் அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர்.

அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளர்ச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார். அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.

இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கும் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது, பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.

அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர். சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும், நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.

சவப்பெட்டியினுள் பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு கண்ணாடி மட்டுமே இருந்தது. சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.

கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது...”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம் ,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது , உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.

சுபா ஆனந்தி, good Morning , photos , images , Subha ananthi , stickers , காலை வணக்கம்