Saturday, January 31, 2015

கல்பனா சாவ்லா

பிப்ரவரி 1: கல்பனா சாவ்லா - விண்ணைத்தொட்ட தேவதை நினைவு தின சிறப்பு பகிர்வு...
அப்பா பிரிவினைக்கு முந்திய இந்தியாவில் இருந்து வந்திருந்தார் ; பாகிஸ்தானில் இருந்து அகதியாக எல்லாவற்றையும் அங்கே விட்டுவிட்டு கொஞ்சம் காசு,ஏகத்துக்கும் நம்பிக்கை என்று சாதித்து காட்டியவர் அவர். அவரின் கரம்பிடித்து நடைபயின்ற குழந்தை என்பதால் கொஞ்சம் கல்பனாவுக்கு அடம் அதிகம்.

நான்கு பிள்ளைகள் இருந்த வீட்டில் கடைக்குட்டி என்பதால் இன்னமும் செல்லம் தூக்கல். எல்லா குழந்தைகளும் வெளியே விளையாடிக்கொண்டு இருக்கும் பொழுது வீட்டின் சுவற்றில் விமானங்களை அவரின் பிஞ்சுக்கரங்கள் கிறுக்கி கொண்டு இருக்கும். அண்ணனுடன் சந்திகர் சாலைகளில் போகிற பொழுது கண்கள் எப்பொழுதும் வானோடு காதல் செய்து கொண்டிருக்கும்.



தாகூர் அரசுப்பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்ற பின் கல்லூரி சேர வேண்டும் என்று முடிவான பொழுது உறுதியாக பெண் பிள்ளைகளே இல்லாத பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் ஏரோநாடிகல் துறையை எடுத்து சாதித்து
காட்டிய அந்த பிடிவாதக்கார பெண் அடுத்து கிளம்பியது அமெரிக்காவுக்கு !

முதுகலைப்பட்டம்,முனைவர் பட்டம் பெற்ற பிறகும் விண்ணை தொடும் அவளின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தன. மூன்றாயிரம் பேர் உயிரை உறைய வைக்கும் தேர்வு முறைகள் இறுதியில் ஆறே ஆறு பேர். அதில் ஒருவராக நம்மின் குட்டிப்பெண்ணும். பயிற்சிகள் ஆரம்பித்தன எந்த அளவுக்கு என்றால் ஆற்றின் ஒரு புறத்தில் இருக்கும் ஒரு பொதிமூட்டையை கொண்டு போய் இன்னொரு புறம் இருட்டில் யாருமே இல்லாமல் சேர்க்க வேண்டும். சேர்த்த பிறகு பிரித்துப்பார்க்க வேண்டும். பிணம் கனம் கனக்கும் அதைக்கொண்டு போய் சேர்த்து பிரித்து பார்த்தால் பிணமே இருக்கும் ! இப்படிப்பட்ட எண்ணற்ற போராட்டங்களை,சோதனைகளைத்தாண்டி விண்ணில் முதல்முறை பறந்த பொழுது விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்திய பெண்மணி ஆனார் .



கொலம்பியா ஓடத்தில் நாற்பத்தி ஒரு வயதில் பறந்த அந்த வான்வெளி தேவதையின் இறுதி பயணமாக அதுவே மாறிப்போனது. பூமியை ஓடம் தொடுவதற்கு பதினாறு நிமிடங்களுக்கு முன்பு அது வெடித்து சிதற வானோடு உறைந்தது கல்பனா சாவ்லாவின் சிரிப்பு. சின்னஞ்சிறு ஊரில் இருந்து விண்ணைத்தொட்ட அந்த தேவதை மண்ணில் உதிர்ந்த தினம் இன்று.

♥ heart ♥

Sunday, January 25, 2015

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்


தீவிரவாதம் மறந்து ஒருவருக்கு ஒருவர் பொறாமை ,பகை ,பழிவாங்கும் உணர்வு ,மறந்து ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தி சகோதரர்களாய் வாழ்வோம்
Vande Matran - Happy Republic Day India
அனைத்து பதிவர்களுக்கும் /வாசகர்களுக்கும் | இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்
Happy Republic Day Animated Greetings

நாட்டின் நதிகளை ஒன்றிணைப்போம் !
நாம் நாடு வல்லரசாக ஒன்று படுவோம் ,பாடுபடுவோம் !
ஜெய் ஹிந்த்
சும்மா கிடைத்துவிடவில்லை சுதந்திரம் அந்த நாட்களில் ஆயிரம், லட்சம் சோகங்கள் மண்டிக் கிடக்கின்றன.  புழு பூச்சிகளாக லட்சக்கணக்கான உயிர்கள் மடிந்துள்ளன.  அன்றைய நாட்களின் சுதந்திர தாகம் இன்று?
பீரங்கிகளை எதிர்த்து
சாலைகளில் ஓடி
துணிச்சலாக பெறப்பட்ட சுதந்திரம்
இன்று 
குண்டுத் துளைக்காத 
கூண்டுகளில் அடைப்பட்டு
மக்களிடம்
கையசைக்கின்றது
“இதோ நான் தான் சுதந்திரம்!”

சுதந்திர போராட்ட நாட்களிலிருந்து சில வரலாற்றுக் குறிப்புகள்.

சுதந்திர போராட்ட நாட்களிலிருந்து சில வரலாற்றுக் குறிப்புகள்.
இந்திய குடியரசு தினம் என்றால்”முதன் முறையாக இந்திய மக்களுக்கான சட்டத்தை இயற்றிய நாள் –  ஜனவரி  (26 Jan 1950)” என்று ஒரு வரியில் கூறிவிடலாம். ஆனால், இந்த ஒரு வரிக்கு பின் இருக்கும் வரலாற்றை கவனிக்கும் பொழுது, இந்திய அரசியல் குறித்த தெளிவான புரிதல் ஏற்படுகிறது
வரலாறு  (1857) ஆண்டு, இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத்தில் இருந்து தொடங்குகின்றது,
  • (1857) – ஒரு கிளர்ச்சியாக ஆரம்பித்து பின் முதல் சுதந்திர போராட்டமாக மாறுகிறது – பின் அடக்கபடுகிறது – இதை தொடர்ந்து இந்திய மக்கள் கருத்தை ஒத்த அரசு அமைக்க பிரிட்டிஷ் முடிவு.
  • (1892) – இந்திய கவுன்சில்கள் சட்டம் அறிமுகம் – இதன்படி அரசாங்கத்தின் வரவு/ செலவு விவாதிக்க அதிகாரம் மற்றும் நிர்வாகத்தை நேரே கேள்விகேட்கும் அதிகாரம். ஆனால் வாக்குரிமை கிடையாது.
  • (1917) – பிரிட்டிஷ் இந்திய தன்னாட்சி அடைவதே இலட்சியம் என்ற இந்தியாவின் கருத்தை ஒப்புக்கொண்டது.
  •  (1919) – இந்திய ஆட்சி சட்டப்படி மாகாணங்களில் இரட்டை ஆட்சி ஏற்படுத்துவது – மத்தியில் மேல் சபை கீழ் சபை அமைப்பது என்று தீர்மானம்.
  • (1920) – தீர்மானத்தை தொடர்ந்து – முதல் தேர்தல்
  • (1924) – மீண்டும் ஒரு தேர்தல் – தேசிய கோரிக்கை என்ற தீர்மானம் – சட்டசபை பெரிதாக என்ன சாதித்துவிடபோகிறது என்ற கேள்வி – இந்த கேள்வியை பிரிட்டிஷ் ஒப்புகொள்ளுதல்
  • (1928) – பூரண சுதந்திரம் மிக்க நாடாளுமன்றம் வேண்டும் என்ற கோரிக்கை – பம்பாய் நகரில் நடந்த மாநாட்டில் பண்டிட் மோதிலால் நேரு தலைமையில் இந்தியாவிற்கு ஒரு அரசியல் அமைப்பு தயாரிக்கும் குழு அமைதல். இந்த குழுவின் பிற முக்கிய உறுப்பினர்கள்  சி.ஆர்.தாஸ்,  சத்யமூர்த்தி, முகமது அலி ஜின்னா,  புலாபை தேசாய்.
  • (1929) – இந்த குழு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கின்றது – இதை தொடர்ந்து முதல் வட்ட மேசை மாநாடு – இந்த மாநாடு அதிக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் முடிவடைகின்றது
  • (1931) – இரண்டாம் வட்ட மேசை மாநாடு –  காந்தி கலந்து கொள்கிறார் – வகுப்பு வித்தியாசம் பிரச்சனைகள் காரணமாக பெரும் உடன்பாடு எதுவும் எட்டபடவில்லை.
  • (1932) – முன்றாம் வட்ட மேசை மாநாடு – ஒரு கூட்டு நாடாளுமன்ற குழு நிறுவபடுகிறது – இந்த குழு சில பரிந்துரைகள் செய்கிறது.
  • (1935) – இந்த பரிந்துரைகளை “இந்திய அரசாங்க மசோதா” என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிறைவேற்றுகிறது.
  •  (1942) – இந்த ஆண்டு வரை நிலையான மக்கள் ஆட்சி நடைபெறவில்லை. இதற்கிடையில், கவர்னர்களுக்கு சிறப்பு அதிகாரம் குறித்த சர்ச்சை – இந்திய உலக போரில் சேர்வது குறித்த கருது வேற்பாடு – பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கை என்ற காரணங்களை காட்டி எந்த முடிவும் சொல்லாமல் பிரிட்டிஷ் இழுத்தடிப்பு.
  • (1946) – ப்ரிடைனில் தொழிற்கட்சி ஆட்சி அமைத்தல் – இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய சட்டம் அமைப்பதற்காக ஒரு அரசியல் சட்டசபை அமைக்கபடுகிறது. இதன் துணை தலைவர் பண்டிட் ஜவார்ஹளால் நேரு. பிரிட்டிஷ் அமைச்சர்கள் தூதுக்குழு தெரிவித்த யோசனைப்படியே இந்த அரசியல் சட்ட நிர்ணய சபை அமைக்கப்பட்டது. இதுவே, சுதந்திர இந்தியாவில் சிலகாலம் சட்டசபையாகவும் செயல்பட்டது.
  • (1947) – ஆகஸ்டு (August 14-15) நள்ளிரவில் இந்த அமைப்பே பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து இந்திய அரசாங்க ஆட்சி அதிகாரத்தை முறையாக ஏற்றுகொண்டது.
இந்தியாவிற்கு ஏற்ற அரசியல் சட்டம் இயற்றும் மிகபெரும் பணியை இந்த சபை மேற்கொண்டது இந்த சபையில் முனைவர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பங்கு கணிசமானது. இந்த சபைக்கு முனைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். சுமார் முன்று ஆண்டு காலம் அக்கறையுடன் தயாரான “இந்திய அரசியல் சட்டம்” இந்த அரசியல் சட்ட நிர்ணய சபையில்  நவம்பர்  (1949 Nov 26) ஆம் நாள் அங்கீகரிக்கப்பட்டது.
  • (1950) – ஜனவரி ௨௬ (January 26) ஆம் நாள் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. இந்நாளே இந்திய குடியரசு நிறுவப்பட்டது.
இந்த சபை தலைவரான திரு முனைவர் ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இதே சபை இடைகால நாடாளுமன்றமாக செயல்பட்டது.
  • (1952) – முதல் குடியரசு பொது தேர்தல்!

குடியரசு தினம் என்றால் என்ன?*

*குடியரசு தினம் என்றால் என்ன?*



நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட விடை சொல்லிவிடும் ஆனால் குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் முழிப்பார்கள்.

சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்றால் யாரோ நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள், அவர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்று விட்டோம் என்பதை உணரமுடிகிறது. மற்றபடி பலருக்கு- அதிலும் குறிப்பாய் பல இளைஞர்களுக்கு -குடியரசு பற்றி எதுவும் தெரிவதில்லை.

இன்றைய பள்ளிகளிலும் தேசப் பற்றை விட மதிப்பெண்கள் பற்றே அதிகம் மாணவர்களிடம்
இருக்கிறது.மொழிப் பற்றும் தேசப் பற்றும் இளம் தலைமுறையினரிடம் குறைந்து வர யார் காரணம்?பள்ளியில் ஆசிரியர்களா?வீட்டில் பெற்றோர்களா? சுதந்திரப் போராட் வீரர்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டால் காந்தி, நேருவிற்கு மேல் அவர்களால் சொல்ல முடிவதில்லை.

தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி, காமராஜ், வ.உ.சி., வ.வே.சு. ஐயர், சுப்ரமண்ய சிவா, பாரதி, வீர வாஞ்சி, கொடி காத்த குமரன், நீலகண்ட பிரம்மசாரி,வேலு நாச்சியார் ........

இன்னும் எதனையோ வீரர்கள் சுதந்திரத்திற்காக் குரல் கொடுத்தவர்கள். இவர்களில் பலர் தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்கள்.

இந்தியா அளவில் பார்த்தால் திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, காந்தி, நேரு, பட்டேல்,அம்பேத்கர், பகத்சிங், நேதாஜி, லாலா லஜபதி, ஆச்சார்ய வினோபாபாவே, சித்தரஞ்சன் தாஸ், தாதாபாய் நௌரோஜி..... இன்னும் எத்தனையோ பேர் நாட்டு விடுதலைக்காகப்

போராடி வாழ்ந்தனர். இவர்களை எவ்வளவு பேர் நினைவில் கொண்டிருக்கிறோம்? ஆசிரியர்கள் நாட்டுப் பற்றை மாணவர்களுக்கு ஊட்டவேண்டும். இந்த ஊட்டம்தான்
வருங்கால சந்ததியினர் நாட்டுப் பற்று கொண்டு நம் நாட்டை உயர்த்த வழிகாட்டும். பெற்றோர்களுக்கும் இதில் பங்கு உண்டு. அன்றாட வாழ்க்கையை தொலைக்காட்சிகளிலேயே
தொலைத்து விடுகிறவர்கள் எப்படி இளைஞர்களுக்கு வழிகாட்டுவது? வேரில் பழுதுகள்
இருந்தால் விழுதுகள் வளர்வது எப்படி சாத்தியம்?

நமது மன்னர்கள் ஒற்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப்
பிரித்து ஆண்டதால்தான் ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே
நுழைந்தனர். இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்பற்று உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமையும் ஆகும்.

முந்நூறு வருடங்கள் பிரிட்டிஷ்காரர்களிடம் நாம் அடிமைகளாய் இருந்தோம்.. அந்த முந்நூறு வருடங்கள் முன்பு நம் நாடு எப்படி இருந்தது? அப்போது மன்னர்கள் பலர்ஆண்டனர். மக்களுக்குச் சுதந்திரம் பற்றி எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன்எவ்வழி மக்கள் அவ்வழி என்றே வாழ்ந்தார்கள்.

ராஜராஜ சோழன், மராட்டிய சிவாஜி, குப்தர்கள் போன்றவர்கள் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தாலும் ஔரங்கசீப், அலாவுதின் கில்ஜி போன்றவர்களால் மக்கள் துன்பமும்பட்டார்கள். மன்னனின் ஆட்சி என்பது முடியாட்சி. அவன் வைத்ததே சட்டம். இதில் மக்கள் சுயமாய் சிந்திக்க, சுதந்திரம் பற்றி நினைக்கவும் வழி கிடையாது.

மன்னனின் வாரிசுகள் அடுத்து அரியணை ஏறுவார்கள். அவர்களின் கொடுங்கோலாட்சியை
எதிர்க்கும் சிலரில் வீரமும் துணிவும் உள்ளவன் எப்போதாவது ஆட்சியைக் கைப்பற்றுவது உண்டு.

குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள்: தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் முலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எப்படி அட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம் (constitution). மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் சட்டம்தான் உலகிலேயே மிக நீளமானதாம். மன்னர் ஆட்சி ஆங்கிலேயர் ஆட்சி எல்லாம் முடிந்து 1947 ஆகஸ்டு 15ஆம் தேதி சுதந்திரத்தைப் போராடி வாங்கிவிட்டோம். சுதந்திரத்திற்குப் போராடிய பலரில்

நேரு, அதன் பின் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு 1950இல் குடியரசு நாடாக அதாவது
மக்களாட்சி நாடாக அறிவிக்கப்பட்டது.

சுதந்திர தினத்தைவிட, குடியரசு தினம்தான் முக்கியமானது. ஏனென்றால் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான
ஆட்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்தவரை நீக்கிவிட்டு வேறொரு நல்ல தலைவரை
தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

இதையெல்லாம் இளைய தலைமுறை நன்கு அறிந்திருக்குமானால் நாட்டின் எதிர்காலம்

வளமுடையதாக ஆகும் என்பது நிச்சயம்.

ஜெய்ஹிந்த் !!!

வாழ்க பாரதம்!!!! ஜெய்கிந்த்!!!

வாழ்க பாரதம்!!!! ஜெய்கிந்த்!!!

 

குடியரசு தினம்....


குடியரசு தினம்....


இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.

ஆங்கிலேயரின் ஆட்சி

ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1948 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைதல்

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.

இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்

1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தியக் குடியரசு தினம்

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

குடியரசு என்பதன் பொருள்

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

குடியரசு தினக் கொண்டாட்டம்

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

வாழ்க பாரதம்!!!! ஜெய்கிந்த்!!!

தேசியக் கொடி ஏற்றும்போது அதில் பூக்கள் வைப்பது ஏன்?


தேசியக் கொடி ஏற்றும்போது அதில் பூக்கள் வைப்பது ஏன்?

நம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன் அதில் வைக்க பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து கை தட்டுகிறோம்.

ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோக சம்பவம் அடங்கி கிடக்கிறது அது என்ன தெரியுமா?

இந்த கொடி மேலே ஏற அதாவது நாம் சுதந்திரம் பெற எண்ணற்ற தாய் மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக்கிறது என்பதைத்தான் இந்த கொடி மேலே ஏறும் போது மலர்கள் கீழே விழுந்து அதனை ஞாபக படுத்துகிறது.

இனி ஒவ்வொரு முறையும் கொடியேற்றத்தைக் காணும்போதும் இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இன்று நாம் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்துகொண்டு உலகை சுற்றி வருகிறோம்.

அன்று அந்த நல்ல உள்ளங்கள் தங்கள் கணவர்களை சுதந்திர போராட்டத்திற்கு அனுப்பாமல் இருந்திருந்தால், நாம் இன்னும் எங்கேயாவது செக்கு இழுத்துக் கொண்டுதான் இருந்திருப்போம்!

Friday, January 23, 2015

சுபாஷ் சந்திர போஸ்...

Subhas-Chandra-Bose

‘நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.





பிறப்பு: ஜனவரி 23, 1897

இடம்: கட்டாக், ஒரிசா மாநிலம், இந்தியா

பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர்.

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

இந்திய விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக, ஒரு வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு எட்டு சகோதரர்களும் மற்றும் ஆறு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீலாகவும், தாய் ஒரு தெய்வபக்தி மிக்கவராகவும் இருந்தனர்.

ஆரம்ப வாழ்க்கை

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், தன்னுடைய ஆரம்பக் கல்வியை, கட்டாக்கிலுள்ள “பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில்” தொடங்கினார். பின்னர், 1913ல் “கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில்” தன்னுடைய உயர் கல்வியை முடித்த அவர் படிப்பில் முதல் மாணவனாகவும் விளங்கினார். சிறுவயதிலிருந்தே விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீகக் கொள்கைகளை ஆர்வமுடன் படித்தும் வந்தார். 1915 ஆம் ஆண்டு “கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில்” சேர்ந்த அவர், “சி.எஃப் ஓட்டன்” என்ற ஆசிரியர், இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை சொன்னதால், ஏற்பட்ட தகராறால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின்னர், “ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்” சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், தன்னுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்காக 1919 ஆம் ஆண்டு ஐ.சி.எஸ் தேர்வுக்கு படிக்க லண்டனுக்கு சென்றார். ஐ.சி.எஸ் தேர்வில் நான்காவது மாணவனாக தேர்ச்சிப்பெற்றார். 1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’, சுபாஷ் சந்திர போசை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திர போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல், லண்டனில் தன்னுடைய பணியை துறந்து 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி வரவும் செய்தது.

திருமண வாழ்க்கை

பாரத நாட்டின் விடுதலைக்காக வியன்னா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி, ஐரோப்பா, ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்த நேதாஜி அவர்களுக்கு, ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைத்தது, இவர்களின் சந்திப்பு பிறகு காதலாக மலர்ந்து டிசம்பர் 27, 1937 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1942 ஆம் ஆண்டு, அணிதா போஸ் என்ற மகளும் பிறந்தார்.

சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்கு

‘தன்னுடைய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்ய கூடாது’ எனக் கருதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சி.ஆர் தாசை அரசியல் குருவாக கொண்டு போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கினார். 1922 ஆம் ஆண்டு வேல்ஸ் என்னும் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப பிரிட்டன் அரசு தீர்மானித்தது. இதனால் வேல்ஸ் வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடுவுசெய்தது. “கொல்கத்தா தொண்டர் படையின்” தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜி மற்றும் மேலும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது.

சட்டசபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்ட சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் இந்தியா சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர் தாஸ் மற்றும் நேருவும் கருதினர். ஆனால், காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் எதிர்த்தனர். இதனால் காந்திக்கும், தாசுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு கட்சியிலிருந்து பிரிந்தார் சி.ஆர் தாஸ், அவர் “சுயாட்சிக் கட்சியை” தொடங்கியது மட்டுமல்லாமல், “சுயராஜ்ஜியா” என்ற பத்திரிக்கையையும் தொடங்கி நேதாஜி தலைமையின் கீழ் பொறுப்பையும் ஒப்படைத்தார். 1928 ஆம் ஆண்டு காந்திஜியின் தலைமையில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய காந்திஜியின் முடிவை, ‘தவறு’ என நேதாஜி எதிர்த்து கூறினார். இதனால் காந்திக்கும், நேதாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு, இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி ஐரோப்பாவிற்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார்.

1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட நேதாஜி அவர்கள், “நான் தீவிரவாதி தான்! எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பதுதான் எனது கொள்கை” என முழங்கினார். நேதாஜி அவர்கள், தலைவரானதும் ரவீந்திரநாத் தாகூர் அழைத்து, அவருக்குப் பாராட்டுவிழா நடத்தியதோடு மட்டுமல்லாமல், ‘நேதாஜி’ (மரியாதைக்கூரிய தலைவர் என்பது பொருள்) என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார். 1939 ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேதாஜி போட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்ட காந்தி, அவருக்கு எதிராக நேருவையும், ராஜேந்திர பிரசாத்தையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். ஆனால், அவர்கள் போட்டியிட மறுக்கவே “பட்டாபி சீதாராமையாவை” நிறுத்தினார். ஆனால், பட்டாபி சீதாராமையா தேர்தலில் தோற்றுவிடவே, தனக்கு பெரிய இழப்பு என்று கருதிய காந்தி, உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். இதனால், நேதாஜி அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாகவே வெளியேறினார்.

‘பிரித்தானிய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார்’ என கூறி 1940 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசு நேதாஜியைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ‘இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த மும்முரமான காலகட்டம் அது, பாரத தேசத்தை ஆண்டுகொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்க்க இதுதான் சரியான தருணம்’ என கருதிய நேதாஜி அவர்கள், ஜனவரி 17, 1941 ஆம் ஆண்டு மாறுவேடம் அணிந்து சிறையிலிருந்து தப்பி, பெஷாவர் வழியாக காபூல் அடைந்த அவர், பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தானை அடைந்தார். ரஷ்யா வழியாக இத்தாலிக்கு செல்லவேண்டும் என நினைத்த நேதாஜி இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவை அடைந்தார். எதிர்பாராத விதமாக ஹிட்லரின் அழைப்பு வரவே, அவரின் அழைப்பை ஏற்று பின்னர் ஜெர்மனியிலுள்ள மாஸ்கோவை அடைந்த அவர், இந்திய சுதந்திரத்தை பற்றி ஹிட்லரிடம் பேசி அவருடைய உதவியை நாடினார்.

சுதந்திர இந்திய ராணுவம்

1941 ஆம் ஆண்டு “சுதந்திர இந்திய மையம்” என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள், சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒளிபரப்பினார். பிறகு, ஜெர்மன் அயலுறவு துறை அமைச்சர் “வான் ரிப்பன் டிராபின்” உதவியுடன் சிங்கப்பூரில் “ராஷ் பிகாரி போஸ்” தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார். 1943 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார். பிறகு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன், பர்மாவில் இருந்தபடியே “இந்திய தேசிய ராணுவப்படையை” கொண்டு 1944ல் ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின்வாங்கியது. அப்பொழுது ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு “இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள்! நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தலத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை” “ஜெய் ஹிந்த்” என உரையாற்றினார். அன்று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில், அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றது.

போஸ் மரணம் குறித்த சர்ச்சை

ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது. இந்த செய்தி, இந்திய மக்களை நிலைக்குலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. இறுதிவரை அவருடைய மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது.

“எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன்” என கூறிய இந்திய புரட்சிநாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாரதநாட்டை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர். மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்கும் அவர் முயற்சி சற்று பின்னடைவை சந்தித்தாலும், அவரது வீரம் என்றென்றும் நினைவு கூறத்தக்கது. சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அற்பணித்துகொண்ட நேதாஜி அவர்கள், ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் இன்றளவும் நீங்க்கா இடம் பெற்றிருக்கிறார
்.

அறிந்துகொள்வோம்...

அறிந்துகொள்வோம்
====================




 
 * மும்பையில் நீங்கள் ஒரு நாள்
சுவாசிக்க கூடிய காற்று, 2
1/2பாக்கெட் சிகரெட்
உபயோகிப்பதற்கு சமமானது.

* இந்தியாவில் மனிதனுக்கு வேண்டிய
டாய்லெட்டை விட செல்போன்கள் அதிகம்.

* நீங்கள்
கொட்டாவி விடும்போது நாக்கை தொட்டால்
அது கொட்டாவியை உடனே நிறுத்திவிடும்.

* பெண்கள் ஒரு நாளைக்கு 7000
வார்த்தைகள் பேசு கின்றனர் ஆண்கள் 2000
வார்த்தைகள் தான் பேசுகின்றனர்.

* இந்தியாவில் மில்லியன்
மக்களுக்கு 11 ஜட்ஜ்
மட்டுமே உள்ளனர். இப்போது வழக்கில் உள்ள
எல்லா கேஸுக்களை முடிக்க 466
ஆண்டுகள் பிடிக்கும்.

* நீல நிற
கண்களை உடையோற்கு மற்றவர்களை விட
இரவில் பார்வை திறன் துல்லியமாக
இருக்கும்

* காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம், பருத்தி ஆகியவற்றின்
சிறப்பான கலவைகளால் தான்.

* உலகில் பயன்படுத்தப்படும்
பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில்
பயன்படுத்தப்படுகிறது. அது போல்
உலகின் பயன்படுத்தப்படும்
மின்சாரத்தில் 33 சதவீதம்
பயன்படுத்தப்படுவதும்
அமெரிக்காவில்தான்.

* ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம்
குறைந்தப் பட்சம் 30
தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.

* மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத
பகுதி எது தெரியுமா? கண்ணின்
கருவிழி. ஏனென்றால்
கருவிழி அதற்கு தேவையான
ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப்
பெற்றுக்கொள்கிறது.

Wednesday, January 21, 2015

tsu வில் நான் கண்ட உண்மைகள்.....

tsu வில் நான் கண்ட உண்மைகள்.........!!!!!!!!

1) முதல் ஒரு மாதம் வரை உங்கள் நெட்வொர்க் ஐ பலப்படுத்த வேண்டும் (friends +childrens +followers = network ).பின்பு தான் கணிசமான பணம் வரவு வைக்கப்படுகின்றது,

2) தினமும் பகல் 12:30 மணிக்குள் முந்தய நாளுக்குண்டான வருவாய் வரவு வைக்கப்படுகின்றது ,

3) 27 போஸ்டுகள் போஸ்ட் செய்து முடித்தவுடன் அடுத்த 2 மணி நேரத்திற்குள் படிப்படியாக போஸ்ட் லைப் 1,2,3 என போஸ்ட் லைப் படிப்படியாக உயருகிறது,

4) முந்தய நாளுக்குண்டான வருவாய் கிடைத்தவுடன் மாலை 5 மணிக்கு மேல் போஸ்ட் செய்வது நல்லது ஏனென்றால் 5 மணிக்கு மேல் தான் நிறைய லைக் வருகின்றது,

5)பெரும்பாலும் போட்டோ இல்லாத உறுப்பினர்களை unfriend செய்து விடுகின்றேன்,2 நாட்கள் பதிவுகளை போட்டு விட்டு பணம் வரவில்லை என்று சென்றுவிட்டவர்கள் ,பெரும்பாலும் இவர்கள் செயல்படுவது இல்லை இவர்களால் பலன் ஏதும் இல்லை,

6)முக்கியமான நண்பர்களை மட்டும் follow செய்யவும் ஏனென்றால் நெறைய
பேரை follow செயும்பொழுது முக்கியமான நண்பர்களின் பதிவுகள் நமக்கு வாராமலேயே போய்விடுகின்றது ,

7) 40 நாட்களில் எனக்கு தினமும் சராசரியாக 60 சென்ட் கிடைகிறது,

8)இது முழுநேர தொழில் இல்லை,ஆனால் நெட்வொர்க் பலமாக இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் .

மேலும் விபரம் தெரிந்தவர்கள் இதனுடன் இணைத்து பதிவிடவும் ,

நன்றி ,,,

tsu பற்றிய உண்மைகள் !





tsu பற்றிய உண்மைகள் !

1 ) register செய்தவுடனே பணம் உங்களுக்கு வராது ,

2) கமெண்ட் ,ஷேர்,லைக் அதிக அளவில் செய்தாலும், நீங்கள் போடும் போஸ்ட் களுக்கு வரும் லைக்,கமெண்ட்,ஷேர் களை பொருத்தும் பணம் கிடைக்கும்,

3) மேலும் உங்கள் மூலமாக இணையும் புதியநபர்கள் (சில்றன்) ஈட்டும் வருவாயில் 1 டாலருக்கு 30 சென்ட்டும்,அவர் இணைக்கும் புதியநபர்கள் (grand children ) ஈட்டும் வருவாயில் 1 டாலருக்கு 10 சென்ட்டும் கிடைக்கும்,

4) ஒருநாளைக்கு 7 ஷேர் மட்டுமே செய்ய முடியும் ,27 போஸ்டுகள் போடமுடியும் ,1000 லைக் போடலாம்,

5) மேற்கூறியவற்றை முடிந்த அளவுக்கு அதிகமாக செயும்பொழுது பலமடங்கு உயரும் ,

6) ஈட்டும் வருவாயினை தினந்தோறும் இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு வரவு வைக்கப்படும் ,

7) 100 டாலர்கள் வந்தவுடன் பணத்தை செக் மூலமாக உங்கள் முகவரிக்கே அனுப்பப்படும்.

8)மேலும் விபரங்களுக்கு tsu FAQ மெனுவை க்ளிக் செய்து படித்து பார்க்கவும்,

9) அவர்கள் கூறும் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு நாளைக்கு 2 டாலர் வரை சம்பாதிக்கலாம்.