Wednesday, December 31, 2014

வைகுண்ட ஏகாதசி ...

வைகுண்ட ஏகாதசி ...
‘காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை. ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை’ என்பார்கள். விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11&ம் நாள் ஏகாதசி. மாதத்துக்கு இரண்டு என ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். ஏகாதசியில் விரதம் இருப்பது ஒவ்வொரு மாதத்தில் ஒவ்வொரு பலன்களை தரும் என கூறப்படுகிறது.

சித்திரை மாத ஏகாதசியில் விரதம் இருந்தால் விரும்பிய பேறுகள் எல்லாம் உண்டாகும். வைகாசி & கயிலாய யாத்திரை மேற்கொண்டு பத்ரிநாத்தை தரிசித்த பலன் கிடைக்கும். ஆனி & சொர்க்கம் செல்லும் பாக்யம். ஆடி & ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும். ஆவணி & மக்கள்செல்வம் உண்டாகும். குழந்தைகளின் நோய், நொடிகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு உண்டாகும்.

புரட்டாசி & நிம்மதியான வாழ்வு கிடைக்கும். ஐப்பசி & சகல வளங்களும் உண்டாகும். கார்த்திகை & மகிழ்ச்சியான வாழ்வு மலரும். தை & பித்ரு சாபங்கள் நீங்கி, முன்னோர் அருளாசி கிடைக்கும். மாசி & சகல பாவங்கள், தோஷங்கள் நீங்கும். பங்குனி & தடை, தடங்கல்கள் நீங்கி வெற்றிகள் குவியும்.எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருப்பவர்கள் உண்டு. ஏகாதசியன்று விரதம் இருந்து மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜை முடித்து சாப்பிடுவார்கள்.

ஏகாதசிகளில் சிறந்ததாக கூறப்படுவது மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி. மனிதர்களுக்கு இரவு, பகல் மாறிமாறி வருவதுபோல தேவர்களுக்கும் உண்டு. ஆடி முதல் மார்கழி வரையிலான 6 மாதங்கள் அவர்களுக்கு இரவு நேரமான தட்சிணாயனம். தை மாதம் தொடங்கி ஆனி வரையிலான 6 மாதங்கள் பகல் நேரமான உத்தராயனம். பகல் தொடங்குவதற்கு முந்தைய விடியற்காலை நேரம் நமக்கு பிரம்மமுகூர்த்தம் எனப்படுகிறது.

இந்த நேரத்தில் எழுந்திருப்பது, நல்ல காரியங்கள் செய்வது மிகுந்த பலன் உடையதாக கூறப்படுகிறது. தேவர்களைப் பொருத்தவரை, மார்கழி மாதம்தான் பகல் தொடங்குவதற்கு முன்பு வரும் பிரம்மமுகூர்த்தம். அதனால், மாதங்களில் மார்கழி சிறப்பாக கூறப்படுகிறது. அதில் வரும் ஏகாதசி திதி சிறப்பு பெறுகிறது. இதுவே வைகுண்ட ஏகாதசி. பாற்கடலில் துயில் கொண்டிருக்கும் மகாவிஷ்ணு விழித்தெழும் காலத்தில் அவனை தொழுவது சகல நலன்களையும் சேர்க்கும் என்பது ஐதீகம்.

முரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக தனது உடலில் இருந்து மோகினியை மகாவிஷ்ணு தோற்றுவித்தார். முரனை மோகினி சம்ஹரித்த நாளே ஏகாதசி. அன்றைய தினம் தன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவி அளிப்பதாகவும் பெருமாள் அருளினார். எல்லா ஏகாதசிகளும் விரதம் இருக்க முடியாதவர்கள் வைகுண்ட ஏகாதசியில் இருக்கலாம். ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமியிலேயே விரதம் தொடங்க வேண்டும். அன்றை தினம் ஒருவேளை மட்டும் சாப்பிடுவார்கள்.

ஏகாதசி தினம் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது சிறப்பு. முடியாதவர்கள் சுவாமிக்கு படைத்த பழம், பால் உண்ணலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் பாடலாம். அதிகாலையில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலுக்கு பெருமாள் எழுந்தருள்வார். அவரோடு சேர்ந்து நாமும் பரமபத வாசலை மிதிப்பது மிகவும் விசேஷம். அன்றைய தினம் இரவு கண் விழிக்க வேண்டும்.

மறுநாள் துவாதசியன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் உள்பட 21 கறியுடன் நிவேதனம் படைத்து ஏழைகள், அடியார்களுக்கு வழங்கி பின்னர் நாம் சாப்பிடுவது சிறப்பானதாகும். வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருப்பது 3 கோடி ஏகாதசிகள் விரதம் இருப்பதற்கான பலனை கொடுக்கும் என்பது நம்பிக்கை.

ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்!


 


ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்!

இது பண்டைய ரோம, கிரேக்கர்களின் காலண்டர் முறையாகும். இந்த மாதங்களும், அதற்கான காரணங்களையும் நாம் ஆய்வு செய்தால் அது விளங்கி விடும்.

ஜனவரி : இது ‘ஜானஸ்’ என்ற ரோமக் கடவுளின் பெயர். இந்தப் பெயரை காலண்டரில் கி.மு. 700 ஆம் ஆண்டு ஜூலி-யஸ் ஸீஸர் மன்னர்தான் சேர்த்தார்.

பிப்ரவரி : இது லத்தீன் மொழி வார்த்தை. ரோமத் திருவிழா ‘பிப்ரேரியஸ்’ இன் நினைவாக வந்த மாதம்.

மார்ச் : இதுவும் லத்தீன் வார்த்தை. ரோமக் கடவுள் ‘மார்ஸ்’ இன் பெயராலே அழைக்கப்படுகிறது.

ஏப்ரல் : லத்தீன் மொழியில் ‘ஏப்ரலிஸ்’ என்பதுதான் ஏப்ரல் என்றாகி விட்டது. இதன் பொருள் ‘திறப்பது’ என்பது ஆகும்.

மே : ‘மேயஸ்’ என்ற கிரேக்கப் பெண் கடவுளின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

ஜூன் : ரோம கடவுள் ‘ஜு னோ ’வின் பெயரால் இம்மாதம் அழைக்கப்படுகிறது.

ஜூலை : மன்னர் ‘ஜூலியஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.

ஆகஸ்ட் : மன்னர் ‘அகஸ்டிஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.

மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும் 7,8 ,9,10 ஆகிய லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளாகும். ஆக மாதங்களின் பெயர்களில் பெரும்பாலானவை கடவுளின் பெயர்கள்தாம்.

ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த கதை!

 
 
 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த கதை!
 
ஜனவரி 1-ந் தேதி, ஆங்கிலப் புத்தாண்டாக உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்போது நிலவும் இந்த நிலை, காலம் காலமாக இப்படியே இருந்ததா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. ஜனவரி முதல் தேதியை புத்தாண்டின் முதல் நாளாக பின்பற்றி வருவது சுமார் 500 வருடங் களாகத்தான். அதற்கு முன், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆண்டின் முதல் நாள் மாறியது.


2000 ஆண்டுகளுக்கு முன் மெசபடோனியர்கள், மார்ச் 25-ந் தேதியைத்தான் ஆண்டின் முதல் நாளாகக் கருதினர். அவர்கள் காலத்தில், ஆண்டுக்கு 10 மாதங்கள்தான் இருந்தன. மார்ச் மாதம்தான் ஆண்டின் முதல் மாதமாகவும், மார்ச் 25-ந் தேதிதான் ஆண்டின் முதல் தேதியாகவும் இருந்தன. இதற்கு காரணம், இயேசுவின் தாய் மேரிக்கு, தான் கர்ப்பமுற்றிருந்தது தெரிய வந்தது என்ற காரணத்தால், மார்ச் 25-ந் தேதியை ஆண்டின் முதல் தேதியாக கருதினர் என்ற ஓரு கருத்தும் கூறப்படுகிறது.

புத்தாண்டு மார்ச் மாதம் 1-ந் தேதிதான் பிறந்தது என்று கருதிய ரோமானியர்கள் அதையே ஆண்டின் முதல் நாளாகவும் கருதினர். ரோமானிய மன்னர்களில் கொஞ்சம் விவரமாக யோசித்த நுமா போம்பிலியஸ் என்பவர், 10 மாதமாக இருந்த ஆண்டில், கூடுதலாக இரண்டு மாதங்களைச் சேர்த்து, ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள் என்றாக்கினார். அந்த முறைதான் இப்போதும் பின் பற்றப்படுகிறது. எனினும், ரோமானிய மன்னர்களிலேயே சிலர், பழையபடி ஆண்டுக்கு 10 மாதம்தான். அதுவும் மார்ச் மாதம்தான் முதல் மாதம் என்று கூறிவந்தனர். பின்னர் அதே ரோமர்கள், முதல் இரண்டு மாதங்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என்று பெயர்களை இட்டனர். ரோமர்களின் கடவுளான ஜனஸ் நினைவாகத் தான் ஜனவரி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

ரோமானிய மன்னர் ஜுலியஸ் சீசர்தான், ஜனவரி 1-ந் தேதியை ஆண்டின் முதல் நாளாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். அதை, இயேசு பிறப்பதற்கு 46 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கி.மு. 46 ஆம் ஆண்டில் அறிவித்தார். அவர் பின்பற்றிய காலண்டர் முறை, ஜுலியன் காலண்டர் முறை என அழைக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள், பழைய மார்ச் 25 ஆம் தேதியை ஆண்டின் முதல் நாள் என்றனர்.

இங்கிலாந்தை ஆண்ட மன்னர்கள், இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25 ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று கூறினர். இயேசு பிறப்பில் இருந்துதான் காலண்டர் முறை தொடங்கியது என்றால், அவர் பிறந்த டிசம்பர் 25 ஆம் தேதியில்தானே புத்தாண்டு தொடங்க வேண்டும் என்று சிலர் வாதம் செய்தனர். அதன் பின்னர் டிசம்பர் 25 ஆம் தேதியையே புத்தாண்டாக பின்பற்றினர். இப்படியாக , 1500 ஆம் ஆண்டு வரை, ஆண்டின் முதல் தேதியில் பல குழப்பங்கள் நிலவின.

கி.பி. 1582 ஆம் ஆண்டு, போப் 13 ஆம் கிரிகோரி, ஜுலியன் காலண்டரை ரத்து செய்தார். நான்காண்டுகளுக்கு ஒரு ஆண்டு லீப் ஆண்டு என்று கூறி, அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள் என்று 365 நாட்களையும், 12 மாதங்களுக்குள் மிகச் சரியாக அடக்கினார். அதில் அறிவியல் பூர்வமான உண்மைகள் இருப்பதாக அறிய வந்ததை அடுத்து, உலகம் முழுவதும் கிரிகோரி யன் காலண்டர் முறை பின்பற்றப்பட்டது.

இந்த முறைப்படி, ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1 என்று நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 500 ஆண்டுகளாகத்தான் எந்த மாற்றமும் இல்லாமல் ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1-ந் தேதியாக விளங்குவதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...wish you a happy new year,,,

அன்புள்ளம் கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
மலரும் புத்தாண்டில் ஒன்றுபட்டு உறவுகளுக்கு கை கொடுப்போம்.
 


  
 

 


 

Monday, December 29, 2014

கழுத்து கருமை நிறம் மறைய

கழுத்து கருமை நிறம் மறைய...

 சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது. கழுத்து கருமை நிறம் மறைய சில எளிய வழிமுறைகள் இதோ..

* கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

* பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.

* முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

* பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.

* சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்.

TNPSCகேள்விகள், TNPSC மாதிரி தேர்வு, அறிந்துகொள்வோம், பொது அறிவு - முக்கிய தினங்கள்பொது அறிவு - முக்கிய தினங்கள்

01. இந்திய குடியரசு தினம் - ஜனவரி 26

02. உலக காசநோய் தினம்- பிப்ரவரி 25

03. தேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28

04. உலக மகளிர் தினம் - மார்ச் 8

05. நுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15

06. உலக பூமி நாள் - ஏப்ரல் 22

07. உலக வன நாள் - மார்ச் 21

08. உலக நீர் நாள் - மார்ச் 22

09. தேசிய கப்பற்படை தினம் - ஏப்ரல் 5

10. உலக சுகாதார நாள் - ஏப்ரல் 7

11. உலக புத்தகநாள் - ஏப்ரல் 23

12. உலக செஞ்சிலுவை தினம் - மே 8

13. தேசிய தொழிலாளர் தினம் - மே 1

14. சர்வ தேச குடும்பதினம் - மே 15

15. உலக தொலைத்தொடர்பு தினம் - மே 17

16. தேசிய வன்முறை ஒழிப்புதினம் - மே 21

17. காமன்வெல்த் தினம் - மே 24

18. உலக போதை மருந்து எதிர்ப்பு நாள் - ஜூன் 26

19. உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11

20. இந்திய சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15

TNPSCகேள்விகள், TNPSC மாதிரி தேர்வு, அறிந்துகொள்வோம், பொது அறிவு,

பொது அறிவு

01. ஒட்டகத்துக்கு வேர்க்காதது ஏன் - வியர்வை நாளங்கள் கிடையாது

02. ஸ்பெயின் நாட்டின் தேசிய சின்னம் எது - கழுகு

03. ஆசியாவின் வைரம் என்று அழைக்கப்படும் நாடு எது - இலங்கை

04. ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள் - 48

05. வேர் இல்லாத தாவரம் எது - இலுப்பை

06. இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி எது- பஞ்சாப் நேஷனல் பேங்க்

07. இந்தியாவில் எந்த நகரில் அரண்மனைகள் அதிகம் உள்ளன - கொல்கத்தா

08. இஸ்ரோ விண்வெளி கோள் நிலையம் எங்குள்ளது - பெங்களூரு

09. தாவரங்கள் எந்த உறையில் தன் உணவை சேமிக்கின்றன - சூலகம்

10. திண்மப்படிக வடிவில் உள்ள ஹாலஜன் - குளோரின்

11. வரலாற்றுச் சான்றுகளை எத்தனை பிரிவாக பிரிக்கலாம் - ஐந்து

12. வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் - ஹெரோடட்டஸ்

13. எந்த நூற்றாண்டில் சமண, பௌத்த சமயங்கள் தோன்றின - கி.மு. 4ம் நூற்றாண்டு

14. சமண சமயத்தை தோற்றுவித்தவர் யார் - மகாவீரர்

15. அக்கெமீனியர் பேரரசை தோற்றுவித்தவர் யார் - முதலாம் சைரஸ்

16. கி.மு.250ல் யாரால் புத்த மாநாடு கூட்டப்பட்டது - அசோகர்

17. அலெக்ஸாண்டர் எந்த நாட்டின் மன்னனாக இருந்தார் - மாசிடோனியா

18. எந்த நூற்றாண்டில் ஹரியாங்க வம்சத்தவர்கள் ஆட்சி செய்தனர் - கி.மு. ஆறாம் நூற்றாண்டு

19. அர்த்தசாஸ்திரத்திலிருந்து அசோகரின் எந்த அமைப்பை பற்றி அறியலாம் - நிர்வாகம்

20. மௌரிய வம்சத்தின் கடைசி மன்னன் யார் - பிருகத்ரதன்

Sunday, December 28, 2014

TNPSC மாதிரி தேர்வு, TNPSCகேள்விகள், பொது அறிவு,

பொது அறிவு
 

01. மகாமகம் நடைபெறும் இடம்- கும்பகோணம்
02. மின்சார பல்பில் உள்ள மின்இழை - டங்ஸ்டன்
03. விஜய நகர சாம்ராஜ்யத்தை நிறுவியவர் - அரிகரர் புக்கர்
04. நான்கு தீவுகளால் உருவான நாடு- ஜப்பான்
05. ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு - பின்லாந்து
06. பும்புகார் துறைமுகத்தை உருவாக்கியவர்- கரிகாலன்
07. புவிஈர்ப்பு விசையை கண்டுப்பிடித்தவர் - ஐசக் நியூட்டன்
08. ஒன்டே கிரிக்கெட் என்ற நூலை எழுதியவர் - கபில்தேவ்
09. இந்தியாவின் மிகத் தொன்மையான நடனம் எது- பரதநாட்டியம்
10. ஒளி வருடம் என்பது எதன் அலகு- அண்டவெளி தூரம்
11. இந்திய தேசிய கீதத்தை எவ்வளவு நேரத்திற்குள் பாடி முடிக்க வேண்டும் - 52 வினாடிகள்
12. சூரிய ஒளி பு+மியை வந்தடைய எவ்வளவு நேரம் ஆகிறது- 8 நிமிடங்கள்
13. உலகின் பிரதான மூன்று உணவுப் பொருட்கள் யாவை- கோதுமை, அரிசி, சோளம்
14. தமிழில் வெளியான முதல் நாவலின் பெயர்- பிரதாப முதலியார் சரித்திரம்
15. இந்தியாவில் மிக அதிக நீளமான நதி எது- கங்கை
16. இந்தியாவின் மிகப் பெரிய மசூதி உள்ள இடம் எது - புதுடெல்லி (ஜிம்மா மஜூதி)
17. மிகப்பெரிய கோள் எனப்படுவது எது - ஜூபிடர்
18. மிக விரைவாக பறக்ககூடிய பறவை எது - சுவிப்ட்
19. மிகப்பெரிய அருங்காட்சியகம் இந்தியாவில்
எங்குள்ளது- கல்கத்தா
20. இந்தியாவில் மிக நீளமான அணை எது- ஹிராகுட்

Monday, December 22, 2014

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்
வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம். 

மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.

அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம். 

ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில தொப்பையையும் மேற்கொள்ள வேண்டும். 

அத்தகைய டயட்டை கீழேக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும். சரி, அதைப் பார்ப்போமா!!! 

1. தண்ணீர்: தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும். 

2. உப்பை:தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். 

தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும். 

3. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம். 

4. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது. 

5. அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும். 

6. சிட்ரஸ்: பழங்கள் பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

7. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும். 

8. க்ரீன் டீ: அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள். 

9. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும். 

10. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம். 

11. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது. 

12. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும். 

13. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். 

14. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். 

மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையை மற்றும் உடல் எடை விரைவில் குறையும். ஆனால் நம்பிக்கையின்றி மேற்கொண்டால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்காது.

-----------------

Toppaiyai kuṟaikka 14 eḷiya vaḻikaḷ - To Reduce Belly fat 
Toppaiyai kuṟaikka 14 eḷiya vaḻikaḷ Vayiṟṟiṉaic cuṟṟi toppai varuvataṟku mukkiya kāraṇam, ārōkkiyamaṟṟa vāḻkkai muṟaiyai piṉpaṟṟuvatu tāṉ. Ittakaiya vāḻkkai muṟaiyai yārum kaṭṭāyappaṭutti vāḻa vēṇṭum eṉṟu colvatillai. Nāmē tāṉ attakaiya ārōkkiyamaṟṟa vāḻkkai muṟaiyai veḷiyulakattiṟkāka tērnteṭuttu vāḻntu varukiṟōm. Mēlum palar ārōkkiyamaṟṟatu eṉṟu terintum iṉṟum ataṉaip piṉpaṟṟukiṉṟaṉar. Ivvāṟu tērnteṭuttu piṉpaṟṟiviṭṭu, piṉṉar kuttutē kuṭaiyutē eṉṟu peritum avastaippaṭuvōr atikam. Āṉāl ittakaiya toppaiyai kuṟaippatu eṉpatu mikavum eḷitu tāṉ. Ataṟku mutalil ceyya vēṇṭiyatu ellām jaṅk uṇavukaḷai tavirttu, tiṉamum pōtiya aḷavil uṭaṟpayiṟci ceyvatu tāṉ. Itaṉāl atikappaṭiyāṉa uṭal eṭai kuṟaivatōṭu, vayiṟṟaic cuṟṟiyirukkum toppaiyai eḷitil kuṟaikkalām. 

Ēṉeṉil uṭaṟpayiṟciyāṉatu oru kuṟippiṭṭa pākattiṟku maṭṭum eṉpatillai. Potuvāka uṭaṟpayiṟci ceytāl, uṭal muḻuvatumē appayiṟciyil īṭupaṭuvatāl, niccayam uṭal eṭaiyuṭaṉ, toppai eṉṟu collappaṭum pelli kuṟaiyum. Ataṟku tiṉamum uṭaṟpayiṟciyuṭaṉ, orucila toppaiyaiyum mēṟkoḷḷa vēṇṭum. Attakaiya ṭayaṭṭai kīḻēk koṭuttuḷḷōm. Ataip paṭittu, uṭaṟpayiṟciyuṭaṉ cērttu, itaiyum piṉpaṟṟiṉāl, niccayam uṭal eṭaiyuṭaṉ, vayiṟṟiṉaic cuṟṟiyuḷḷa toppaiyaiyum kuṟaikka muṭiyum. Cari, ataip pārppōmā!!!
1. Taṇṇīr: Tiṉamum kuṟaintatu 78 ṭamḷar taṇṇīr kuṭittāl, uṭal vaṟaṭciyillāmal iruppatōṭu, uṭalil taṅkiyirukkum naccukkaḷ aṉaittum veḷiyēṟiviṭum. Mēlum avvappōtu cīrāṉa iṭaiveḷiyil taṇṇīr kuṭittāl, uṭaliṉ meṭṭapālicamāṉatu atikarikkum. Itaṉāl vayiṟṟaic cuṟṟi kāṇappaṭum pelliyum kuṟaintuviṭum. 
2. Uppai:Tavirkkavum uṇavil atikappaṭiyāṉa uppu cērppatai tavirkka vēṇṭum. Ēṉeṉil uppai atikam cērttāl, uṭalil taṇṇīrāṉatu veḷiyēṟāmal, atikamāka taṅkiviṭum. Eṉavē uṇavil atikappaṭiyāṉa uppu cērppatai aṟavē tavirkka vēṇṭum. Vēṇṭumeṉil ataṟku patilāka uṇavil cuvaiyaik kūṭṭuvataṟku mūlikaikaḷ maṟṟum macālākkaḷ atikam cērttuk koḷḷalām. Tēṉ: Vayiṟṟaic cuṟṟi toppaiyai ēṟpaṭuvataṟku, carkkaraiyum oru kāraṇam. Eṉavē uṇṇum uṇavup poruḷil carkkaraikku patilāka tēṉai cērttuk koṇṭāl, toppaiyai kuṟaivatōṭu, uṭal eṭaiyum kuṟaiyum. 
3. Paṭṭai: Tiṉamum kālaiyil kāpi allatu ṭī kuṭikkum pōtu, atil ciṟitu paṭṭai tūḷai cērttu kalantu kuṭittāl, irattattil uḷḷa carkkaraiyiṉ aḷavai cīrāka vaikkalām. Mēlum uṭal eṭaiyaiyum ārōkkiyamāṉa muṟaiyil kuṟaikkalām. 
4. Naṭs: Uṭal eṭaiyai kuṟaikka vēṇṭumeṉil uṭaṉē koḻuppuḷḷa uṇavup poruṭkaḷ aṉaittaiyum niṟuttiviṭuvōm. Uṇmaiyil atu tavaṟāṉa karuttu. Ēṉeṉil uṭalukku ārōkkiyamāṉa koḻuppukkaḷ kiṭaikka vēṇṭiyatu mikavum iṉṟiyamaiyātatu. Attakaiya koḻuppukkaḷ naṭsil atikam uḷḷatu. Eṉavē snāks nērattil vālnaṭ, pātām, vērkkaṭalai pōṉṟavaṟṟai cāppiṭuvatu mikavum nallatu. 
5. Avakēṭō: Avakēṭōvilum uṭalukku vēṇṭiya koḻuppāṉatu atikam niṟaintuḷḷatu. Mēlum itaṉai cāppiṭṭāl, atil niṟaintuḷḷa ūṭṭaccattukkaḷ, vayiṟṟai niṟaittu, aṭikkaṭi paci ēṟpaṭuvatai taṭukkum. 
6. Ciṭras: Paḻaṅkaḷ paḻaṅkaḷil ciṭras paḻaṅkaḷai atikam cāppiṭṭāl, atil uḷḷa vaiṭṭamiṉ ci, uṭalil taṅkiyuḷḷa tēvaiyillāta koḻuppukkaḷai karaittu veḷiyēṟṟiviṭum. Itaṉāl aḻakāṉa uṭalai peṟa muṭiyum. 
7. Tayir: Tiṉamum uṇavil tayirai cērttu vantāl, atil uḷḷa kuṟaivāṉa kalōri maṟṟum ūṭṭacacattukkaḷāl, eṭai kuṟaivatōṭu, toppaiyum kuṟaiya ārampikkum. 
 8. Krīṉ ṭī: Aṉaivarukkumē krīṉ ṭī kuṭittāl, uṭal eṭai kuṟaiyum eṉpatu teriyum. Mēlum palarum inta krīṉ ṭīyiṉ palaṉaip peṟṟuḷḷaṉar. Eṉavē tiṉamum oru ṭamḷar krīṉ ṭī kuṭittu vāruṅkaḷ. 
9. Cālmaṉ mīṉ: Cālmaṉ mīṉil omēkā3 ḥpēṭṭi āciṭ atikam niṟaintuḷḷatu. Itu uṭaliṉ ceyalpāṭṭiṟku mikavum iṉṟiyamaiyāta oru koḻuppākum. Ākavē inta mīṉai uṇavil atikam cērttu vantāl, nāḷ muḻuvatum vayiṟu niṟaintiruppatōṭu, toppai varāmalum taṭukkum. 
10. Perrip paḻaṅkaḷ: Perrip paḻaṅkaḷ koḻuppaik kuṟaikkum oru ciṟanta uṇavup poruḷ. Ēṉeṉil atil vaiṭṭamiṉ ci eṉṉum cattu atika aḷavil niṟaintuḷḷatāl, pelliyāl avastaippaṭupavarkaḷ, perrip paḻaṅkaḷai atikam cāppiṭṭāl, nalla palaṉai viraivil peṟalām. 
11. Prākkōli: Prākkōliyilum, maṉa aḻuttattai atikarikkum kārṭicōliṉ aḷavaik kaṭṭuppaṭuttum vaiṭṭamiṉ ci cattu atikam niṟaintuḷḷatu. Atumaṭṭumallāmal, itaṉai cāppiṭṭāl, uṭalil uḷḷa koḻuppukkaḷai āṟṟalāka māṟṟum poruḷāṉatu uḷḷatāl, pelli piraccaṉai uḷḷavarkaḷ prākkōliyai atikam cāppiṭuvatu nallatu. 
12. Elumiccai cāṟu: Vayiṟṟaic cuṟṟiyirukkum toppaiyai kuṟaikka orē ciṟanta vaḻiyeṉṟāl, tiṉamum kālaiyil elumiccai jus pōṭṭu kuṭippatu tāṉ. Atilum vetuvetuppāṉa nīril elumiccai cāṟṟiṉai ūṟṟi, atil ciṟitu uppu maṟṟum tēṉ cērttu kuṭittāl, niccayam toppai kuṟaiyum. Atilum inta ceyalai toṭarntu 1 mātam ceytu vantāl, itaṟkāṉa palaṉ uṭaṉē teriyum. 
 13. Pūṇṭu: Elumiccai cāṟṟiṉai viṭa iraṇṭu maṭaṅku atikamāṉa caktiyāṉatu pūṇṭil uḷḷatu. Eṉavē kālaiyil 1 pal pūṇṭu cāppiṭṭāl, uṭalil taṅkiyuḷḷa koḻuppukkaḷ karaivatōṭu, uṭalil iratta ōṭṭamum cīrāka irukkum. 
14. Iñci: Uṇavukaḷil iñciyai atikam cērttāl, atu toppaiyai kuṟaikka peritum utaviyāka irukkum. Mēlum itil atikappaṭiyāṉa āṉṭi'āksiṭaṉṭṭukaḷāṉatu niṟaintiruppatāl, iṉculiṉ curappai cīrāka vaittu, irattattil uḷḷa carkkaraiyiṉ aḷavai kuṟaikkum. Mēṟkūṟiya aṉaittaiyum nampikkaiyuṭaṉ mēṟkoṇṭāl, niccayam toppaiyai maṟṟum uṭal eṭai viraivil kuṟaiyum. Āṉāl nampikkaiyiṉṟi mēṟkoṇṭāl, ataṟkāṉa palaṉ niccayam kiṭaikkātu.

-----------------------------

14 simple ways to reduce cap - To Reduce Belly fat
The main reason for coming to the stomach around the belly, that unhealthy lifestyles. Say that no one should be forced to live such a lifestyle. Choose unhealthy lifestyles such as ourselves veliyulakattirk live.And knowing that unhealthy people still follow it. Select the pinparrivittu, avastaippatuvor much more then that kuttute kutaiyute. It is very easy to reduce the cap.First of all we have to do to avoid junk foods, exercising daily is sufficient. The excessive body weight decreased, around the stomach to reduce the cap.Although there is only a certain part of the exercise. If general fitness, body appayirci engage in throughout the course, with body weight, reduce belly belly that. And with daily exercise, should take a few cap.Such a diet given below. Read it, along with exercise, follow this course with body weight, can reduce the stomach around the cap. Yes, it's about!1. Water: I drink at least 78 glasses of water, the body with varatciyillamal, will stay in the body of all toxins out. More often if you drink water at regular intervals, to increase the body's mettapalicamanatu. It reduces the stomach around the belly is.2. Salt: Avoid excess salt in the diet to avoid adding. If you add too much salt because, escape of water in the body, will remain high. Adding too much salt in the diet should be absolutely avoided. In order to herbs and spices instead of kuttuvatarku can add flavor to food.Honey: for the stomach around the cap, because the sugar. Add honey instead of sugar in the food product, the cap decreases, and reduced body weight.3. Bar: daily coffee or tea in the morning while drinking, if you drink it mixed with a little bark powder, can regulate the amount of sugar in the blood. And reduced body weight in a healthy manner.4. Nuts: In order to reduce body weight and fat immediately suspend all food products. In fact, it's a bad idea. There are healthy fats are very important for the body. Nuts are high in such fats. At the time valnat snacks, almond, peanut, etc. It is good to eat.5. Avaketo: avaketovilum filled with too much body fat is required. And if so, it is filled with nutrients, loaded with the stomach, often to prevent hunger.6. Citrus fruits to eat more fruit, citrus fruits, vitamin C in it, stay in the body where unwanted fats displace dissolved. If you can get a beautiful body.7. Yoghurt: Yoghurt daily diet comes along, and low in calories, and if uttacacattukkal, weight decreased, the belly will start to decline.8. Green tea: Green tea drinks for all, that body weight is reduced. Many also have the benefit of green tea. Come drink a glass of green tea a day.9. Salmon fish: salmon, fish high in omega-3 fatty acid is filled. This is the most essential function of cholesterol in the body. So come along much of the fish in the diet, stomach full throughout the day, and along the belly to prevent.10. Berry fruits: berries and a low fat food. Because of the high level of vitamin C in a nutrient rich, but some pepole will affected by belly fat, eat more fruits, berries, good results can be obtained quickly.11. Prakkoli: Brokkoli, controlling the amount of stress increases cortisol filled with high vitamin C content. Additionally, if so, the substance in the body that convert energy from fats, eat more good prakkoliyai belly problem.12. Lemon juice: The best way to reduce stomach around the cap, lemon juice and drink it every morning. Especially in warm water pouring carrinai lemon, and add a little salt and honey drinks, you reduce belly. The following 1 month and if this action, which is for the benefit immediately.13. Garlic: garlic and lemon carrinai energy is more than two times. 1 tooth of garlic eaten in the morning, the body is staying with karaivat fats, the body and the blood will flow.14. Ginger: Ginger is in these foods, it will help greatly to reduce the cap. But also filled with many anti oxidents, insulin secretion and smooth, can reduce the size of sugar in the blood.If all of the above with confidence, you will soon cap and body weight. But being no hope, it certainly will not get the benefit.

குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 12 நல்ல பழக்கங்கள்

குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நல்ல பழக்கங்கள் - Good habits that kids should have

குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 12 நல்ல பழக்கங்கள்

பெற்றோரின் வளர்ப்பை குழந்தைகளின் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று சொல்வார்கள். அது உண்மை தான். ஏனெனில் குழந்தைகள் குறும்பு செய்தாலும் சரி, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடந்து கொண்டாலும் சரி, அதற்கு முதலில் சொல்வது பெற்றோரின் வளர்ப்பு என்று தான். அந்த வகையில் அனைத்து பெற்றோர்களுமே தனது குழந்தை அனைவரும் அதிசயப்படும் வகையில் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.


அதற்கு முதலில் அனைத்து பெற்றோர்களும் செய்ய வேண்டியது, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும். அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வந்துவிடும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும் பொழுதே, அதற்கான நன்மைகளையும் வெளிப்படையாக புரியுமாறு சொன்னால், குழந்தைகள் புரிந்து கொண்டு, அதனை விருப்பத்துடன் பின்பற்றுவார்கள்.

இப்போது குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டிய சில நல்ல பழக்கங்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, உங்கள் குழந்தைகளை பின்பற்ற வைத்து, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொடுங்கள்.


1. இருமுறை பல் துலக்குதல்
நிறைய குழந்தைகள் பல் தேய்க்கவே சோம்பேறித்தனப்படுவார்கள். எனவே புரியாத வயதுள்ள குழந்தைகளாக இருந்தால், அவர்களை அழைத்து பற்களை தேய்த்துவிடுங்கள். அதுவே புரிந்து கொள்ளும் வயதுள்ளவர்களாக இருந்தால், அவர்களுக்கு பற்களை தினமும் இரண்டு முறை தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளைச் சொன்னால், அவர்களே தினமும் பற்களை தேய்க்க வேண்டுமென்று உங்களை தேடி வருவார்கள்.2. அடித்து எழுப்ப வேண்டாம்
நிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் சொல்லி தருகிறேன் என்று அதிகாலையிலேயே குழந்தைகளது தூக்கம் கலைவதற்குள்ளேயே எழுப்பி விடுவார்கள். உண்மையில் அவ்வாறு எழுப்புவது நல்ல பழக்கமல்ல. சொல்லப்போனால் அது அவர்களது உடலுக்கு கெட்டதைத் தான் விளைவிக்கும். எப்படியெனில், சிறு குழந்தைகளுக்கு 8-9 மணிநேரத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆகவே அவர்களது தூக்கம் கலைவதற்கு முன்பே, அடித்து எழுப்ப வேண்டாம். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தூங்க விடக் கூடாது. இல்லாவிட்டால், நாளடைவில் அதுவே கெட்ட பழக்கமாகிவிடும்.
3. சாப்பிடும் பழக்கம்
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எப்படி உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.4. சுத்தம் செய்தல்
குழந்தைகளை சிறு வயதிலேயே சுத்தம் செய்யும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, பால் குடிக்கும் போது பாலை கீழே சிந்திவிட்டால், அதனை அவர்களையே சுத்தம் செய்ய சொல்ல வேண்டும். மேலும் படிக்கும் அறையை வாரந்தோறும் சுத்தம் செய்யுமாறு பழக்கப்படுத்த வேண்டும்.5. மரியாதை
குழந்தைகளுக்கு தவறாமல் கற்றுக் கொடுக்க வேண்டியவைகளில் முக்கியமானது 'நன்றி' மற்றும் 'தயவு செய்து' போன்ற மரியாதையான வார்த்தைகள் தான். எனவே இதனை மறக்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
6. பகிர்ந்து கொள்ளுதல்
பகிர்ந்து கொள்வது என்பது ஒருவிதமான சந்தோஷம். ஆனால் தற்போதுள்ள குழந்தைகள் இதனை செய்வதில்லை. மேலும் தற்போதைய பெற்றோர்கள் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வதால், குழந்தைகளால் அவர்களுக்குரிய பொருளை வீட்டிற்கு யாரேனும் வந்தால், அவர்களை தொடக்கூட அனுமதிப்பதில்லை. எனவே இந்த பகிர்தல் பழக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.7. பொறுப்பு
சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பொறுப்புக்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு செலவிற்கு பணம் பொடுத்தால், அதை சேமித்து வைத்து, தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று சொல்லி பழக்க வேண்டும். இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரித்து, நல்ல பொறுப்புள்ள மனிதனாக இருப்பார்கள்.
8. ஆரோக்கிய உணவுகள்
தற்போதுள்ள குழந்தைகளுக்கு பிட்சா, பர்கர் போன்றவை தான் பிடிக்கிறது. ஆனால் அதனை சிறுவயதிலேயே வாங்கிக் கொடுத்து பழக்கிவிட்டால், பின் அவர்கள் அதற்கு அடிமையாகி, பிற்காலத்தில் ஆரோக்கியமற்ற உடலைப் பெற்றிருப்பார்கள். ஆகவே அவர்களுக்கு ஆரோக்கிய உணவுகளை வீட்டிலேயே சமைத்துக் கொடுத்து, வீட்டு உணவின் சுவைக்கு பழக்கப்படுத்த வேண்டும்.9. அளவான டிவி, அதிகமான விளையாட்டு
குழந்தைகளை சுத்தமாக டிவி பார்க்கவே கூடாது என்று சொல்லக்கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக டிவியையும் பார்க்க விடக்கூடாது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக விளையாட்டில் ஈடுபட வைக்கலாம். இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, கண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.
10. நல்ல பழக்கம்
பொது இடங்களில் அதுவும் நடக்கும் பாதைகளில் குப்பையைப் போடும் பொழுது கண்டித்து, அதனை குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். இதனால் சிறு வயதிலேயே சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராக மாற்றலாம். மேலும் இந்த செயலை மற்றவர்கள் பார்க்கும் பொழுது, பெற்றோரின் வளர்ப்பை அனைவரும் பாராட்டுவார்கள்.11. உதவி
சற்று பெரிய குழந்தைகளாக இருந்தால், நீங்கள் வீட்டு வேலை செய்யும் போது, அவர்களை உடன் அழைத்து சிறு சிறு வேலைகளை செய்யுமாறு சொல்லலாம்.12. சரியான படுக்கை நேரம்
குழந்தைகளுக்கு தினமும் இரவில் ஒரே நேரத்தில் படுக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் ஒழுங்கான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வார்கள்.

பொதுத்தமிழ் - மணிமேகலை


பொதுத்தமிழ் - மணிமேகலை


01. மணிமேகலையை இயற்றியவர் - கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

02. மணிமேகலையின் தோழியாய் அமைந்து
நண்பர்களுக்கெல்லாம் ஒரு இலக்கணமாக அமைந்தவள் - சுதமதி

03. மணிமேகலையின் அமுதசுரபியில் முதன் முதலில் அன்னமிட்டவர் - ஆதிரை

04. மணிமேகலையில் உள்ள காதைகள் - 30

05. மணிமேகலை பெரிதும் வலியுறுத்துவது - பசிப்பிணி நீக்கம்

06. மணிமேகலையின் வேறு பெயர் - மணிமேகலைத் துறவு

07. மணிமேகலை பிறந்த ஊர் - பூம்புகார்

08. மணிமேகலை மறைந்த ஊர் - காஞ்சிபுரம்

09. அமுதசுரபி முற்பிறவியில் யாரிடம் இருந்தது - ஆபுத்திரன்

10. மணிமேகலை நூல் முழுவதும் எந்தப் பாவினால் ஆனது - ஆசிரியப்பா

11. மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்தி யாராக உருமாறினாள் - காயசண்டிகை

12. யாரின் உதவியால் மணிமேகலை அமுதசுரபியைப் பெறுகிறாள் - தீவதிலகை

13. சீத்தலைச் சாத்தனாரின் காலம் - கி.பி.2ஆம் நூற்றாண்டு

14. மணிமேகலை எந்த தீவில் அமுதசுரபியைக் கண்டெடுத்தாள் - மணிபல்லவம்

15. தமிழின் முதல் சமய(பௌத்த) காப்பியம் - மணிமேகலை

16. காயசண்டிகையின் கணவர் பெயர் - காஞ்சனன்

17. ஆபுத்திரன் வரலாற்றை மணிமேகலைக்குச் சொன்னவர் யார்- அறவண அடிகள்

18. மணிமேகலை காப்பியம் வலியுறுத்துவது எது - துறவறம்

19. மணிமேகலை எக்கதைக்களத்தை ஒத்து இருப்பதால் இரட்டைக் காப்பியம் என்றழைக்கப்படுகிறது - சிலப்பதிகாரம்

20. மணிமேகலையை பின்தொடர்ந்த அரச குமாரன் - உதயகுமாரன்

உலகத்தில் விலை மதிப்பற்ற பொருள்

உலகத்தில் விலை மதிப்பற்ற பொருள் நேரம் மட்டுமே.


 
பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர், ஒரு புத்தகக்கடை வைத்திருந்தார். அன்று அவருக்கு முக்கியமான பணி. விற்பனையைக் கவனிக்கும்படி தனது பணியாளரிடம் சொல்லி விட்டு, தனது அறையில் இருந்து வேலையைப் பார்க்கத் துவங்கினார்.
அப்போது ஒரு வாடிக்கையாளர் வந்தார். புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தார். நீண்ட நேரத்துக்குப் பின் ஒரு புத்தகத்தை எடுத்தார்.

விற்பனையாளரிடம் அதன் விலை என்ன என்றார்.
"ஒரு டாலர்'' என்றார் விற்பனையாளர்.
"விலை அதிகமாக இருக்கிறதே'' என்றவர், இன்னொரு புத்தகத்தைத் தேடி எடுத்தார். அதன் விலையைக் கேட்டார்.
"இதுவும் ஒரு டாலர் தான்,'' என்ற விற்பனையாளரிடம்,"தம்பி! இதன் விலை தொடர்பாக, நான் உங்கள் முதலாளியிடம் பேச வேண்டும். அவரை வரச்சொல்லுங்கள்,'' என்றார்.

"ஐயா! அவர் முக்கியப் பணியில் இருக்கிறார். தங்களிடம் பேசும் அளவுக்கு நேரமில்லை. நீங்கள் இந்த விலையைக் கொடுத்து புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள்,'' என்றார்.
விற்பனையாளரிடம் கடுமையாக வாதாடி, உரிமையாளர் இங்கே வந்தே ஆக வேண்டுமென அடம்பிடித்தார்.
வேறு வழியின்றி ஊழியர் பிராங்க்ளினிடம் சென்று விஷயத்தைச் சொன்னார்.
பிராங்க்ளின் வெளியே வந்தார்.
"ஐயா! இந்த புத்தகம் எனக்கு வேண்டும். ஒரு டாலர் என்பது அதிகமாக இருக்கிறது. குறைத்துச் சொல்லுங்கள்,'' என்றார். பிராங்க்ளின் மறுத்தார்.
சிறிதுநேரம் வாக்குவாதம் தொடர்ந்தது.
"கடைசியாக இதன் விலையைக் கூறுங்கள்,'' என்றார் வந்தவர்.
"ஒரு டாலர் 25 சென்ட்.'' என்றார் பிராங்க்ளின்.
வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியாகி விட்டது.
"நான் குறைக்கச் சொன்னால் நீங்கள் உயர்த்திச் சொல்கிறீர்களே! எதற்கு?'' என்றார்.
"புத்தகத்தின் விலை ஒரு டாலர் தான். நான் நேரத்தைப் பொன்னாக மதிப்பவன்.
என் பணியை இவ்வளவு நேரம் கெடுத்தீர்களே! அதற்கு 25சென்ட்,'' என்றார் பிராங்க்ளின்.
வந்தவரோ விடாக்கண்டன். குறைத்தே ஆக வேண்டுமென அவரிடம் வாதிட, "இரண்டு டாலர்'' என்றார் பிராங்க்ளின்.
வாடிக்கையாளர் கோபம் கொப்பளிக்க நின்ற போது, "ஏன் மேலும் உயர்த்தினீர்கள்?'' என்றார்.

"நான் நேரத்தின் அருமையை உணர்ந்தவன். நீங்கள் உணரவில்லை. அதற்காகத்தான் இந்த விலை உயர்வு,'' என்றார்.

வந்தவர் இரண்டு டாலரைக் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார்.
உலகத்தில் விலை மதிப்பற்ற பொருள் நேரம் மட்டுமே. பணக்காரனாவதற்கு ஒரே தகுதி காலத்தின் அருமையை உணர்வது தான்.

Monday, December 1, 2014

TNPSC மாதிரி தேர்வு - பகுதி 2

TNPSC மாதிரி தேர்வு - பகுதி 2(26 முதல் 50 வினாக்கள்) 


 1. பிரபஞமித்திரன் என்ற வார பத்திரிக்கையை வெளியிட்டவர் யார் ?
  1. வாஞ்சிநாதன்
  2. பெ.சுந்தரம் பிள்ளை
  3. சுப்பிரமணிய சிவா
  4. மு.மேத்தா

 2. "சிறைவாச குறிப்பு" என்ற நூலை சிறையிலிருந்து எழுதியவர் யார் ?
  1. பெரியார்
  2. உ.வே.சாமிநாத ஐயர்
  3. ராஜாஜி
  4. காந்தியடிகள்

 3. தமிழ்நாட்டின் முதலாவது சட்டமன்றத்தொகுதியின் பெயர் என்ன ?
  1. ராயபுரம்
  2. அம்பத்தூர்
  3. ஆவடி
  4. சென்னை

 4. தமிழ்நாட்டின் மாஃபசான் என்று அழைக்கப்படுபவர் யார் ?
  1. கல்கி
  2. சுஜாதா
  3. அண்ணா
  4. ஜெயகாந்தன்

 5. தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் அமைந்துள்ள ஊர் ?
  1. நீலகிரி
  2. கோயம்பத்தூர்
  3. கன்னியாகுமரி
  4. திருச்சி

 6. குறிப்பிடபடாத அல்லது எஞ்சிய அதிகாரங்கள் யாரிடம் உள்ளது?
  1. குடியரசு தலைவர்
  2. பாராளுமன்றம்
  3. பிரதமர்
  4. லோசபா

 7. அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகள் 235 முதல் 263 வரையிலான விதிகளின் முக்கிய சாராம்சம் என்ன ?
  1. தேர்தல் விதிகள்
  2. துணை குடியரசு தலைவர் தேர்தல்
  3. மத்திய அரசுக்கு கூடுதலான அதிகாரம்
  4. கவர்னர் தேர்தல்

 8. நாடாளுமன்ற கூட்டத்தொடரைக் கூட்டுபவர் யார் ?
  1. சபாநாயகர்
  2. பிரதமர்
  3. நாடாளுமன்ற நிலைக்குழு
  4. குடியரசு தலைவர்

 9. குடியரசு தலைவர் பதவி காலியாகும் போது துணை குடியரசு தலைவர் எவ்வளவு காலம் குடியரசுத் தலைவராக பொறுப்பில் இருக்க முடியும் ?
  1. தேர்தல் நடக்கும் வரை
  2. 1 வருடம்
  3. 6 மாதம்
  4. 1 மாதம்

 10. அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும், ஒட்டு மொத்தமாகவும் யாருக்கு பொறுப்புடையவர்களாவார்கள் ?
  1. பாராளுமன்றம்
  2. குடியரசுத் தலைவர்
  3. உச்ச நீதிமன்றம்
  4. லோக்சபா

 11. நிதி மசோதாக்களின் பிறப்பிடம் ?
  1. லோக்சபா
  2. ராஜ்யசபா
  3. நிதித்துறை
  4. கேபினட்

 12. குடியரசு தலைவரை பதவி நீக்கம் செய்யும் தகுதி உடையவர்கள் ?
  1. லோக்சபா
  2. ராஜ்யசபா
  3. உச்ச நீதிமன்றம்
  4. நாடாளுமன்றம்

 13. மாநிலங்களவையின் 1/3 பகுதியினர் எத்தனை ஆண்டிற்கு ஒருமுறை ஓய்வு பெறுகின்றனர் ?
  1. 5
  2. 4
  3. 3
  4. 2

 14. மதராசு மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்பட்ட ஆண்டு ?
  1. 1947
  2. 1957
  3. 1959
  4. 1969

 15. இந்திய அரசிய்யலமைப்பின் படி மாநில அரசின் தலைவர் ?
  1. முதல்வர்
  2. சபா நாயகர்
  3. குடியரசு தலைவர்
  4. ஆளுநர்

 16. வெப்ப மண்டலக் காடுகளில் அமைந்துள்ள புல்வெளியின் பெயர் ?
  1. ப்ரைரி
  2. பம்பாஸ்
  3. வெல்ட்
  4. சவானா

 17. மிகக் குறைவான மக்கள் அடர்த்தியுடைய நாடு ?
  1. சாட்
  2. கனடா
  3. வட அமெரிக்கா
  4. மங்கோலியா

 18. வானவியலின் பிறப்பிடமாகக் கருதப்படும் பண்டைய கால நகரம் ?
  1. மொஹஞ்சதாரோ
  2. ஏதென்ஸ்
  3. மாயன்
  4. உர்

 19. தீபகற்ப இந்தியாவில் குளிர்காலம் என்பது
  1. அதிகமானதாக இருக்கும்
  2. குறைவானதாக இருக்கும்
  3. குளிர்காலம் என்பதே கிடையாது
  4. மிதமானதாக இருக்கும்

 20. வனத்துறை ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம்
  1. வெல்லிங்டன்
  2. பெங்களூர்
  3. கோயம்பட்தூர்
  4. டேராடூன்

 21. இந்தியாவின் முதன்மையான நார்ப்பயிர் எது ?
  1. சணல்
  2. மணிலா
  3. தேங்காய்
  4. பருத்தி

 22. தீபகற்ப இந்தியாவின் முக்கிய பணப்பயிர் ?
  1. தேயிலை
  2. இரப்பர்
  3. பருத்தி
  4. காப்பி

 23. பருத்தி நெசவாலைகள் இந்தியாவில் முதலில் துவங்கப்பட்ட இடம் ?
  1. கல்கத்தா
  2. சென்னை
  3. கோயம்பத்தூர்
  4. மும்பை

 24. தமிழ்நாட்டில் காப்பி பயிராகும் இடம் ?
  1. ஆனை மலை
  2. ஏலக்காய் மலை
  3. கன்னியாகுமரி
  4. பழனி மலை

 25. ஆசியாவின் மிகப்பெரிய மரம் அறுக்கும் ஆலை அமந்துள்ள இடம் ?
  1. இலங்கை
  2. பூடான்
  3. இலட்ச தீவுகள்
  4. அந்தமான்

Tamilnadu General Knowledge for TNPSC Exams

Tamilnadu General Knowledge for TNPSC Exams 

 

 1. First Chief Minister of Tamilnadu after Independence
  1. D.Prakasam
  2. Thiyagaraja Chettiyar
  3. Omathur Ramaswamy Reddy
  4. Rajaji
 2. Commonweal Party in Tamilnadu was founded by 
  1. Ramaswamy Padayachi
  2. Rajaji
  3. D.Prakasam
  4. Manickavelu Naicker

 3. Who was called as ' Andhra Kesari'
  1. D.Prakasam
  2. Thiyagaraja Chettiyar
  3. Omattur Ramaswamy Reddy
  4. None of the above

 4. Tamilnadu Panchayat Act was enacted in the year
  1. 1955
  2. 1956
  3. 1957
  4. 1958

 5. The name 'Madras State' was changed as 'Tamilnadu' in the year
  1. 1947
  2. 1949
  3. 1958
  4. 1961

 6. Who was the last Congress Chief Minister of Tamilnadu ?
  1. Kamaraj
  2. M.Bakthavachalam
  3. Rajaji
  4. None of the above

 7. First Hindi Agitation Conference was held at
  1. Madurai
  2. Coimbatore
  3. Trichy
  4. Chennai

 8.   CN Annadurai introduced 'Two Language Policy' (Tamil,English) in Tamilnadu in the year
  1. 1949
  2. 1955
  3. 1958
  4. 1968

 9. Which of the following is wrong
  1. Diravidar Kazhagam was founded in the year 1944
  2. DMK was founded in the year 1949
  3. DMK contested for the first time in the 1952 General Elections
  4. DMK won in the Tamilnadu Assembly Elections of 1967

 10. Where was the Second World Tamil Conference was held in the year 1968
  1. Malasia
  2. Singapore
  3. Madurai
  4. Chennai

TNPSC மாதிரி தேர்வு - பகுதி 1 (1 முதல் 25 வினாக்கள்)

TNPSC மாதிரி தேர்வு - பகுதி 1 (1 முதல் 25 வினாக்கள்) 

 


 1. பின் வருவனவற்றில் சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு எது ?
  1. அரிசி
  2. சோளம்
  3. கோதுமை
  4. கம்பு

 2. இறந்தவர்களை ஹரப்பா மக்கள் என்ன செய்தனர் ?
  1. எரிப்பார்கள்
  2. திறந்த வெளியில் விட்டு விடுவர்
  3. நதிகளில் மிதக்க விடுவர்
  4. புதைப்பார்கள்

 3. பின் வருபவற்றில் பொருந்தாது எது
  1. தனுர் வேதம் - மந்திரம்
  2. ஆயுர்வேதம் - மருத்துவம்
  3. காந்தார வேதம் - இசை, நடனம்
  4. சில்ப வேதம் - கட்டடக்கலை

 4. மூன்றாம் புத்த மாநாடு இவரின் காலகட்டத்தில் நடைபெற்றது
  1. பிம்பிசாரர்
  2. கனிஸ்கர்
  3. அஜாதசத்ரு
  4. அசோகர்

 5. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லிம் மன்னர் யார்
  1. கஜினி முகமது
  2. கோரி முகமது
  3. குத்புதீன் ஐபக்
  4. முகமது பின் காசிம்

 6. தீன் இலாகி மதத்தை ஏற்றுக் கொண்ட ஒரே இந்து மன்னர் யார் ?
  1. ராஜா மான் சிங்
  2. ராஜா பீர்பால்
  3. தோடர்மால்
  4. பகவான்தாஸ்

 7. 1932 ல் பூனா ஒப்பந்தத்தில் மகாத்மா காந்தியுடன் ஒப்பந்தம் செய்தவர் யார் ?
  1. இராஜாஜி
  2. இராஜேந்திரபிரசாத்
  3. அம்பேத்கர்
  4. இர்வின் பிரபு

 8. கீழ்கண்டவற்றில் காலமுறை வரிசையில் சரியான விடையை கூறுக ?
  1. தண்டி யாத்திரை, காந்தி-இர்வின் உடன்படிக்கை, வெள்ளையனே வெளியேறு இயக்கம்,லாகூர் காங்கிரஸ்
  2. காந்தி-இர்வின் உடன்படிக்கை, தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம்,லாகூர் காங்கிரஸ்
  3. காந்தி-இர்வின் உடன்படிக்கை, தண்டி யாத்திரை, லாகூர் காங்கிரஸ், வெள்ளையனே வெளியேறு இயக்கம்
  4. லாகூர் காங்கிரஸ் , தண்டி யாத்திரை, காந்தி-இர்வின் உடன்படிக்கை, வெள்ளையனே வெளியேறு இயக்கம்

 9. இந்திய தேசிய படை எங்கு ஆரம்பிக்கப்பட்டது ?
  1. இந்தியா
  2. சீனா
  3. சிங்கப்பூர்
  4. ஜப்பான்

 10. இந்தியாவின் முதல் தமிழ் நாளிதள் எது ?
  1. தினமணி
  2. நவசக்தி
  3. விடுதலை
  4. சுதேசமித்திரன்

 11. ஒரு கலோரி என்பது
  1. 2.9 ஜீல்
  2. 0.29 ஜீல்
  3. 0.418 ஜீல்
  4. 4.18 ஜீல்

 12. மூளைக் காய்ச்சலுக்கு காரணமான உயிரி எது ?
  1. கொசு
  2. நாய்
  3. எலி
  4. பன்றி

 13. கல்லீரலுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்வது எது ?
  1. ஹெபாடிக் சிரை
  2. கொரொனரி தமனி
  3. கொரனரி சிரை
  4. ஹெபாடிக் தமனி

 14. நண்டின் இளம் உயிரி
  1. மைசிஸ்
  2. சிப்ரிஸ்
  3. அலிமா
  4. சோயியா

 15. தேனீ காலனியில் 'ராயல் ஜெல்லி' ஐ உருவாக்கும் தேனீ வகை
  1. டிரோன்கள்
  2. ராணி தேனி
  3. டிரோன்கள் மற்றும் ராணி தேனி இணைந்து
  4. வேலையாட்கள்

 16. மனித விந்தில் காணப்படும் உடற்குரோமோசோம்களின் எண்ணிக்கை
  1. ஒரு ஜோடி
  2. 11
  3. 22
  4. 23

 17. மலேரியா நோய்க்கான மருந்து தரும் தாவரம்
  1. ஃபில்லாந்தஸ் செர்பன்டினா
  2. ராவுல்ஃபியா நெரூரி
  3. டிஜிடாலிஸ் பர்பியூரியா
  4. சின்கோனா அஃப்ஸினாலிஸ்

 18. தொலை நகலியினால் அனுப்பப வேண்டிய அச்சடித்த ஆவணத்தை மின்னலைகளாக மாற்றும் முறை ?
  1. எதிரொளிப்பு
  2. பண்பேற்றம்
  3. ஒளிமாறுபாடு
  4. வரிக்கண்ணோட்டம்

 19. செயற்கை கோள்கள் பயன்படுவது
  1. தொலைக்காட்சி அலைபரப்பல்
  2. கனிம வள கண்டறிதல்
  3. விண்வெளி ஆராய்ச்சி
  4. இவை அனைத்தும்

 20. ஒரு மின் மாற்றியானது
  1. ஆற்றலை மாற்றுகிறது
  2. அதிர்வு எண்களை மாற்றுகிறது
  3. மின் விசையை மாற்றுகின்றது
  4. மின்னழுத்தத்தை மாற்றுகின்றது

 21. வலுவூட்டப்பட்ட இரும்புக் குழாய்களில் பூசப்பட்டிருப்பது
  1. தகரம்
  2. காரீயம்
  3. தாமிரம்
  4. துத்தநாகம்

 22. கீழ்கண்ட எதில் துத்தநாகம் இல்லை
  1. பித்தளை
  2. வெங்கலம்
  3. ஜெர்மன் வெள்ளி
  4. சோல்டர்

 23. குளோரோபில் என்கிற நிறமியில் காணப்படும் தனிமம் எது ?
  1. துத்தநாகம்
  2. இரும்பு
  3. மெக்னிசியம் மற்றும் துத்த நாகம்
  4. மெக்க்னிசியம்

 24. சதுப்பு நிலக் காட்டின் தாவர வகைக்கு உதாரணம்
  1. புளும்பாகோ
  2. வாண்டா
  3. ஹைடிரில்லா
  4. அவினீசியா

 25. இயற்கை முறை வகைப் பட்டியலை வெளியிட்டவர்
  1. டார்வின்
  2. லின்னேயஸ்
  3. முல்லர்
  4. பெந்தம் மற்றும் ஹீக்கர்